2.6.10

மறுநாள்



வெடித்துச் சிதறுகிறேன் பூக்களும் புகையுமாய்
இறுதியாக உனைப் பிரியும்போது.
தவிர்த்திருந்திருக்கலாம்
நேற்றின் விவாதத்தையும் உனை வென்ற களிப்பையும்.
சொல்லி இருந்திருக்கலாம்
சொல்லாது வைத்திருந்த இத்தனை நாள் ரகசியத்தை.
கற்றிருந்திருக்கலாம்
உனக்காய்க் கலங்கும் ஒரு கூட்டத்தை வென்ற உன் சாகசத்தை.
வாழ்ந்து பழகியிருக்கலாம்
இருந்திருக்கும்போதே இல்லாதிருக்கும் நாளின் கசப்பை.
ஏனிந்த வாழ்க்கையெனத் தொடங்குகிறேன்
நீயில்லா என் அடுத்த நாளை.

4 கருத்துகள்:

பத்மா சொன்னது…

எனக்கு பிடிக்கல....
நானே நிறைய இப்படி எழுதிருக்கேன் .
இப்போ தோணுது எழுதியிருக்கக்கூடாதுன்னு .
கவிதை அழகு .ஆனா எனக்கென்னவோ நெருப்புன்னு கூட சொல்ல வேணாம்னு தோணுது ...

ஹேமா சொன்னது…

தொடங்குகிறேன்...தூசுபடியா அடுத்தநாள் நினைவுகளோடு !

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி..

உங்கள் வலைத்தளத்தைப் பார்த்து வடிவமைப்பைக் கண்டு பிரமித்தேன். இந்தக் கவிதை மனதை நெகிழ வைக்கிறது. தொடர்ந்து வாசிப்பேன். எழுதுவேன். உறரணி.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி ஹரணி.85ல் ப்ரகாஷ் சூழ இருந்த நாட்கள் நிழல் போல விரிகிறது.அடிக்கடி வாருங்கள் ஹரணி சந்திப்போம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...