2.10.10

இருப்பு



கோணத்தைப் பொருத்துச்
சுருங்கி விரியும் நிழல் போல

இருக்கும் இடத்தைப் பொருத்ததே
உயரத்தை அடைவதும்
பள்ளத்தில் வீழ்வதும்.

உதிர்க்கும் சொல்லைப் பொருத்ததே
திறந்தவை மூடுவதும்
மூடியவை திறப்பதும்.

வீசும் பார்வையைப் பொருத்ததே
மலர்ந்தவை வாடுவதும்
வாடியவை மலர்வதும்.

மலரும் கொடையைப் பொருத்ததே
இருக்கையில் மறைவதும்
மறைந்த பின் நிலைப்பதும்.

7 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

இருக்கையில் மறைவதும்
மறைந்த பின் இருப்பதும்.

கவிதை முழுவதுமே அள்ளிக் கொண்டு போகிறது .
நிச்சயமாய் இருக்கப் போவது எதுவெனப் புலனாகாவிடினும் கடைசி மூச்சு வரை இருக்கப் போவது அதற்கான தேடல்.

சைக்கிள் சொன்னது…

இறுதி வரிகள் மிக அழகு.நவீன நாலடியார் போல வாழ்வை அணுகும் பார்வையைப் பார்க்கிறேன் இந்த மற்றும் சில கவிதைகளில்.அவை காலத்தின் தேவையும்கூட.நன்றி.

நிலா மகள் சொன்னது…

//இருக்கும் இடத்தைப்
பொருத்ததே//
உதிர்க்கும் சொல்லைப்
பொருத்ததே//
//வீசும் பார்வையைப்
பொருத்ததே//
//மலரும் கொடையைப்
பொருத்ததே//

உங்கள் தேடலும் தெறிப்பும் உன்னதம்! தொடர்புடைய படங்களின் தாக்கம் கவிதைகளை மெருகு ஊட்டுகிறது ஜி!

Vel Kannan சொன்னது…

முதல் வரியே நிறைய அர்த்தம் சொல்கிறது ஜி

ஹேமா சொன்னது…

முதல் வரியே போதும் வாழ்வைச் சொல்ல !

Madumitha சொன்னது…

பருந்துப் பார்வையில்
சொன்ன வரிகளின்
நிழல் நீண்ட நாள்
மனசுக்குள் தங்கியிருக்கும்.

பத்மா சொன்னது…

ஆம் சுந்தர்ஜி பார்வை அளவே வாழ்வு ..அன்றன்று

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...