I
நீயும் தட்டவில்லை.
நானும் திறக்கவில்லை.
நடுவில் இருந்தது கதவு.
II
பேச இயலாதவனை விடப்
பேச முடியாதவனும்
சொல்ல நினைப்பவனை விட
சொல்ல முடியாதவனும்
இருக்கும் வரை தீராது
வாழ்வின் துயரம்.
III
இயலாதவனின் கண்ணீருக்கும்
இயன்றவனின் செருக்குக்கும்
நடுவே அறைபடுகின்றன
நாட்கள்.
IV
எல்லோரையும்
நம்புபவனுக்கும்
எல்லோரையும்
சந்தேகிப்பவனுக்கும்
இடையே
சிக்கித் தவிக்கிறது மாயமான்.
V
மறுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும்
நடுவே பரவுகிறது
உருவமற்றவனின் சுகந்தம்.
மெதுவாய் உயரும் திரைக்குப்
பின்னே தேடியலைந்த நிழல்.
7 கருத்துகள்:
திறந்திராத அந்தக் கதவு மனசுக்குள் நிறைய வார்த்தைகளைத் திறந்து விட்டது.
5ம் ஏதோ ஒரு லயத்தில் அமைந்தது தற்செயலா.. (அ) உங்கள் கை வண்ணமா
நல்லா இருக்குங்க.
2 ,3 ,4 இவை என் மனதுக்கு நெருக்கமாய்...
ஐந்தாவது கவிதை மிகவும் தாக்குகிறது
நாலாவது எனக்குப் பொருத்தமாக இருக்குமோ !
ஒன்றின் நிழல் தான் மற்றொன்றோ?
நிஜத்திறகும்,நிழலுக்கும் இடையே
தொங்கும் திரை விலக்கும் கவிதை
நன்று.
உருவமற்றவனின்
சுகந்தம்
intriguing
கருத்துரையிடுக