தும்பி வா(மலையாளம்)-சங்கத்தில் பாடாத கவிதை-கும் சும் கும்(ஹிந்தி) என மூன்று மொழிகளிலும் மூன்று ஸ்வரத்தில் அமைக்கப்பட்டு எல்லோரின் உயிரையும் அசைத்த காபி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் வயலினின் மொழியில் இத்தாலியில் இளையராஜா கொடுத்த ஓர் இசைநிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது.
எனக்கென்னவோ மூன்று மொழிப் பாடல்களிலும் மொழி சொன்ன சங்கதிகளை விட வயலினின் தந்திகளால் நிரப்பப்பட்டும், குழலின் வெற்றிடத்தால் வெளியேற்றவும் பட்ட இசை சொன்னது ஆழமானதும் அதிகமானதுமாகத் தோன்றுகிறது.
சிரிக்கும் குழந்தையை ஒருவன் புறக்கணித்துச் சென்று விடமுடியும்.
ஏக்கமுற்று அழும் குழந்தையைக் கடந்து செல்ல இறுகிய மனம் வேண்டும்.
அது என்னிடம் இல்லை.
9 கருத்துகள்:
அற்புதமான பகிர்வு ஜி!
பாடலும்... பின்னணியில் வரும் ராஜாவின் படங்களும் அசத்தல் ராகம்.....
தேடிக்கொடுத்த உங்களுக்கு இந்தாங்க ஒரு ஸ்ட்ராங் பில்ட்டர் காஃபி!! ;-)
அன்பு சுந்தர்ஜி,
சினிமா இசை என்பது ஒலிக்கலவை மட்டும் இல்லை என்பதால், அதற்கு பெரிதான கற்பனைவளம் தேவையில்லை.
வயலின் இசையில் முகங்கள் இல்லை, குரல் இல்லை... எந்தவித நாயகமுன்னிறுத்தலும் இல்லை என்பதால், அது சிறப்பாய் இருக்கிறது... இது எல்லா வாத்திய இசைக்கும் பொருந்தும். வாத்திய இசை ராகங்கள் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாய் இருக்கும்... சாயல் எளிதில் புரிபடும்...
இது காபி ராகம் என்பது போல... அற்புதமான சரணங்கள் தான் இந்த பாடலுக்கு மிகப்பெரிய பலம். வயலினில் ஊறும் எறும்பின் கால்தடங்களில் ஒட்டியிருக்கும் ஸ்வரத் தெறிப்புகள்.
அன்புடன்
ராகவன்
/சிரிக்கும் குழந்தையை (too) ஒருவன் புறக்கணித்துச் சென்று விடமுடியும்.
ஏக்கமுற்று அழும் குழந்தையைக் கடந்து செல்ல இறுகிய மனம் வேண்டும்.
அது என்னிடம் இல்லை./
True
இளையராஜாவின் பொருத்தமான நிழற்படங்கள்,இசையோடு அவரின் பிரமாண்ட வளர்ச்சியையும் தன்னோடு பிணைத்து பாய்கிறது நதியாய்.
சுந்தர்ஜி சார், நான் ஏதோ கொஞ்சம் கவிதை எழுதுவேன், ஒருசில அதுவும் எனக்குப்புரியக்கூடிய கவிதைகளை ரசிப்பதும் உண்டு. பாடல்களும் அது போலவே, நானே இயற்றியதும் உண்டு. பிறர் இயற்றியதில் ஒருசிலவற்றை மிகவும் ரசித்து வியந்ததும் உண்டு. இசையும் அது போலவே ஆனால் நான் இசைத்தது இல்லை. நான் எழுதிய பாடல் (BHEL பற்றிய)ஒன்றை எனது நிர்வாகம் 6 இந்திய மொழிகளிலும், பில்லாங்குழலில் இசை அமைக்கச்செய்து பிரபலப்படுத்து என்னை கெளரவித்ததும் உண்டு. ஆனால் எனக்கு [நான் விரும்பி அடிக்கடிக் குடிக்கும் ஸ்ட்ராங் காஃபியைத் தவிர]என்ன ராகம், என்ன தாளம் போன்ற இசை ஞானம் என்பது துளிகூட கிடையாது. இவற்றிலெல்லாம் நான் ஒரு ஞானசூன்யமாக இருந்து வருவதில் என்னைவிட என் மனைவிக்கு ரொம்பவும் வருத்தம் தான். என்ன செய்ய எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே. ஆனாலும் உங்களின் இந்தப்பதிவு அருமையாக உள்ளதாகவே, உண்மையைச் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு நிச்சயமாக புரிந்துவிடும். நன்றி.
சுந்தர்ஜி....நான் எப்பவும் இசைக்கு ஏங்கும் குழந்தையாகவே இருந்துவிடுகிறேன்.அப்பத்தான் அடிக்கடி இப்படித் தாலாட்டுத் தருவீங்க.இணைத்திருக்கும் படங்கள் பொக்கிஷம் !
காபி கொடுக்கும் புத்துணர்ச்சியே புத்துணர்ச்சிதான்.
குடிக்கற காபியை சொல்லலை.ராகம் காபியைத்தான் சொன்னேன்.
ஆனால் அதை விட மனதை தாக்கும் வரிகள் பதிவின் கடைசி பத்தியில்.
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு! பல சமயங்களில் வார்த்தைகளை விட இசை கொடுக்கும் ஆனந்தம் தான் அதிகம்! இராஜாவின் இசையில் எங்கே குறை சொல்ல முடியும்! பகிர்வுக்கு மிக்க நன்றி.
டும்டும்..டும்டும்...
அருமையாக இருக்கிறது.
எனக்கு கொஞ்சம் தமிழ் உச்சரிப்பின் மீது ஆர்வம் வந்தது வானொலி செய்திகள் மூலம் தான்.
கருத்துரையிடுக