15.6.10

என் வரவேற்பு பானம்



நிராகரிக்கிறேன்
காற்றில் பறித்த மாயக்கனிகளின் ருசியை.
வியர்க்கும் தோல்வியின் சாறாக இருக்கட்டும்
என் வரவேற்பு பானம்.
முட்கிரீடங்களும் அலைக்கழிப்பின் கேடயங்களும்
அலங்கரிக்கட்டும் என் வரவேற்பறையை.
உங்கள் முகத்தைச் சரிவரக் காட்டாத
இந்தக் கண்ணாடியில் முகம் பார்த்தான பின்
இளைப்பாறுங்கள் எந்தச் சாதனையையும்
நிகழ்த்தாத இந்தப் பழையநாற்காலியில்.

7 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

"என்னத்த கிழிச்ச" என்று பல பேர், பல முறை என்னிடம் கேட்டதுண்டு. வேடிக்கையாகவும் கூட. சினிமா படங்களை பார்த்து விட்டு, மரம் நடலாமா, ஒரு குழந்தையை படிக்க வைக்கலாமா.. என்றெல்லாம் பலவாறாக யோசித்திருக்கிறேன். இப்படி யோசித்தோமே என்று வெறுப்பும் அடைந்திருக்கிறேன். அது எதுவும் எனக்கு வேண்டாம். நான் இருக்கிறேன். நான் இந்த பிரபஞ்சந்த்தில் ஜனித்து, ஜீவித்து- பின்பு மடிவேன். இந்த மூன்று மைல் கல்களின் நடுவில் நான் வாழும் வாழ்கை- அதை வாழ்வதே என் சாதனை. இது என் இப்போதைய முடிவு. அதற்கு தகுந்தாற்போல அமைந்துள்ளது தங்களின் இந்தக் கவிதை. ரசித்தேன். அருமை.

Madumitha சொன்னது…

சில சமயம் எல்லாருக்கும் இப்படி
ஒரு யோசனை வரத்தான் செய்கிறது.

கமலேஷ் சொன்னது…

மிகவும் வித்தியாசமான தொடுதல் நண்பரே...அருமையான வெளிப்பாடு...வாழ்த்துக்கள்..

ஹேமா சொன்னது…

நேர்மையான நாற்காலி போலிருக்கு.
அரசியல் களமானால் சிலநேரம் சாதித்திருக்கும் இந்தப் பழைய நாற்காலியும்.

வாழ்வில் ஏதோ ஒன்றைச் சாதித்தபடிதானே நகர்வுகள்.
சோகமில்லை.

விக்னேஷ்வரி சொன்னது…

ஒரு வித விரக்தி உங்கள் வார்த்தைகளில். ஆனால் ஆழமான சொற்களாகத் தெரிகின்றன.

சுந்தர்ஜி சொன்னது…

வெற்றியை விடத் தோல்வியை ரசிப்பவன் நான்-சுயபரிசோதனைக்கும் உதவுவதால்.தவிர வெற்றி பெரிதாய் எதையும் விட்டுச் செல்வதில்லை.
உங்கள் ஆழ்ந்த ரசனைக்கு நன்றி விக்னேஷ்வரி.

சைக்கிள் சொன்னது…

யதார்த்தக் கேடயங்கள் நிச்சயம் வேண்டும் அரணாக. ஆனால் கணப் பொழுதேனும் அகம் மலரும் தருணங்கள் இல்லாததா இந்த வாழ்க்கை? தேவையற்ற கழிவிரக்கம் ஏன் இந்த கவிதையில்? முகம் பார்ப்பவர்கள் , உட்காருபவர்கள் அல்லவா சொல்ல வேண்டும் நாற்காலி பற்றி?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...