முல்லா நஸ்ருத்தீனைத் தெரியாதவர்கள் கீழே இருப்பதையும் தெரிந்தவர்கள் வேகமாகக் கடைசி வரிக்குச் சென்று மேலே இருப்பவற்றையும் படியுங்கள்.
I
ஒரு முறை முல்லா கப்பலில் வேலை செய்ய ஆசைகொண்டு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.
அதிகாரி: புயல் வந்தால் என்ன செய்வீர்?
முல்லா: நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: முன்னைவிடப் பெரியதாய் இன்னொரு புயல் வந்தால்?
முல்லா: இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரியும் முல்லாவும் ஒன்பதாவது புயலை முடித்து-
அதிகாரி: பத்தாவது புயல்?
முல்லா: நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: அதெல்லாம் சரி மேன். இத்தனை நங்கூரம் எங்கிருந்து உமக்கு மட்டும்? என்று கேட்டு மாட்டிக்கிட்டான் பய என்று மூன்று முறை ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
முல்லா: உங்களுக்கு விடாம பத்து புயல் எங்கிருந்து கிடைக்குமோ அதுக்குப் பக்கத்துல இருந்துதான் என்று சொல்லி சிரிக்கவில்லை.
II
”முல்லா ரொம்ப புத்திசாலி" என்று பலரும் புகழ்வதைக் கேட்ட ராஜா முல்லாவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரசவை கூடியபோது முல்லாவை ராஜா ராரா என்று தெலுங்கில் இல்லை உர்துவில் கூப்பிட்டார்.
”முல்லா! உங்கள் அறிவைச் சோதிக்கணுமே? நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் சொல்லலாம். அது உண்மையாயிருந்தால் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயிருந்தால் உங்களைத் தூக்கில் போடுவேன். எங்கே ஏதாவது ஒரு வாக்கியம் ப்ளீஸ்” என்றார் ராஜா.
உடனே வழக்கமாகத் தங்களுக்குள் இந்த மாதிரி நேரங்களில் குசுகுசு என்று பேசிக்கொள்ளும் மந்திரிகள் இப்போதும் குசுகுசு.
“முல்லா உண்மையைச் சொன்னாலும் செத்தார். பொய்யைச் சொன்னாலும் செத்தார். ஆக முல்லாவுக்கு இன்னிக்கு செத்து நாளைக்குப் பால்” என்பது அந்தக் குசுகுசுவின் விரிவாக்கம்.
முல்லா ராஜாவைப் பார்த்துப் தெனாவெட்டுடன் " மன்னரே! நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள் " என்ற மஹா வாக்கியத்தை உதிர்த்தார்.
முல்லா சொன்னதைக் கேட்ட மன்னர் திகைப்பூண்டை மிதிக்காமலே முழித்தார். பின் வேறென்ன? திகைத்தார்.
முல்லா சொன்னது உண்மையாயிருந்தா அவருடைய தலை வெட்டப்படவேண்டும்.அப்படி வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். பொய் சொன்னால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும்.
முல்லா சொன்னது பொய்யாயிருந்தா முல்லாவைத் தூக்கில் போடணும். அப்படித் தூக்கில் போட்டால் அவர் சொன்னது உண்மையாயிடும். உண்மையைச் சொன்னால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்டணும்.
ஆக வேறு வழியில்லாமல் வயிறு புகைய புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை ராஜா பாராட்டினார். சபையோர் வழக்கம்போல் சோர்வாகக் கைதட்டிவிட்டு இன்றைக்குப் பொழுது கழிந்தது என்று அவரவர் வீட்டுக்குக் குதிரைகளில் கிளம்பினார்கள்.
அதுசரி. உங்க ஆறு பேருக்கும் முல்லா யாருன்னு தெரியாதா? அடடா! வீட்டுக்குக் கெளம்பிட்டேனே. நாளக்கிச் சொல்றேனே.
32 கருத்துகள்:
ஹா... ஹா... பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.
ஆகா அருமை
ஆமா யாரு அந்த ஆறு பேரு ?
:)))))
:) went back to my Tinkle days... there used to be these regular tales in it-- Naseeruddin Hoodja tales used to be a part of it... hoodja/mulla... just titles...
enjoyed both the tales.. esp. the 2nd one!
don't understand about the 6 people you mention though...
good one, sir!
ஜாலி மூட்ல இருக்கீங்க போல..
முல்லா கதைகள் சுவையானவை. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி.
நல்ல வேலை நான் யேழாவது ஆள் !!
ramanaa said...// நல்ல வேலை நான் ஏழாவது ஆள் !!//
ரமணா சார்,
முல்லாவும், அந்த ராஜாவும் தலைகீழாகத் தான் கணக்கு எண்ணுவார்கள். அப்போ நீங்கள் முதல் ஆளாக மாட்டாமல் இருக்கணுமே என்று ஒரு பாதுகாப்புக்காக நான் உங்களுக்கு முன்னால், வந்துள்ளேன்.
