23.2.11

குமிழி


I
மரணம் குறித்துக்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
முற்றுப் புள்ளியின்
மீது அமர்கிறது
கொசு.
II
கல்லுக்குள் சிற்பம்.
விதையில் வனம்.
துளிக்குள் கடல்.
சுவடுகளில் யாத்திரை.
துவக்கத்தில் முடிவு.
ஒன்றில் எல்லாம்.
III
பிறப்பு. மழலை.
மையல்.கவிதை.
இசை.கோபம்.
புணர்ச்சி.பிரிவு.
விருந்து.வியாதி.
இளமை.பயணம்.
முதுமை.தனிமை.
மரணம்.
எல்லாம்
பொழுதுகளில்.
வாழ்வு என்றென்றும்.

28 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

மரணம் ஒரு முற்றுப்புள்ளி எனத் தெரிந்தும் ஜனனம் நிகழாமல் இல்லை.வெட்டவெட்ட தழைக்கும் செடிகள் போலமக்கள் பல்கிப் பெருக காரணம் ஒன்றுக்குள் ஒன்று இருப்பதாலோ என்னவோ. சபாஷ் சுந்தர்ஜி.

komu சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

வினோ சொன்னது…

அய்யா, நானும் குமிழியை வைத்து ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

vasan சொன்னது…

ப‌னிம‌லையும், எரிம‌லையும்
பின்னிர‌வில் பிணைந்துதித்த‌
விழித்திரை கிழிக்கும் வைர‌வ‌ரிக‌ள்.
(Contrast but coupled and combined)
ம‌ர‌ணம் பற்றி கண்ணோர‌க் கசிவு
க‌விதையில் ந‌னையும் முன்பே
நானும் ஏன் உங்க‌ளின் பிர‌காஷை
நினைக்கிறீர்க‌ள் என உணர்கிறேன்!?

Ramani சொன்னது…

இளமை முதுமை
பயணம் தனிமை
இளமைப் பயணம்
முதுமைத் தனிமை
ஆண்பெண்
பிறப்பு இறப்பு என
முரண்கள் இணைவதுதான்
முழுமை என்பதுவோ ?
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா சொன்னது…

/எல்லாம்
பொழுதுகளில்.
வாழ்வு என்றென்றும்/
அதனால் வாழ்வோம்!

Matangi Mawley சொன்னது…

there's always a strange kind of dark 'glamour' about things that are left unfinished. lack of a finale, always leaves a human mind thinking about possibilities. of course, the argument remains- nothing is 'finished'. yet- it differs in what one 'believes' as 'finished'. may be it's man's savour for the 'unfinished'- that which man considers 'art' seem 'unfinished'- or left to imagination. like most romance tales. 'death' too is not the 'end'. may be that's what is most captivating about it...

though i liked all three- the first one, i found- possessed the most 'glamour' content of the above mentioned, kind. the mosquito may either live- which would turn the poetry into an irony. or it may adopt a more 'glamourous' life, which 'could' make the poetry an eulogy(?) - of one of its kind! the verse- still continues to make me buzz along with the mosquito...

Nagasubramanian சொன்னது…

nice

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மரணம் குறித்துக்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
முற்றுப் புள்ளியின்
மீது அமர்கிறது
கொசு.//

அமர்ந்த அந்தக் கொசுவை அடித்தால் கொசுவுக்கு முற்றுப்புள்ளியான மரணமும், கவிதைக்கு மறுபிறவி போல ஒரு கமாவும் கிடைக்குமோ !

மோகன்ஜி சொன்னது…

மரணம் கூட ஒரு கவிதையே. படித்தோருக்கு மிஞ்சிய பரவசம்போல்,
சேர்ந்தார்க்கு எஞ்சும் வெறும் நினைவுகள்.சில கவிதைகளும்,சில மரணங்களும் நம்மை பாதிக்கின்றன. மரணம் ஒரு கமா தான். முற்றுப் புள்ளி அல்ல.மீண்டும் வாழ்க்கை தன்னையே எழுதிக் கொண்டு விடுகிறது..

rajasundararajan சொன்னது…

//முற்றுப் புள்ளியின்
மீது அமர்கிறது
கொசு.//

குருதி குடித்து வாழும் ஒரு சிறூஉ உயிரை இங்கே அமர்த்தியமை அருமை.

