16.7.12

தக்ஷிணாயனத்தைக் காணவில்லை.

என்னோட பாட்டி அடிக்கடி சொல்லும் வாக்யம்.

“ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம். அதிலயும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி.”

ஏற்கெனவே ரொம்பத் தயங்கி தயங்கி உள்ளே நுழையக்கூடிய ப்ளாக் இது. அதுலயும் முக்கி முக்கி எழுதின ஒரு அத்யாயம் யார் கண்ணுலயும் மூணு நாளா படவேயில்லை. (டேஷ்போர்டில் வெளியாகவில்லை).

அதுக்கு சிகரமா நேத்தி ராத்திரி உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணாங்கற மாதிரி வாசனும், ஹரணியும் எழுதின பின்னூட்டத்தோட ஒட்டுமொத்தமா அந்த 8வது அத்யாயம் (பவ) க்ளோஸ்.(ப்ளாக்கரின் சதி?)

திருப்பியும் வேதாளம் தன் முயற்சியைக் கைவிடாமல் உங்களையும் விடாமல் மறுபடியும் பதிப்பிக்கிறது தக்ஷிணாயத்தின் அந்த தொலைந்துபோன அத்யாயத்தை.

இந்த புலம்பலுக்குக் கீழே சமர்த்தாக உட்கார்ந்துகொண்டிருக்கும் அந்த 8வது அத்யாயத்தை வாசிக்கத் தவறியவர்கள் வாசிக்கலாம்.அல்லது தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடலாம். 

நீதி: பட்ட காலிலேயே படும்.

இன்னிலேருந்து தக்ஷிணாயனம் பொறக்கறது. நானும் மனசுல ஒரு ப்ரதிக்ஞை எடுத்துண்டிருக்கேன். உத்தராயணம் வர்றதுக்குள்ள -அதாவது அடுத்த ஆறு மாசத்துக்குள்ள-இந்த நாவலை முடிச்சுடணும்னு.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடருங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்...

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

பகிர்வுக்கு நன்றி...

vasan சொன்னது…

திண்டுக்க‌ல் த‌னபால‌னுக்கும் சொர்க்க‌ வாச‌ல் திற‌ந்தாச்சு.
தரிசிப்ப‌வ‌ரும், த‌ரிசிக்க‌ப்படுப‌வ‌ரும் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.
அருமையான, வித்தியாச‌மான இ(து)ரு வேறு ப‌டைப்பாளிக‌ளின்
முத‌ல் ச‌ந்திப்பு வ‌ள‌ர்ந்து சிற‌க்க‌ட்டும்.

Matangi Mawley சொன்னது…

“ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம். அதிலயும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி.”--

அப்பா-பாட்டி சொல்லுவான்னு அப்பா சொன்னதுண்டு!
இப்போலாம் பழமொழி usage ஏ இருக்கறது கிடையாது conversations ல! அந்த "நம்ம ஊர்... நம்ம பாஷ..." thrill கொடுக்கறது, பழமொழி! அப்பா- அம்மா புண்யத்துல ரெண்டு மூணு என் காதுல விழுந்திருக்கு!
இப்டி எங்க generation "why blood -same blood" generation ஆ போச்சே! என்ன பண்ணலாம்!?

anbalagangomathi சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி..

ஞானம் மறைந்திருந்துதான் வேடிக்கைக் காட்டும் என்பார்கள். உங்களின் நாவல் குறிப்பிடத்தக்க இலக்கை உயரத்தை அடையப்போவதற்கான அறிகுறி இது. நான் இதுபோன்று நிகழ்ந்துவிடுமோ என்று அடிக்கடி பயந்துதான் ஒவ்வொருமுறை பேருந்து நாவல் அத்தியாயத்தை முடித்ததும் உடன் அச்சு எடுத்து பத்திரப்படுத்திவிடுவேன்.
தொடருங்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பெற்ற சிறுகதைப்போட்டியில் எனது சிறுகதை முதல் பரிசு 25000 வென்றுள்ளது.

சிதம்பரத்தில் இருந்து இப்போதுதான் வந்தேன். உங்கள் பதிவை மட்டும் பார்த்துவிட்டு உறங்கச் செல்லலாம் என்று.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...