11.2.11

பிம்பம்


ஒரு துறவி போகுமிடங்களுக்கெல்லாம் தன்னோடு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூடவே எடுத்துப் போனார்.

மற்றொரு துறவிக்கு இந்தத் துறவியின் செயல் பொருத்தமற்றதாக இருந்தது. "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றி கவலைப் படவேண்டும்? அகப்பார்வைதானே துறவிகளின் அழகு. எந்த நேரமும் ஒரு துறவி தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே தோய்ந்திருந்தால் எப்படி அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அடைவது?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

துறவியின் செயலில் இருந்த பழுதைச் சுட்டிக்காட்டித் தெளிவுபடுத்த விரும்பிய இரண்டாவது துறவி முதல்த் துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் கண்ணாடியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு முதல் துறவி தன்னுடைய கண்ணாடியை எடுத்து இரண்டாவது துறவியின் முகத்திற்கு நேராகக் காட்டினார்.

"எனக்கு ஏதாவது குழப்பங்கள் வரும் போது இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அது என்னுடைய பிரச்சனைக்குக் காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் இரண்டாம் துறவி ஞானம் பெற்றவரானார்.

இது தன்னைத் தானே காண்பதற்கான கதை. தன்னைக் கண்டு கொண்ட ஒரு துறவியின் கதை. எந்தப் பிரச்சனையும் குழப்பமுமே தன்னிலிருந்துதான் துவங்கி தன்னிலேயே முடிகிறதென்பதை அழகாய்ச் சொன்ன தத்துவச் சரடுடன் எளிமையாய் இந்தக் கதை.

கண்ணாடியை
நீ
பார்த்தால்
அது துவக்கம்.
கண்ணாடி
உன்னைப்
பார்க்குமானால்
அது உன் முதிர்ச்சி

என்கிற வரிகளோடு முடிக்க நினைக்கிறேன்.

33 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

பிரமாதமாக முடித்திருக்கிறீர்கள் சுந்தர்ஜி. அருமை.

RVS சொன்னது…

ஏ கிளாஸ் என்டிங்.

எனக்குள் இருக்கும் என்னை நான் அறியவேண்டும். சரியா பாஸ்! ;-)

Balaji saravana சொன்னது…

முடிவில் ஒரு ஜென் தத்துவத்தை மிக அழகாக சொல்லிட்டீங்க தலைவரே!

Ramani சொன்னது…

.வழக்கம்போல மிகச் சிறந்த பதிவு.
வேறேன்ன சொல்ல..
இடைவெளி விடாது பதிவுகள் தொடர வேண்டி...
வாழ்த்துக்களுடன்...

RVS சொன்னது…

இன்னொரு முறை பார்த்தேன். படித்தேன்.. அந்தப் படம் அழகு.. ;-)

சிவகுமாரன் சொன்னது…

அருமையான தத்துவ வரிகளோடு முடித்திருக்கிறீர்கள்.

கண்ணாடி வழியாக நாம் பார்த்தால் ?

Nagasubramanian சொன்னது…

nice finishing touch

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

தங்கள் வரிகளைப் சரியாகப் படிக்க விடாமல், கண்ணாடியில் என் உருவம் சரியாகத் தெரியாமல், இந்தப் பறவைகள் (காக்க்காவோ?) படுத்துகின்றன. ரமணா எங்கே? கூப்பிடுங்கள். காக்காய்ப் பிடிக்க -

இல்லை இல்லை துரத்தி விட.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிரமாதமான கதை மற்றும் முடிவு. நமக்குள் நம்மையே தேடும் வித்தை அறிந்தால் நன்றாக இருக்கும். வை.கோ. அவர்கள் சொல்வது போல சுதந்திரமாய் பறக்கும் பறவைகளை இன்னும் மேலே பறக்க அனுமதித்தால் நன்றாக இருக்கும். வரிகளுக்கு நடுவில் வந்து விட்டது, பறவைகளுக்கும் உங்கள் இடுகைகளைப் படிக்க ஆவல் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

Gowripriya சொன்னது…

அருமையாக இருக்கிறது பதிவு..
பறவைகள் எழுத்துகளை மறைக்கின்றன..

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

நல்ல பகிர்வு இது... தன்னைப் பார்ப்பது எத்தனை பேருக்கு வாய்க்கிறது சொல்லுங்கள்? அருமை...

