14.10.10

அன்-பூ


அது காப்பீட்டுத் துறையை என் மதம் போல பாவித்து
உறங்கும்போதும் அதே நினைவுடன் வாழ்ந்த காலம்.
புதுப் புது உத்திகள்.யாரும் நுழையாத பகுதிகள்.
மிகவும் கடுமையான பரிகசிப்பும் ஏமாற்றங்களும்
நிறைந்த துறை. காப்பீட்டு முகவர்கள்
சினிமாக்களிலும் கதைகளிலும் வாழ்க்கையிலும்
கிண்டலாக விமர்சிக்கப்பட்டார்கள்.
ஒரு வணிகம் முடிய ஐம்பது தடவைகள்
ஒருவரை வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு காலங்களில்
சந்தித்து வெற்றி கொண்ட அனுபவங்கள் எல்லாம்
ஜாடியில் ஊற வைத்த ஊறுகாய் போல
என் நினைவுகளில் அசைகிறது.
எல்லா மூடிய கதவுகளையும்
விடாது தட்டிக்கொண்டே இருப்பவர்களான
காப்பீட்டு மனிதர்களுடன்
உறவாடிய காலங்களில்
என்னை வசீகரித்த
அல்லது உருகவைத்த
அன்பின் அருமை சொல்லி
என் கண்ணீர் சிந்த வைத்த
வீடியோக்களின் இணைப்புகள்
உங்களுக்காகவும்.

ஒரு விளம்பரம்
ஒரு குறுகிய காலத்தில்
எல்லோரையும்
சென்றடையமுடியும்
என்று முகத்தில் அடித்தது
போல சொல்லும் காட்சிகள்.
இரண்டரை மணி நேர சினிமாவில்
முக்கி முக்கி கோடிக்கணக்கில்
வியாபாரம் செய்யும் முதலாளிகளுக்கு
இந்தக் காட்சிகளை அர்ப்பணிக்கிறேன்.

இவற்றிற்கு வியாக்கியானம் அளித்து இதன் உன்னதத்தைக் குலைக்க என் மனம் ஒப்பவில்லை.
அவசியம் ஒருமுறை தயவு செய்து பாருங்கள்.
எத்தனை பேரிடம் முடியுமோ பகிருங்கள்.
என்றென்றைக்குமான அன்பு மலரட்டும்.
கசியும் கண்ணீரை அது துடைக்கட்டும்.


(மேலுள்ள இணைப்புகளின் மேல் க்ளிக் செய்யுங்கள்.விளம்பரங்கள் விரியும்)

8 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

மிகச்சிறந்த பகிர்வு. முதலாவதில் பெரும் தாக்கம் கொண்டேன். எனது எல்லா(e-Mail) நண்பர்களுக்கும் உடனே பகிர்ந்து விட்டேன். நன்றி

உதிரிலை சொன்னது…

சுந்தர்ஜி..

மனம் நெகிழ வைத்த பதிவு. இதனை அவசியம் எனக்குப் பிடித்தமானவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். வாய்ப்பிற்கு நன்றி.

சைக்கிள் சொன்னது…

அன்பின் உன்னதங்களை நெஞ்சை தொடும்படி பேசுகிற கவிதை காட்சிகள்.நன்றி.

நிலா மகள் சொன்னது…

உங்க அறிவிப்பின் நெகிழ்வோடு காட்சிகளுள் நுழைந்தால்.. முதல் காட்சியே நிறைய யோசிப்பைத் தூண்டி, முன் படிந்திருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிந்தது. தொடர்ந்த மூன்றும் சமைக்க எழாதபடி என்னை சமைத்து விட்டது கணினி முன்...! நாமும் பலவற்றைக் கடந்தபின், இப்படி இருந்திருக்கலாமோ... அப்படி நடந்திருக்கலாமோ... நினைத்ததுண்டு அல்லவா...?! உருவாக்கியவர்களுக்கும், சேர்ப்பித்த உங்களுக்கும் எதைத் தர...?!!!!

பத்மா சொன்னது…

thank you sundarji

பத்மா சொன்னது…

அந்த தலையணையில் கீழ் வைத்திருந்த பூக்களைப்போல நினைவுளை வைக்கத் துடிக்கிறது மனசு.

கலங்கடித்த விளம்பரங்கள்..
கண்ணில் கசியும் நீரோடு மேலே சொல்லத் தெரியாமல் தவிக்கும் .....

Anonymous சொன்னது…

POKKISHAM-il en kavithai paarththu nekizhndhaen sundarji sir. indha anbu en poorva janma payan polum. ungal blog-ai naan karka vaendiyavaikalin kuriyeedukalaai arikiraen. Anbu nandrikal sundarji sir.. by Pa.Thiyagu.

vasan சொன்னது…

நொறுங்கும் அந்த‌ க‌டிகார‌ம்,
சித‌றும் அந்த‌ நின‌வ‌லைக்ள்,
அல்றும் இந்த‌ க‌ண‌ங்க‌ள்,
அர‌ற்றும் ம‌ன‌து, அட‌ங்காத‌ கண்ணீர்.
மிர‌ட்டும் சாசுவ‌த‌ம், மீண்டும் உருளும் வாழ்க்கை.

Shared with my freinds / relatives too.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...