ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு மடாலயத்துக்கு ஸென் பௌத்தம் பற்றி அறிந்துகொள்ள வந்தார்.ஒரு அறையில் இருக்கையளிக்கப்பட்டு சிறிது நேரம் காத்திருந்தார். அவருக்கேயான மிச்சமிருக்கும் ஆணவமும் அவருடன் காத்திருந்தது கேள்விகளுடன்.
திரை விலகியது.மூத்த துறவி வெளியே வந்தார். வணக்கம் தெரிவித்தார். எழுந்து வணங்கிய பேராசிரியரை அமரச் சொல்லி எதிரில் அமர்ந்தார் துறவி.பேராசிரியரின் வருகைக்கான காரணத்தைத் துறவி கேட்டார். ஸென் பௌத்தம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக பேராசிரியர் சொன்னார்.
உள்ளிருந்த உதவியாளரை அழைத்து தேநீர் கொண்டு வரச் சொன்னார். தேநீர் வந்தது. ஒரு கோப்பையில் தேநீர் ஊற்றினார். மெல்ல நிரம்பியது கோப்பை.
கோப்பை நிரம்பிய பின்னும் துறவி ஊற்றுவதை நிறுத்தவில்லை. வழிந்தோடத் துவங்கியது தேநீர். பார்த்துக்கொண்டே இருந்த பேராசிரியரால் பொறுக்கமுடியவில்லை. ”நிறுத்துங்கள். கோப்பை அதற்கு மேலும் கொள்ளாது” என்றார்.
சிரித்த துறவி “இந்தக் கோப்பையைப் போல உங்களுக்குள்ளும் ஏராளமான அபிப்ராயங்களும் யூகங்களும் நிரம்பியிருக்கின்றன. ஏற்கெனவே நிரம்பிய கோப்பையில் எப்படி மேலும் தேநீரை ஊற்றுவேன் நான்? என்றார்.
பேராசிரியருக்கு மற்றும் ஒரு திரை விலகியது.
எல்லாக் கற்பிதங்களுமே நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் மேலும் நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளவும்தான். அடுத்த தளத்துக்கு நாம் செல்லும்போது ஏற்கெனவே பெற்றவை துணையாய் வரவேண்டுமே தவிர சுமையாய் வரக்கூடாது.
ஆனால் நண்பர்களே! பெரும்பாலான இடங்களில் கல்வி அல்லது ஞானம் சுமையாய் நம்மை அழுத்தி பேரானந்த நிலையை அடையவிடாது நுழைவாயிலிலேயே நிறுத்திவிடுகிறது.
நம் கோப்பையை
சகல திரவியங்களும்
நிரம்பும் வகையில்
வைத்திருப்போம்.
நிரப்பப்பட்டவை
பருகப்பட்ட பின்
கோப்பை மறுபடியும்
காலியாகவே இருக்கட்டும்
மற்றொரு திரவியம்
நிரப்பப்பட.
29 கருத்துகள்:
This story seems like a continuation to the earlier post to me! :)
identifying oneself, now you are out to get ready for a re-modeling of yourself! becoming a child once again, ready to accept the lessons that the life teaches...
And yet- here we are... leaving behind nothing. Keeping everything down in there. unable to empty ourselves...
Reminds me once again of a verse-
"angam galitam palitam mundam
dashanavihiinam jatam tundam
vriddho yaati grihiitvaa dandam
tadapi na mujncatyaashaapindam"...
Brilliant, sir!
nice one..
கதையும் அதைத் தொடர்ந்த விளக்கமும்
முத்தாய்ப்பாக கவிதையும் அருமை
சிறந்ததைத் தரவேண்டும் என
தாங்கள் முயல்வது ஒவ்வொரு பதிவிலும்
தெளிவாகத் தெரிகிறது.நன்றி.
தொடர வாழ்த்துக்கள்
மாதங்கி இங்கே சொன்ன பாடல் ஆதிசங்கரரின் "பஜகோவிந்தம்" பாடலின் வரிகள்.
அது சொல்லும் பொருள்:
உடல் சோர்வுற்று-முடி நரைத்து-பற்களெல்லாம் கொட்டி-கையில் தடியின்றி நடக்கமுடியாத வயோதிகனான போதும்-வாழ்வின் மீதான ஆசை விட்டகலுவதில்லை.