முல்லாக்கதைகள் எப்போது யார் யார் வாய் மூலம் கேட்டாலும் / படித்தாலும் / என் பேரன் பேத்திகளுக்குச் சொன்னாலும், ஆர்வத்தில் நானும் ஒரு சின்னக் குழந்தை போல மாறி விடுவேன்.
என்னை காப்பாத்தினதுக்கு நன்றி கோபு தாத்தா
முல்லா சொன்ன நீதிக்கதையை சுந்தர்ஜி சொன்னதால இன்னும் ஏதாவது சேர்த்திருப்பாரோன்னு
தேடிப் பாத்தேன் !
ரசித்துப் படித்தேன்
நல்ல பதிவு.
தொடர வாழ்த்துக்கள்
அள்ள குறையாத முல்லா.
I WAS READING YOUR POST ON MULLA.THESE STORIES ARE FAMOUS FOR THEIR TACTFUL THOUGHTFUL AND HUMOROUS APPROACH. THEY ARE SIMILAR TO OUR TENALI RAMAN STORIES. ANY TIME YOU READ THEM, YOU ARE BOUND TO ENJOY.I SAW THE LIVE FEED OF MY READING IT TWICE. KODOS TO YOU, SUNDARJI.
//அவரவர் வீட்டுக்குக் குதிரைகளில் கிளம்பினார்கள்//
முல்லா அண்ணாச்சி எதில் கிளம்பினார்னு சொல்லவில்லையே மக்கா....
முல்லாவின் கதைகள் சுவாரஸ்யமானவை. நீங்கள் சொன்ன இரண்டும் அருமை. அப்பப்போ சிரிக்கவும் வேண்டியிருக்கில்லையா?!
ஓ!நன்றி கோநா.
மாட்டிக்கிட்டீங்களா சிவா?
உங்களைச் சொல்லாதபோது நீங்களா ஏன் தொட்டுப்பாத்துக்கிறீங்க?
சும்மா ஒரு ஸ்வாரஸ்யத்துக்காக ஆறு பேருக்கு முல்லாவைத் தெரியாதுன்னு பொரளி கெளப்பிவிட்டா கேக்குராய்ங்கய்யா டீட்டெய்லு!
அஞ்சு தடவை அஞ்சாம சிரிச்சத்துக்கு நன்றிங்கோவ் கௌரிப்ரியா அம்மணி!
நீங்களும் ஆறு பேரைக் கேட்டுட்டீங்களா மாதங்கி?
சிவாக்கு சொன்ன பதில இஃப் யூ டோண்ட் மைண்ட் கொஞ்சம் பாக்றீங்களா?
செம்ம செம்ம செம்ம ஜாலி மூட் ரிஷபன்.
சுவைத்த வெங்கட்டுக்கு சுவையான நன்றி.
தொடர் வரவுக்கும்.
ஏய் புடிங்கப்பா அந்த ரமணாவை.
கோபு சார் சொன்னா மாதிரி புடிக்கலாம்னு பாத்தா மேலேருந்து ஆறுலயும் தப்பிச்சுட்டான்.கீழேருந்து ஆறுலயும் தப்பிச்சுட்டான் கோபு சாரோட சேர்ந்து.
நான் தோத்தது ஒங்ககிட்ட ஒன்னும் இல்ல ரமணாகிட்ட தான்.
கோபு சார் உங்க பின்னூட்டத்தை என்னுடன் சேர்ந்து ரமணாவும் ரசித்தான்.அவன் உங்க ரசிகன் ஆயிட்டான்.
நன்றி கோபு சார்.
ரமணா ஒனக்கு வேற ஒரு குழி தோண்டி வெச்சுருக்கேன்.
அதுல மேல சேர்க்க வேற எதுவுமே இல்லை.
ரோஜாவோட மணத்துக்கு மேல வேறேது சுகந்தம் ஹேமா?
நன்றி ரமணி சார்.
நீங்க சொன்னா சரி காமராஜ்.
நீங்க படிக்காத முல்லாவா பாலு சார்?
ரொம்ப நன்றி பாலு சார்.
ஓ மனோ! நீங்க முன்னாடியே கெளம்பிட்டீங்களோ.
அன்னிக்கு ராத்திரி முல்லாவும் நானும் விருந்துக்காக ராஜா ராணியோட மாளிகையிலேயே தங்கிட்டோம்.
முல்லாவோட குதிரைய லாயத்துல கட்டிப்போட்டுட்டோம்.
நீங்க இதைக் கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான் முல்லா வீட்டுக்குக் கிளம்புபோது வரைஞ்ச படத்தை கதைக்கு மேலே போட்டேன்.
ஆக முல்லா குதிரைலதான் வீட்டுக்குப் போனாரு மக்கா.
சிரிச்சீங்களா மோஹன்ஜி? நன்றி.
உங்களைக் கொஞ்சம் சிரிக்கவும் வெச்சுட்டேன்.
நானுங்கூடத்தான் சிவா.
அவனோட பின்னூட்டம் ரொம்ப டைமிங் சென்ஸோட இருந்தது.
நான் சொல்ல வந்ததையே அவன் மாத்திட்டான்.
கருத்துரையிடுக