//ஒன்றில் எல்லாம்// என்பதே எனக்கும் விளங்குகிறது. 'எல்லாவற்றிலும் ஒன்று' என்பது புளிக்குழம்புக்குள் கிடக்கும் கிழங்கு, காய், அகப்பையும் புளிப்பது போல ஒரு வழிநிலை உண்மையாகவே புரிகிறது.

//எல்லாம் பொழுதுகளில்.
வாழ்வு என்றென்றும்.//

உண்மைதான். இது 'ஈஸ்வர்' என்பதையும் 'எல்லாம் பொழுதுகளில்' அடக்கி, 'வாழ்வு (the eternal which never originates) என்றென்றும்' என்ற புத்த தர்சனத்துக்கு நிகரானது.

முந்தைய இடுகையான 'காளான்' கூட இப்போதுதான் வாசிக்க வாயத்தது. அத்தனையும் அருமை! 'தர்சனக் கவிஞர்'ஆகக் கண்டு விண்டு தருகிறீர்கள். வாழ்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கல்லுக்குள் சிற்பம்.
விதையில் வனம்.
துளிக்குள் கடல்.
சுவடுகளில் யாத்திரை.
துவக்கத்தில் முடிவு.
ஒன்றில் எல்லாம்.//
ஒளிந்திருக்கும் உழைப்பு.....

சுந்தர்ஜி சொன்னது…

சீக்கிரம் உடைங்க வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

வார்த்தைகளுக்கு நன்றி கோமு.

சுந்தர்ஜி சொன்னது…

இலைகள் உதிர்ந்தபடியும் துளிர்த்தபடியும்தான் இருக்கின்றன கிளையேயறியாமல்.

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களையும் உணர்கிறேன் வாசன் உங்கள் வார்த்தைகளில்.

நன்றி வாசன்.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்வு என்றென்றும் வாழ்வதற்கே.

நன்றி அருணா.

சுந்தர்ஜி சொன்னது…

சரியான புரிதல் ரமணி சார்.

முரண்களால்தான் இடைவெளி நிரம்புகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ரசனையைப் போல.

நன்றி வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நாக்ஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

முடிவற்றதன் மீதான உங்கள் பார்வை மேலும் மேலும் எழுத நிறையக் கோணங்களைத் தருகிறது மாதங்கி.

முடிவற்ற வாழ்வை எழுதி முடிவதில்லயோ?

சுந்தர்ஜி சொன்னது…

உங்களுக்குள் ஒரு குழந்தையைக் காண்கிறேன் கோபு சார்.

இது அபூர்வமானது.

சுந்தர்ஜி சொன்னது…

நிச்சயமாக.

ஆனாலும் வாழ்வையும் வீழ்வையும் சரியாகப் புரிந்து வாழும் கண்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.

இல்லையா மோஹன்ஜி?

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வார்த்தைகள் என்னை முன்னெடுத்துச் செல்கின்றன ராஜு அண்ணா.(இப்படித்தான் இனிக் கூப்பிடுவேன்)

//'எல்லாவற்றிலும் ஒன்று' என்பது புளிக்குழம்புக்குள் கிடக்கும் கிழங்கு, காய், அகப்பையும் புளிப்பது போல ஒரு வழிநிலை உண்மையாகவே புரிகிறது.//

எத்தனை அருமை இந்த உவமை?

நான் பாக்யசாலி.நன்றி ராஜு அண்ணா.

சுந்தர்ஜி சொன்னது…

இது இன்னொரு கோணம் ராஜராஜேஸ்வரி.

இதையும் ரசிக்க வைக்கிறது உங்கள் ரசனை.

பத்மா சொன்னது…

எத்தனை மிஸ் பண்ணிருக்கேன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது ...
well as u put well ...missing is also part of life ....

இருப்பதில் இல்லாததை காணுவது நிறை மனமோ?
கல்லுக்குள் சிற்பம்...

சுந்தர்ஜி சொன்னது…

வாங்க பத்மா.

ரொம்ப பிஸின்னு புரிஞ்சுக்கிட்டேன்.

நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன் பின்னூட்டங்களில்.

கரெக்ட்.இருப்பதில் இல்லாததைக் காண்பதுதான் தரிசனம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...