30.8.12

கடவுளுக்கு நன்றி!

அறைக்கு வெளியே ”அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” என்று யந்திர கதியில் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கக்கூடிய அதே வாசகங்களைக் கடவுளின் வடிவாய், குரலாய் டாக்டர்.குரியனின் குழுவினர் சொன்னபோது நான் கரைந்தேன்.

இதற்கு முன்பு என் இரு குழந்தைகளையும் ப்ரசவித்த என் மனைவியின் அருகே இது போன்ற உணர்வுக் குவியலில் இருந்திருக்கிறேன்.

கடவுளின் அருளுக்கும், அவர்களின் ப்ரதிநிதிகளாய்ச் செயல்பட்ட ஒவ்வொரு மருத்துவருக்கும், செவிலியருக்கும், துணையாளர்களுக்கும் நன்றி சொன்னேன்.

உங்கள் அல்லது நம் ஒவ்வொருவரின் ப்ரார்த்தனையையும் செவிமடுத்த ஆண்டவனின் அன்புக்கு நான் சொல்லும் நன்றி உங்கள் ஒவ்வொருவருக்கும்தான்.

தஞ்சாவூர்க்கவிராயர் விரைவில் ICUக்கு மாற்றப்படுவார். அவர் நினைவு திரும்ப இன்றிரவு ஆகலாம். மீண்டும் மயக்கநிலைக்கு ஆட்படுத்தப்பட்டு நாளை முழுவதும் நினைவற்ற நிலையிலேயே இருப்பார்.

நினைவற்ற அந்த நிலை? அது எப்படியிருக்கும்? வலிந்த மயக்க நிலையில் இந்த 59 வருட வாழ்வின் அல்லது முந்தைய பிறவிகளின் சுவடுகள் தெரியக்கூடுமா? தெரியவில்லை.

அவர் நினைவு திரும்புகையில் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்தையும் அவருக்கு நான் தெரிவிப்பேன்.

இன்று மரத்தை விட்டுக் கிளம்பிய பறவைகள் கூடு திரும்புகையில் அவற்றை ரசிக்கும் மனநிலையைக் கொடு இறைவா!என்று என் ப்ரார்த்தனையை முடித்திருந்தேன்.

இன்றைக்கு அந்தப் பறவைகளை, அவற்றின் கூவலை என்னால் எப்போதும் போல் ரசிக்க முடியும்.

20 கருத்துகள்:

Ramani சொன்னது…

நல்ல பிரார்த்தனையும்
நல்லவர்களின் பிரார்த்தனையும்
நல்லவருக்கான பிரார்த்தனையும்
எப்போதும் பலிக்கத்தானே செய்திருக்கிறது
ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்

எல் கே சொன்னது…

கடவுளுக்கு நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆம்..கடவுளுக்கு நன்றி!

நிகழ்காலத்தில் சிவா சொன்னது…

என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன் உங்களுக்கும் சேர்த்து...

G.M Balasubramaniam சொன்னது…

செய்தி கண்டு மகிழ்ச்சி.எதுவும் கடந்து போகும்.நல்லதே நடக்கும் என்பது என் நம்பிக்கை. ஆண்டவனுக்கு நன்றி சொல்வதில் நானும் இணைகிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

பூரண நலம் பெற எனையாளும் ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் குணமடைந்து நலமுடன் வர வேண்டுகிறேன்... நம்பிக்கையுடன் இருப்போம்...

நிலாமகள் சொன்னது…

கடவுளுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வெற்றிகரமாக முடிந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி, ஜி. கடவுளுக்கு நன்றி.

God is Great! ;)))))

ரிஷபன் சொன்னது…

கடவுளுக்கு நிஜமாகவே நன்றி..
அந்தக் குழந்தையின் குரல் மீண்டும் கவிதை சொல்லப் போகிறது எனக்கும் ..

கீதமஞ்சரி சொன்னது…

கவிராயருக்கான அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்தேறியதில் மிகவும் மகிழ்ச்சி. விரைவில் அவர் பூரண நலமடைய பிரார்த்தனைகள். பதிவின் உருக்கம் மனம் நெகிழ்த்துகிறது.

மாலி சொன்னது…

மனநிறைவான செய்தியினை அறிவித்தமைக்கு
நன்றி;

தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி -இந்த நேரத்தில் இறைவனின் கருவிகளாக செயல்பட்ட அனைவருக்கும், எங்கள் நன்றியறிதல்களையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்;

மாதங்கி, மாலி.

ஹரணி சொன்னது…

கடவுளுக்கு நன்றி.

பத்மா சொன்னது…

நன்றி கடவுளே!

ரமணன் சொன்னது…

கடவுள் ஒருபோதும் கைவிடார்.

வாசன் சொன்னது…

நல்ல செய்தி.கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

ராஜகுமாரன் சொன்னது…

கடவுளுக்கும், கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்களுக்கும் நன்றி.

ப.தியாகு சொன்னது…

மனம் நிம்மதி அடைந்தேன்.வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடவுளுக்கு நன்றி....

Anonymous சொன்னது…

என்னதான் அதிநவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டாலும்,மருத்துவமனை வாசம் என்பது மிகுந்த அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.மேலும் எந்த ஒரு சிகிச்சை என்பதும்,மருத்துவ அறிவியல்படி பொதுவானதாகக் கருதப்பட்டாலும், என்னைப் பொருத்தவரை,ஒவ்வொரு மனித உடலும் ஒரு தனியுலகம்.அதிலும் இதய அறுவை சிகிச்சை என்பது, மறுபிறவிதான்.அதை வெற்றிகரமாகக் கடந்திருக்கும் நம் அருமை நண்பர் தஞ்சாவூர்க் கவிராயருக்கு நமது இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.அவர் விரைவில் வீடு திரும்பி,நசிகேதனின் நாட்குறிப்புகள் நாவலைத் தொடரட்டும். நண்பர்கள் செய்துகொண்ட பிரார்த்தனைகளின்,பிரதிநிதியாக,மருத்துவமனை வாசலில் நட்புடன் காத்து நின்ற உங்களுக்கு நன்றி,சுந்தர்ஜி!- நேசமிகு எஸ்.ராஜகுமாரன்.1-9-2012

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...