தினமும் ஒன்று என்று தொடர்ந்து பூக்கிறது... வண்ணத்திலும், மணத்திலும் எப்போதும் ஆச்சரியம் பூசிக் கொண்டு.

அன்புடன்
ராகவன்

புபேஷ் சொன்னது…

good good....congrats..

பா.ராஜாராம் சொன்னது…

good! :-)

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

காக்கைகளைத் துரத்தி விட்ட ரமணாவுக்கு என் நன்றிகள்!

என் முகம் இப்போது கண்ணாடியில் நன்றாகத் தெரிகிறது.

அதாவது என் முகம் நன்றாக இல்லை என்பது நன்றாகவே புரிந்து விட்டது.

நிலாமகள் சொன்னது…

அரவிந்த், ரமணாவிற்கு மட்டுமல்ல... எங்களுக்கும் அப்போதைக்கப்போது இப்படியான கதைகள் உங்களிடமிருந்து வேண்டியிருக்கிறது ஜி!

Matangi Mawley சொன்னது…

Fantastic!

Actually this post reminds me of a Kabir Doha I had read way back... The lines go like this--

"Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye
Jo Munn Khoja Apnaa, To Mujhse Bura Naa Koye"

It means-

"I wandered in search of the bad, But Nay- I found none
I searched deep down into my mind, and found there wasn't a soul worse than 'I' "...

This is a brilliant story.. and a concept! :)

thanks for sharing...

santhanakrishnan சொன்னது…

நம் அழகைக் காட்டும் கண்ணாடி போல்
நம் அசிங்கத்தைக் காட்டும் கண்ணாடியை எவராவது கண்டுபிடித்தால்
எவ்வளவு வசதியாக இருக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ஆர்.வி.எஸ்.

ரெண்டாவது தடவையும் வந்து படம் பார்த்துப் பொருள் சொன்னதில் சந்தோஷம்.

சுந்தர்ஜி சொன்னது…

பெருமை ஸென் கதைக்குத்தானே பாலாஜி.

சுந்தர்ஜி சொன்னது…

இதையே சொல்லுங்க ரமணி சார் போதும்.

சுந்தர்ஜி சொன்னது…

நம்மை அறிவோம்.நன்றி சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

தத்துவத் தொடல்தான் எதையுமே அர்த்தப்படுத்துகிறது நாக்ஸ். நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

பறவைகளைத் தொந்தரவு செய்ய மனமின்றி நான் வீட்டையே மாற்றிவிட்டேன் கோபு சார்.

இப்ப படிக்க முடியும்னு நம்பறென்.

கூப்பிட்டா ரமணா இந்தோ அந்தோன்னு பாவ்லா காட்றதோட சரி.நம்மள மாதிரில்லாம் இல்லை கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி வெங்கட்.

பறவைகளைத் துரத்தாமல் வீட்டை மாற்றிவிட்டேன்.இப்போ சரியாகிவிட்டது டெம்ப்ளேட்.

சுந்தர்ஜி சொன்னது…

ஹப்பா!பறவைகள் பறந்துவிட்டன கௌரிப்ரியா.

இடுகையை ரசித்தமைக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராகவன்.

தினமும் பூக்கிறதுதான்.

இலையுதிர்காலத்துக்கு முன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றெனச் சிரித்தால் மனம் கொள்ளை போகுதே பா.ரா.

சுந்தர்ஜி சொன்னது…

கண்ணாடி சரியில்லையாயிருக்கும்.

புதுசா ரசம் பூசி வேற மாட்டிடறேன் கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

சொல்லிட்டா போச்சு நிலாமகள்.-எனக்குமாய்ச் சேர்த்து.

சுந்தர்ஜி சொன்னது…

கபீரின் தோஹாவை நினைவுபடுத்தி இடுகையின் எல்லையை விரிவுபடுத்தி விஷயத்தை அழகாக்கிவிட்டீர்கள்.

நிறைய வாசித்திருக்கிறீர்கள்.

நீங்களெல்லாம் தான் நம் தேசத்தின் நம்பிக்கை நக்ஷத்திரங்கள் மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

அது கண்ணாடியில் இல்லை மது.

பார்க்கும் பார்வையில்தானென்று உங்களுக்குத் தெரியாதா?

சுந்தர்ஜி சொன்னது…

மன்னியுங்கள் புபேஷ்.

கவனக்குறைவு.நன்றி கூற விடுபட்டுவிட்டது.

நன்றி புபேஷ். அடிக்கடி வாருங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...