17.6.10

குறி



ஒரு சொல் அல்லது சைகை 
துவக்குகிறது சிறகசைப்பை.
ஒரு நிழல் அல்லது விசை 
அசைக்கிறது பாய்மரத்தை.
ஒரு கனா அல்லது காற்று 
தள்ளிச் செல்கிறது
திறக்கப்படாத கதவு நோக்கி.
ஒரு மாயம் அல்லது நீளும் கை
அமர்த்துகிறது பீடத்தில்.
ஒரு சரித்திரம் அல்லது புனைவு
நிறுவுகிறது சிகரத்தின் சிலையை.
வேறொரு சொல் அல்லது சைகை
முறிக்கிறது வேறொரு சிறகசைப்பை.

7 கருத்துகள்:

விக்னேஷ்வரி சொன்னது…

4 முறை வாசிச்சேன். ரொம்ப நல்லா இருக்குங்க.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...ஒன்றை இயங்க வைக்க இன்னொரு இயக்கம் தேவைப்படுகிறது.அதேபோல் அழிக்கவும்.

வாழ்வும்கூட...வாழ்விலும் கூட!

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி விக்னேஷ்வரி.

நீங்களும் நானும் ஒன்றைத்தான் சொல்கிறோம் ஹேமா.

பா.ராஜாராம் சொன்னது…

மிக அருமை!

சுந்தர்ஜி,

திரட்டிகளில் தளத்தை இணைக்கவில்லையா?

Anonymous சொன்னது…

சிறகசைப்பின் படபடப்பில் உச்சம் தொட்டது கவிதை.அழகு ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

இந்த வரிகள் உணர்த்துகிறது நிகழ்வை அல்லது நிகழப்போவதை.சொல்லாடல் அருமை.
-ஸ்ரீமதி.

Anonymous சொன்னது…

கூண்டில் அடைக்கும் அதே கதவுதானே விடுதலைக்கும் வாசலாகிறது. துவக்குகிற சிறகசைப்பும் முறிகிற சிறகசைப்பும் அப்படித்தானோ? ஆக்கத்திற்கும் அழிவிற்கும் வேறு வேறு கடவுள்களை உருவகித்த புனைவின் வரலாற்றை நினைத்துக் கொண்டேன்.
-உஷா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...