28.2.11

மாயச் சொல்


நன்றாய் நினைவிருக்கிறது
அந்த மந்திரச்சொல்லை
நான் மறந்தது.

இப்படி ஒரு மன்றாடல்
நிகழக்கூடுமெனத் 
தெரியாது போயிற்று.

இருந்த சொற்களுக்குள்
மூடப்பட்ட கதவுகளுக்கான
சொல்லைத் தேடியபோது
தெரிந்தது கொண்டேன்
நான் தொலைத்தது எதுவென.

மிகத் துயரமானது
திறக்க வழியற்ற
ஒரு கதவின் முன்
குருதி கசிய
மண்டியிட்டுக் காத்திருப்பது.

காத்திருக்கிறேன் 
நெடுநாட்களாய்
குகையின் உட்புறம்
வாயில் திறக்கவிருக்கிற
மாயச்சொல்லுக்காய்.

26 கருத்துகள்:

க ரா சொன்னது…

nandri sundar ji.. engalai nedunal kaka vekamaiku :)

vasan சொன்னது…

பாதாளக்குகைக‌ளின் வாயில் திற‌க்கும்,
அன்றைய‌ மாய‌ம‌ந்திர‌ச் சொல் -'தியாக‌ம்'.
நேற்றைய‌ ‌ம‌ந்திர‌ச் சொல் - 'காத‌ல்'.
இன்றைய‌ மாய‌ச் சொல் - "துரோக‌ம்"
நாளைய‌ ஒரே சொல் - 'புர‌ட்சி'.

Ramani சொன்னது…

அலிபாபாவின் அண்ணனைப்போல
பதட்டப்படாதிருப்பின்
அந்த மந்திரச் சொல்
மீண்டும்
நினைவுக்கு வரக்கூடுமோ?
நினைவுக்கு வந்தால்
கவியுள்ளம் கொண்ட நாம்
மனதுக்குள் பூட்டியா வைப்போம்
ஸ்ரீராமாஜுனரைபோல்
கோபுரம் ஏறி
கொட்டித்தீர்த்துவிடமாட்டோமா?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு சுந்தர் ரௌடிஜி.. :-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தாங்கள் சொன்னபடி ஒரு நாள் கூட ரெஸ்ட் தராததால், எனக்கு இந்த மாய்ச் சொல் மந்திரச் சொல் பற்றி எதுவுமே விளங்காமல் என் மூளை மழுங்கி விட்டதோ என்னவோ என்று ஒரே கவலையாக உள்ளது.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...சில காத்திருப்புக்கள் பெரும்வலி !

RVS சொன்னது…

யாருக்காக அந்த மந்திரச்சொல்லை திறப்பீர்கள் ஜி! ;-)

Nagasubramanian சொன்னது…

ஜீ பூம் பா???????

Vel Kannan சொன்னது…

விரைவாக விரைவாக ... ஜி
நன்றாக யோசியுங்கள்-நிதனமாகவும்.
ஒரு வேளை எனக்கு அந்த சொல் கிடைத்தாலும்
உரக்க சொல்லி விடுகிறேன் இந்த உலகின்/மனிதர்களின் விடுதலைக்காக

(விடுப்பட்டவை அனைத்தும் படிக்க வேண்டும் சில நாட்களும் பிடிக்கும்)

ரிஷபன் சொன்னது…

அது சொல் இல்லை சுந்தர்ஜி..
என்னைப் பொறுத்தவரை ‘ஸ்பரிசம்’ பேச்சற்று.. திறந்து விடும் எந்த மாயக் கதவையும்.
கவிதையை மிக உள்வாங்கி ரசித்ததால் இந்த ‘அதிகப் பிரசங்கித்தனமான’ பதில்!

மோகன்ஜி சொன்னது…

//காத்திருக்கிறேன்
நெடுநாட்களாய்'குகையின் உட்புறம்'
வாயில் திறக்கவிருக்கிற
மாயச்சொல்லுக்காய்..

உட்புறக் காத்திருப்பு.. எவ்வளவு பெரிய விஷயம்..

எதுவும் சொல்ல வேண்டாம்..

G.M Balasubramaniam சொன்னது…

மாயச்சொல் சீக்கிரமே நினைவுக்கு வர வேண்டி வாழ்த்துக்கள்

பத்மா சொன்னது…

enakkathu theriyume !!

சுந்தர்ஜி சொன்னது…

முதல் போணி அன்றும் நீங்கள் தான்.இன்றும் நீங்கள் தான் ராமசாமி.

ராசி நல்லாருக்கு.வியாவாரம் நல்லாப் போவுது.நெதமும் வந்து போணி பண்ணுங்க சாமியோவ்.ராமசாமியோவ்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் சொல்படி பதிலுக்குப் பதிலாக பதிவாய் இருக்கப் பண்ணிவிட்டேன்.

சரிதானே ரமணி அண்ணா?

சுந்தர்ஜி சொன்னது…

சரியாகப் பிடித்து விட்டீர்கள் வாசன்ஜி.

குகை எதுவோ அடைபட்டவன் எவனோ அவன் தீர்மானிக்கிறான் அந்த மாயச் சொல்லை.

சுந்தர்ஜி சொன்னது…

ரௌடிஜியாக்கியதற்கு ரொம்ப நன்றி பா.ரா.

இதே மாதிரி நெறைய எடுத்து விடலாம்னு ஒரு நெனப்பு.

அவசியம் வந்து இதுமாதிரி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போவணும்.

நாகேஷ் மேஜரிடம் சொல்வார்”படவா ராஸ்கல்னு சொல்லுங்க ஸார்”னு.அது மாதிரி.

சுந்தர்ஜி சொன்னது…

கிட்டத்தட்ட நாக்ஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களுக்காக மட்டும்தான் ஆர்விஎஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

கண்டிப்பாய் ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாம் சரியாக இருக்கிறது கோபு சார்.உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.

ஆனால் உங்கள் வீட்டில் இப்போது எலி ஓடிக்கொண்டிருக்கிறது.அதைத் தவிர வேறேது சொன்னாலும் இப்போது ஏறாது.

சுந்தர்ஜி சொன்னது…

அதுவும் ஒரு கோணம் தான் ரிஷபன்.அருமையான கோணம்.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்களும் அகப்பட்டால் சொல்லிவிடுங்கள் வேல்கண்ணன்.

எவ்வளவு வேலையானாலும் கொஞ்சம் இதுக்கும் நேரமொதுக்குங்க பாஸு.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்த்தினாப் போதாது.கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோ பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

//உட்புறக் காத்திருப்பு.. எவ்வளவு பெரிய விஷயம்.

எதுவும் சொல்ல வேண்டாம்//

நேற்று நீங்கள் ஃபோனில் பேசிய பின் குரல் கேட்ட பின் இந்த வார்த்தைகளுக்குக் கூடுதல் அர்த்தம் காண்கிறேன் மோஹன்ஜி.

வாசிப்பின் ரசனையின் உச்சம் இது.

சிவகுமாரன் சொன்னது…

சுந்தர்ஜியின் மாயச் சொல்லில் மயங்கிக் கிடக்க ஓடோடி வந்தேன் திறந்திடு சீசேம்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...