4.6.10

உரையாடல்



கோப்பைக்கு உள்ளிருக்கும் திரவமாயும்
கோப்பையின் விளிம்பு கடந்து
வழியும் திரவமாயும்
இருக்கிறது உன் அமைதியும்
என் பேச்சும்.

II 
அமைதியாய் இருக்கும்போது
பேசுவது பற்றியும்
பேசும்போது அமைதி பற்றியும்
நினைப்பது வழக்கமாகிவிட்டது.

III 
இறக்கும் போது
இறுதியாக என்ன பேசினான்?
என்ற ஆர்வம்
பிறந்த பின் முதலாவதாக
என்ன பேசினான்?
என்பதில் இருப்பதில்லை.

IV 
நினைவுக்கு வருகிறது
அவன் பேசுகையில்
அடைப்பு நீக்கப்பட்ட நீர்த்தொட்டியும்-
பேசாதிருக்கையில்
உருவாக்கப்படாத மண்பானையும்.

V
ஒரு குழாயின் கீழ்
இடப்பட்ட பாத்திரத்தில்
நீர் நிரம்புகிறது என்கிறேன் நான்.
வெற்றிடம் வெளியேறுகிறது
என்கிறான் அவன்.

13 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

படமும் கவிதைகளும் கொள்ளை கொண்டு விட்டன மனதை.. நீங்கள் ரசிகர்!

ஹேமா சொன்னது…

கடைசி இரண்டு பந்திகளும் நிரம்புதலா வெறுமையா என்றில்லாமல்.

சுந்தர்ஜி சொன்னது…

தாமதத்துக்கு ஒரு ஸாரி.

நன்றி.
-ரிஷபன்.
-ஹேமா.

Madumitha சொன்னது…

சுகமான உரையாடல்.
அடைப்பு நீக்கப் பட்டது போல்
பெருகுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா.

Anonymous சொன்னது…

மௌனமும் பேச்சும் வலியால் நனைத்தது.அருமை ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

வழியும் மௌனம் உறைந்தது மனதில்.அருமைங்க ஸார்.
-கலைவாணி

Anonymous சொன்னது…

கோப்பையின் விளிம்பைக் கடந்த திரவம் புத்துணர்ச்சி பானம்.பருகப்பட்டது சுந்தர்ஜி ஸார்.
-ப.தியாகு

Anonymous சொன்னது…

மௌனத்தையும் பேச்சையும் பருகினேன்.சுவை அருமை.
-திருமதி.மீனாதேவி.

Anonymous சொன்னது…

வாவ்!வெகு அருமை.
-நாணற்காடன்

Anonymous சொன்னது…

நகர்கிற நதிக்கும் பொங்கிப் ப்ரவகிக்கிற அருவிக்கும் அந்த மௌனத்தையும் பேச்சையும் வெவ்வேறு அழகுகளாய் ரசிக்கக் கூடும்தான் நமக்கு.
-உஷா.

பா.தியாகு சொன்னது…

கோப்பையின் உள்ளிருக்கும் திரவம் சிறு தூறல். விளிம்பைக்கடந்து வழியும் திரவம் அடைமழை.கவிதை மயக்குகிறது சுந்தர்ஜி.

வடுகப்பட்டி சங்கரபாண்டியன் சொன்னது…

ஆழத்தின் அடர்த்தியாய் மௌனமும், அலையின் நுரையாய் வழியும் வார்த்தையும். கவிதை மிகவும் அருமை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...