11.11.12

சுடர் மலரட்டும்.

குப்பை கூளங்கள் நாற்காலிகளில் இருக்க
குப்பைத் தொட்டிகளில் பொக்கிஷங்கள்.


சாக்கடைப் பன்றிகளாய் 
நம் சகோதரர்களின் வாழ்க்கை.


சுரண்டி நிரம்பும் ஒவ்வொரு கஜானாவும்
உருவாக்குகிறது ஒரு புதுப் பிச்சைப் பாத்திரம் . 


இவர்களின் வாழ்விலும் 
ஒரு சிறு அகலாவது ஒளிரும் நாள்தான்  
விழாக்களின் பொருள் சொல்லும்.
  
நாம் குதூகலிக்கும் நேரங்களில்
நம் அருகில் வாடும் 
ஒரு வறிய குடும்பத்தை
நினைவில் வைப்போம்.

கொண்டாட்டங்களை 
அர்த்தம் நிறைந்ததாக மாற்றுவோம்.

தீபாவளி மலரட்டும் எல்லோருக்குமாய் ஒருநாள்  .

10 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

"சுரண்டி நிரம்பும் ஒவ்வொரு கஜானாவும்
ஒரு புதுப் பிச்சைப் பாத்திரத்தை உருவாக்குகிறது..." -- graphic! Esp. with the picture beneath this line, the impact - hit deep.

Happy Deepavali to you too!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் மலரட்டும்...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ஓலை சொன்னது…

Well said.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. ஒவ்வொருவரின் வாழ்வில் ஒளி பிறக்கும் நாளே உண்மையான தீபாவளி!

இரா. விஸ்வநாதன். சொன்னது…

//நாம் குதூகலிக்கும் நேரங்களில் நம் அருகில் இருக்கும்
ஒரு வறுமைக் குடும்பத்தை நினைவில் வைப்போம்//

நல்ல ஒரு கருத்தை தீபாவளி சிந்தனையாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

(பண்டம் + ஈகை = பண்டிகை - வேதாத்திரி மகரிஷி)

பவளசங்கரி (வல்லமை) சொன்னது…

அருமை! அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

விசு (மக்கள் அரங்கம்) சொன்னது…

”Wish you a
HAPPY, COLORFUL AND SWEETEST DEEPAVALI- Sundarji Prakash.”

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் - இந்த சமூக அக்கறைக்கு.

A. துளசி சொன்னது…

இனிய ஆலோசனை. நல்லதே நடக்கும். அந்த இனிய நாள் விரைவில் வர வேண்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

இந்த வாழ்த்துக்களின் பின்னூட்டம் எனக்கு முக்கியமானது.

நன்றி சமூகத்தின் மேலான பரிவுக்கு.

- மாதங்கி மாலி
- திண்டுக்கல் தனபாலன்
- ஓலை
- வெங்கட் நாகராஜ்
- இரா. விஸ்வநாதன்
- பவளசங்கரி (வல்லமை)
- விசு (மக்கள் அரங்கம்)
- எஸ்.வி.வேணுகோபாலன்
- A. துளசி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...