படுமுக்கியமான ஒன்றுக்கும் உதவாத ராஜினாமாக் கடிதத்தை
எழுதி நிமிர்கையில் ஒன்று.
உணர்ச்சி கொந்தளிக்க உரையாடும் தொலைபேசியுடன் ஒன்று.
பொறாமை வளர்த்த நடிகனின்
மேற்கத்திய மோஸ்தரில் தலை பொருத்திய ஒன்று.
சங்கநாதம் முழங்க போர்ப்பரணி பாடி
கவச குண்டலத்துடன் புறநானூற்றுப் புரவியில்
தாவிப் பாய்கையில் ஒன்று.
சிங்கம் போல் வாய்பிளந்து கண் மறைக்கும் கறுத்த ஆடியுடன்
உதட்டுச்சாய கர்ஜனையுடன் பச்சை மஞ்சள் சிகப்பு நீலம் என ஒன்று.
ஆக்ரோஷமாய் ஒற்றைக்கொற்றை சவால் விட்டு
ஒலிபெருக்கியைக் கடித்து விழுங்குகையில் ஒன்று.
இடுப்பின் புறத்தில் கரங்களும் தோளில் சரியும் துண்டுடனும்
90 பாகையில் திரும்புகையில் ஒன்று.
என்ன எழுதுவது என்றறியாது பேனா முட்டுக்கொடுத்து
மஹா சிந்தனையுடன் ஒன்று.
நல்ல வேளை. தப்பித்தோம்.
தொண்டை வரளும் குறட்டையுடன் நீ படுத்துறங்குகையில்
எடுக்க முடிந்ததில்லை எந்த நிழற்படமும்.
7 கருத்துகள்:
மிக அருமையாக இருக்கிறது நண்பரே...
background தினம் தினம் மாறி கிட்டே இருக்கு..
ரொம்ப நல்லாவே இருக்கு
வாழ்த்துக்கள்..தொடருங்கள்....
அட...இப்பதான் கவனிக்கிறேன்.. பக்கத்துல என்னோட கவிதை ஒன்னு இருக்கு...
உங்கள மாதிரி பெரியவங்க கிட்ட இருந்து இப்படி பட்ட அங்கீகாரம் கிடைப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது கவிஞரே...நன்றி.
நல்லாருக்கு சுந்தர்ஜி! :-)
'ஒன்றுமில்லாதது' பொக்கிஷத்தில் சேர்ந்துட்டாங்களா? நல்லாருக்கட்டும். :-)
நன்றி சுந்தர்ஜி!
நன்றி கமலேஷ்.
நன்றி பா.ரா.
சுந்தர்ஜி...குறட்டை விடேக்குள்ள போட்டோ எடுத்தால் வடிவாயிருக்கமாட்டீங்கள் எண்டு விட்டிருப்பினம்.பரவாயில்ல.
மற்றப் போட்டோக்கள் நிறைய இருக்கெல்லோ !
பக்கத்தில் தேர்ந்தெடுத்த கவிஞர்களின் கவிதைகள் அற்புதம்.
நன்றி ஹேமா.ஒங்கள் ஊர்ல எப்பிடியோ எங்கள் ஊர்ல காதுகுத்து-மஞ்சள் நீர்-பிறந்தநாள்-பதவியேற்பு-சாவு-அரசியல் கூட்டம்-ஏதோ வெற்றி-என்று எல்லாவற்றிற்கும் ஃஃப்ளெக்ஸ் விளம்பரம்தான்.விதவிதமான பாவங்களில். அந்த எரிச்ச்ல்.நீங்கள் சொன்னது போல் என் ஃபோட்டோக்கள் ரொம்பவும் கம்மி.
ஒரு சமயம் இப்படியெலாம் எடுக்கணும் என்ற ஆசை எனக்கும் இருந்தது தான் .இப்போ நினைத்தால் ஐயோ சாமி ஆளை விடுங்க ...
எடுத்ததை பொதுவில் வைத்தால் பல பேருக்கு எரிச்சல் தான் .
கருத்துரையிடுக