
ஐயோ! ஸென் பௌத்தமான்னு ஓடாதீங்க. இது ஸென் இல்ல. இல்ல. இல்ல. சொல்ப அல்ப ஜோக்ஸ்.
உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஜோக்ஸ் சொல்ற மாதிரி சிரமமான விஷயம் எதுவுமில்ல. ஒருத்தர அழ வெச்சுடலாம். ஆனா சிரிக்க வைக்கிறது மஹா கஷ்டம்.
பீடிகை சிகரெட்(இப்போது படத்தைப் பார்க்கவும்)கை போதும். ஜோக்குக்குப் போலாமா?
#அம்பானி வண்டியைத் தலை தெறிக்க ஓட்ட பின்னாடி இருந்த பிரேம்ஜி ”ஏம்ப்பா வண்டிய இப்பிடிப் போட்டுத் தொரத்துற? வூட்டுல ஏதாவது அவசர வேலையா? சொல்லுபா”. அதற்கு அம்பானி” வண்டி வல்லிசா ப்ரேக் புடிக்கல்லப்பா. எங்கேயாவது ஆக்ஸிடெண்ட் ஆவுறதுக்குள்ளாற சீக்கிரமா வூட்டுக்குப் போய் சேந்துடலாம்னுதான்”.
#ரத்தன் டாடா ஒரு ஆட்டோவோட முன்சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருப்பதை இன்னொரு ஆட்டோவில் பீடி வலித்தபடிச் சாய்ந்திருந்த லக்ஷ்மி மிட்டல் ”ஏம்ப்பா ஃப்ரண்ட் வீல் பஞ்சரா?” என்று கேட்க இளக்காரமாகச் சிரித்த டாடா” போர்டை நீ பாக்கல போல இருக்கு. இங்க டூ வீலர் மட்டுந்தான் பார்க்கிங் அலௌடு. கழட்டு ஒன்னோட ஃப்ரண்ட் வீலையும்” என்றார்.
#வெளிநாடு போய்த்திரும்பிய சத்யம் ராஜு தன் மனைவியிடம் கேட்டார்,” என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியறேன்?”. அவர் மனைவி,” இல்லையே ஏன்? என்றாள். “இல்ல. கொள்ளையடிச்சுட்டு லண்டன்கிட்ட வந்துக்கிட்டிருந்தேன். அப்ப ஒருத்தி என்னப் பாத்து நீ ஃபாரினரான்னு கேட்டா.அதான் டௌட்டா இருந்திச்சு.ஓங்கிட்ட கேட்டேன்.”
#ஒரு தடவை ஹர்பஜன்சிங் தன் கேர்ள் ஃப்ரெண்டோடு ஆட்டோவில் போகும்போது ஆட்டோ ட்ரைவர் கண்ணாடியை அவளைப் பார்க்க வசதியாய் திருப்பிவைத்தார். உடனே வந்தது ஹர்பஜனுக்குக் கோபம். ”என்னோட கேர்ள் ஃப்ரண்டை கண்ணாடி வழியாப் பாக்கலாம்னு நெனச்சியா? வண்டிய நான் ஓட்டறேன். வந்து ஒக்காரு பின்னால”.
#யுவராஜ்சிங்கிடம் இண்டெர்வ்யூவின் முதல் கேள்வி.
ஒரு கட்டடத்துல பத்தாவது மாடில நீங்க இருக்கீங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிக்கிது. உடனே என்ன பண்ணுவீங்க?
கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.
#பிந்தரன்வாலே ஒரு தடவை பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்சனைக்கு ஆதரவா ஒரு கார்ல பாம் வெச்சுக்கிட்டு இருக்கும்போது அவனோட ஃப்ரெண்ட் கேட்டான்.”கார்ல பாமை பொருத்திக்கிட்டிருக்கும்போதே பாம் வெடிச்சுட்டா என்ன பண்றது?”. உடனே “முட்டாள். அப்படி ஏதாவது ஆனா என்ன பண்றதுன்னு இன்னொரு பாம் கைவசம் வெச்சுருக்கேன்” என்று சொல்லி பாமை ஆட்டிக் காட்டினான்.
#(ஃபோனில்)
டாக்டர்! என்னோட மனைவி பிரசவவலியால துடிக்கறாங்க.
ஓ மை காட்! இது அவங்களோட முதல் குழந்தையா?
இல்ல. நான் அவங்க புருஷன்.
#ஒரு பெண்ணை ஒரு பையன் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் (நான் மட்டும் நிமிர்ந்து பார்க்கையில்) சட்டென்று முத்தமிட்டு விட்டான்.
அடப்பாவி! என்ன பண்ற நீ?
பச்சையப்பால ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன்.
இந்த ஜோக்ஸுக்கெல்லாம் சிரிச்சு முடிச்சுட்டீங்கன்னே வச்சுக்குவோம். இப்போ பரிசுக்குரிய கேள்வி.
இந்த இடுகையில் ஆறு பொய்கள் சொல்லியிருக்கிறேன். அதைச் சரியாகவோ கிட்டத்தட்டவோ கண்டு பிடிப்பவர்களுக்கு நீராராடியாவிடம் சொல்லி மத்திய சர்க்காரில் வெகுமதி வாங்கித் தரப்படும்.
ராசா ராடியா நம்பர் ப்ளீஸ்?