சரிதானே மாதங்கி?
அன்பு சுந்தர்ஜி,
இலையில் நிலை பெற ஜலமது தவிக்கும்...
பஜகோவிந்தம் எனக்கு இரண்டு காரணங்களுக்காக பிடித்தது... முதல் காரணம் நான் பஜகோவிந்தம் கேட்டது ஏசுதாஸின் குரலில்... அப்புறம் கேட்ட எந்த குரலிலும் எனக்கு பஜகோவிந்தம் ஒட்டவில்லை. அதற்கப்புறம் அது சுமக்கும் எளிய அபாரமான கருத்துக்களுக்காக...
நிரம்பிய கோப்பையில் மேலும் ஊற்ற முடியாது தான், ஆனால், நிரம்பிய கோப்பைக்குள்ளிருக்கும் திரவத்தை அல்லது திராவகத்தை... டைல்யூட் செய்ய முடியும்... ஒரு கட்டத்திற்கு மேல்... அதை முழுமையாய் மாற்றவும் வேண்டாம். ஆனால் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் தெளிந்தாலே சிலாக்கியம் தானே சுந்தர்ஜி.
அப்புறம்... மாதங்கி, சுந்தர்ஜி ஒருமுறை சொல்லிவிட்டதில் இருந்து தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டார்... தமிழில் எழுதுவது இன்னும் சிறப்பாக இருந்தது எனக்குப் புரிவதால்.
அன்புடன்
ராகவன்
என் மண்டையாகியக் கோப்பையை இப்போதே சுத்தமாகக் காலி செய்ய ஆரம்பித்து விட்டேன், தொடர்ந்து தினமும் நிரப்பபடும் உங்கள் பதிவாகிய திரவம் நிரம்பி வழியாதிருக்க !
ஆனால் சுந்தர்ஜி ஏற்கனவே சொல்லியுள்ள மிக நல்ல விஷயங்களை மட்டும் தனியாக மனதென்னும் கோப்பையில் பதுக்கி ஒரு ஓரமாக பத்திரமாக வைத்து விட்டேன்.
ஏசுதாஸ்-எம்.எஸ் ரெண்டும்தான் எனக்கும் உகந்தது ராகவன்.
//நிரம்பிய கோப்பையில் மேலும் ஊற்ற முடியாது தான், ஆனால், நிரம்பிய கோப்பைக்குள்ளிருக்கும் திரவத்தை அல்லது திராவகத்தை... டைல்யூட் செய்ய முடியும்... ஒரு கட்டத்திற்கு மேல்... அதை முழுமையாய் மாற்றவும் வேண்டாம். ஆனால் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் தெளிந்தாலே சிலாக்கியம் தானே சுந்தர்ஜி.//
எதை டைல்யூட் செய்கிறோம் என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது ராகவன்.
ஒரு கட்டத்துக்கு மேல் அறிவென்பதே சுமையாயும் மாறிவிடுகிறது.நிரப்பிக்கொள்ள வேண்டியது எதுவுமற்ற எளிமையாயும் இருக்கக்கூடுமல்லவா ராகவன்?
தொடரட்டும் உங்கள் ஜென் கதைகள். காலி கோப்பையுடன் காத்திருக்கிறேன்…
nice
அன்பின் சுந்தர்ஜி.
உங்களின் இடுகை ஒவ்வொன்றிற்கும்
ரெண்டு ரெண்டு ஈர்ப்பு.
ஒன்று மொழிக்காகவும் அல்லது பொருளுக்காகவும். இன்னொன்று அந்தப்படங்களுக்காக.
100 க்கு 200 ஐ அள்ளிக்கொண்டு போவது நியாயமா ?
அந்த படம் எங்கய்யா பிடித்தது படம் எடுத்தவருக்கு என் வந்தனம்.
ஏற்கெனவே படித்தது என்றாலும் மீண்டும் கிடைத்தது அருமை!
நான் காலிக் கோப்பை தான் சுந்தர்ஜி ஊற்றிக் கொண்டே இருங்கள்.
