1.6.10

வைக்கோல் கன்று



இருப்பதை இருப்பதாய் நினைக்கச் செய்கிறது
சோளக்கொல்லை பொம்மையின் மாறுவேடம்.

இல்லாததை இருப்பதாய்க் காட்டுகிறது
வைக்கோல் கன்றின் உயிர் கரைக்கும் பந்தம்.

இருப்பதை இல்லாததாக அழிக்கிறது
திருஷ்டிப்பூசணியின் மீதான பெரும் நம்பிக்கை.

இல்லாததை இல்லாததாகவே எடைபோடுகிறது
நிலைக்கண்ணாடியின் முரட்டு நேர்மை.

10 கருத்துகள்:

Madumitha சொன்னது…

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.

Anonymous சொன்னது…

உயிர் கரைக்கும் வார்த்தைகளின் சாகசம் கனிந்த பலாச்சுவையாய் மனமெங்கும் வியாபிக்க கவிதைகளின் லயிப்பின் சிலிர்ப்புடன் ...
நிலா மகள், நெய்வேலி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-மதுமிதா.

முதல் வருகைக்கு நன்றி நிலாமகள். நல்லா இருக்கீங்களா?

Anonymous சொன்னது…

இல்லாததும் இருப்பதும் என்னை வெகுவாகக் கவர்ந்தது அண்ணா.
-கே.அண்ணாமலை.

Anonymous சொன்னது…

இல்லாதது இருப்பது எல்லாமே அழகு.
-மீனாதேவி.

பத்மா சொன்னது…

அந்த முரட்டு நேர்மை தான் மிரட்டுது இல்ல சுந்தர்ஜி?
atleast என்னை மட்டுமாவது :))

ஹேமா சொன்னது…

பொய்யென்று தெரிந்த பிறகும் நம்பிக்கைகள்தானே
வாழவைக்கிறது சுந்தர்ஜி.

Anonymous சொன்னது…

சபாஷ் சபாஷ் எனக் கூக்குரலிடத் தோன்றுகிறது இக்கவிதை படித்து. சோளக்கொல்லை பொம்மை-திருஷ்ட்டிப்பூசணி-வைக்கோல் கன்று-உணர்ந்து ரசிக்கவைத்த ரசனைத்ததும்பல்.குப்பென்ற கள்ளப்புன்னகையை எழுப்பியது இல்லாததை இல்லாததாகவே எடை போடுகிற நிலைக்கண்ணாடியின் முரட்டு நேர்மை. பகல்வேஷம் போட்டிருக்கும் அந்த நளினம்தான் பேரழகு.அறுத்துப் பிளந்த மாதுளை முத்துக்களின் அழகாய் உங்கள் வரிகளின் வார்த்தைகள்.
-உஷாராணி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-அண்ணாமலை.
-மீனாதேவி.
-எல்லாரையும்தான் பத்மா.
-சரியாய்ச் சொன்னீர்கள் ஹேமா.
-உஷா.கலக்கறீங்க விமர்சனத்துல.

நிலாமகள், நெய்வேலி சொன்னது…

வீட்டுக் கூரைகளையும் கழுவிவிடும் சிறுமழைபோல் அன்றாடங்களின் சலிப்பைக் கரைக்கும் தங்கள் கவிதைகளுடன் வெகு சௌக்கியம்!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...