வேலைப் பளுவின் காரணமாக என்னால் உடனுக்குடன் வலைப்பக்கம் வர முடிவதில்லை. ஆனாலும் உங்கள் பதிவொன்றையும் நான் தவற விடுவதில்லை.
காலி பண்ன முயற்சித்தாலும்
யாராவது ஊற்றி விட்டுப் போய்விடுகிறார்களே?
YOU HAVE TO LEARN TO UNLEARN SOME OF THE THINGS YOU HAVE LEARNT TO LEARN SOMETHING NEW.
நன்றி நாகசுப்ரமணியன்-தொடர்ந்த வாசிப்புக்கு.
உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன ரமணி சார்.
எனக்கும் உங்கள் மனதில் இடமளித்ததற்கு நன்றி கோபு சார்.தன்யனானேன்.
எல்லோரும் தொடர்வார்களா என்பது சந்தேகமாயிருந்ததால் நடுவில் கொஞ்சம் ஜோக்ஸ் எடுத்துவிட்டேன் வெங்கட்.
கொஞ்சம் இடைவெளிவிட்டு மறுபடியும் தொடருவேன்.நன்றி வெங்கட்.
நன்றி வித்யாஷங்கர்.
இன்னும் தீரவில்லையா உங்களுக்கு ஃபாண்ட் பிரச்சனை?
தமிழ் பின்னூட்டத்துக்காக ஏங்குகிறேன் வித்யாஷங்கர்.
வலையில் வெவ்வேறு தலைப்புக்களில் தேடும்போதெல்லாம் கிடைக்கும் அபூர்வப் படங்களைச் சேமித்து வைப்பேன்.
சந்தர்ப்பம் பொருந்தும்போது உபயோகப்படுத்திவிடுவேன்.
வார்த்தைகளுக்கு நன்றி காமராஜ்.
நன்றி அருணா.
காலிக்கோப்பையாய் இருப்பவர்களால்தான் வாழ்முடிகிறது.
மெதுவாய் வாசியுங்கள்.
எனக்கு நாட்கள் கரைந்து கொண்டிருப்பதும் இருக்கும் வரை எல்லாவறையும் எழுதவேண்டும் என்றும் ஒரு அவசரம்.
இருபது வருஷங்கள் எழுதாமல் விட்டுவிட்டேனே என்கிற பரபரப்பு இருக்கிறது சிவா
கொட்டிவிடுங்கள் மதுமிதா.உங்களுக்கா தெரியாது?
enlightening!!!!!!!!!
வேறொன்றும் சொல்ல எனக்குத் தெரியவில்லை.
அற்புதமான ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டீர்களே கௌரிப்ரியா.அதற்கு மேல் அங்கும் எதுவுமில்லை.
ஆகா, என்ன அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்...! எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் போது காலி கோப்பையாய் இருக்க முடிந்தால் எத்தனை அனுகூலம்..! ஆனால் அது சாத்தியமாவதில்லை. நாம் கட்டி வைத்திருக்கும் "நான் அறிவாளி" கோட்டையில் இருந்து இறங்காமல் இருப்பது தான் பல சமயத்தில் நடக்கிறது.... மிகவும் யோசிக்க வைத்த வரிகள் சுந்தர்ஜி....
படமும் சரி, பாடமும் சரி பிரமாதம்!
உங்களைப் போல ஆழ்ந்த ரசனையுள்ளவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் நதியினடியில் உருளும் கூழாங்கற்களும் கண்களுக்குப் புலப்படுகின்றன க்ருஷ்ணப்ரியா.
ஆனால் என்ன நீங்கள்தான் அடிக்கடி நதியினருகில் வருவதில்லை.
நன்றி மிகவும்.
நன்றி ஜனா சார்.
இந்தப் படமே பாடம் போதித்தது எனக்கு. அதோடு பொருத்திப் பார்த்தேன் அந்த ஸென் கதை.
எனக்குப் படத்திலிருந்து துவங்குகின்றன என் இடுகைகள்.
ஒரு வேளை என் மொழி உணர்த்தத் தவறியதைப் படம் உணர்த்திவிடும் என்ற நம்பிக்கையும் கூட.
கருத்துரையிடுக