பார்க்க முயல்கிறேன்
வண்ணங்களை-
பார்வையற்றவனின்
விழி மூலம்.
பேச முயல்கிறேன்
என் மனதை-
வார்த்தையற்றவனின்
குரல் மூலம்.
மீட்ட முயல்கிறேன்
என் இசையை-
மரித்துப் போன
தந்திகளில்.
கடக்க முயல்கிறேன்
தூரங்களை-
கால்களற்றவனின்
சுவடுகளில்.
வாழ முயல்கிறேன்
நாளெல்லாம்-
கூரைகளற்ற வெளியின்கீழ்.
நிலைக்க முயல்கிறேன்
காலமெல்லாம்-
எழுதிக் கிழித்த
என் கவிதைகளில்.
35 கருத்துகள்:
சுந்தர் ஜி! இவ்வளவு விரக்த்தி எதற்கு ஐயா!---காஸ்யபன்.
ஏற்றுகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது ஜி
இருப்பினும் //எழுதி கிழித்த //
என்பது எழுதி தீராத - என்று வந்திருக்கலாம் (என்பது என் கருத்து).
இருப்பினும் அவரவர் கவிதையை அவரவர் எழுதவேண்டும்.
பட்டுக்கோட்டை பாடல் என்று நினைக்கிறன்
'என்ன செஞ்சு வச்சோம் ..
எல்லாத்தையும் எழுதி கிழிச்சு வச்சோம் ' என்பார். அதனை நினைவுபடுத்துகிறது உங்களின் கவிதை
ம்.....
எது எப்படியோ, காலமெல்லாம் உங்களால் நிலைக்க முடியும் நீங்கள் இதுவரை எழுதிய / தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கிற / இனி எழுதப்போகிற, உங்கள் எழுத்துக்களால்.
முயல்தலுக்கும், முடிதலுக்குமான கன(ண) தூரம் ஒரு துயரம்.
காணல் நீர் தேடி, பாதையை தெலைத்த பயணமாய் வாழ்க்கை.
அங்கே சிதறிய சில காலடித்தடங்களாய், தடங்கலாய் கவிதைகள்.
எழுதிச் சேமியுங்கள் சுந்தர்ஜி.அதுவே போதும்.நிழலாய் இருக்கும் !
இந்த தவிப்பே நம்மை பல்வேறு விஷயங்களில் ஈடுபட வைக்கின்றது. நிறைவின்மையின் நிறைவு என்றும் தோன்ற வைத்தது கவிதை. கவிதை ஒரு நேர்மறை விசையை உள்ளடக்கியிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
எனக்குப் புரிகிறது சுந்தர்ஜி அண்ணா. நீங்கள் எழுதிய கவிதைகள் கிழித்தன சிலவற்றை. கிழிக்கப் போகின்றன இன்னும் பலவற்றை. எழுதிக் கிழித்தக் கவிதைகள்- பொருள் இதுதானே.?
இன்று ஒரு கவிதையை பதிவிட எண்ணியிருந்தேன். இந்தக் கவிதையைப் படித்ததும் வெட்கப்பட்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது தன்னை கிழித்துவிடச் சொல்லி என் கவிதை. நான் எழுதிக்கிழிப்பது இப்படித்தான்.
படம் அழகு... கருத்தும் நிதர்சனம்... ஆனால் எழுத்து என்றும் அழிவதில்லை
NICE
good discription of in capablity comes very well
புதைவதெல்லாம் மண்ணோடு மண்ணாகி விடுவதில்லை... கிழிபடாமலிருக்கும் கவிதைகளும், முனை முறியாத வீர்யமிகு எழுதுகோலும் போதுமே ஜி... புரட்டிப் போடலாம் எதையும்!
/நிலைக்க முயல்கிறேன்காலமெல்லாம்-எழுதிக் கிழித்தஎன் கவிதைகளில்./
இது ரொம்ப அருமை....உண்மையும் கூட!
எழுதிக் கிழித்த..
சொல்லாமல் பல அர்த்தங்கள் தரும் சொற்கள்..
வார்த்தை விளையாட்டு உங்களீடம் வெகு இயல்பாய்.
அது என் விரக்தி மட்டுமில்லை.நம் எல்லோருடையதும்.
வேறொரு பார்வையில் இந்தக் கவிதை.அவ்வளவுதான்.
மென்மையான மனதுக்கும் பரிவிற்கும் நன்றி காஸ்யபன் சார்.
ம்ஹும் வெங்கட்.
நன்றி வேல்கண்ணன்.
என் நினைவிலும் மற்றொரு கவிதையை அசைய வைத்தமைக்கு நன்றி வேல்கண்ணன்.
நிழலைத் தொட்டுவிட்டீர்கள் ஹேமா.
நன்றி.
இதை உங்கள் மனப்பூர்வமான ஆசியாக ஏற்கிறேன் கோபு சார் வணக்கங்களுடன்.
நன்றி.
அடடா!வாசன்-
உங்க பின்னூட்டமெல்லாமே கவிதைக்கு உரை மாதிரி சில நேரம்.கவிதையாகவே சில நேரம்.
நீங்க கவிதையெழுத ஆரம்பித்தால் எங்களையெல்லாம் ஊதித் தள்ளிவிடுவீர்கள்.
எப்ப சார் முதல் கவிதை அஃபீஷியலா?
நீங்க கவிதை டாக்டரோ சைக்கிள்?
கவிதையை எழுதினவனுக்கு நாடி பாத்துடறீங்க எல்லா நேரமும்.
இப்பவும் அப்படித்தான்.
ஹை!இது நல்லா இருக்கே சிவா!
எழுதிக்கிழித்ததைன்னு நான் சொன்னதை எழுதி கிழித்தவாக்கிட்டீங்களே!புதிய கோணம்-புதிய பார்வை.சபாஷ்.
சத்தியமான வார்த்தை அ.த.
படத்தையும் கருத்தையும் பாராட்டினதுக்கு நன்றி.
அடிக்கடி வாங்க.
நன்றி சமுத்ரா.
உங்களின் தொடர்ந்த வாசிப்பும் பாராட்டும் எனக்கு டானிக்.
தொடர்ந்து வாங்க.
உங்க ப்ளாக்குக்கும் இன்று வந்தேன்.காமு கதை படித்தேன்.நல்லா எழுதியிருக்கீங்க.எழுத எழுத எழுத்து வசப்படும்.
அங்க எழுத முடியல.இங்க எழுதிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.அடுத்த தடவை அங்கேயே எழுதிடறேன்.
நன்றி வித்யாஷங்கர் முதல் தடவை வந்ததுக்கு.நான் உங்க ரசிகன்.
பேசினபடி வந்து கருத்து சொன்னதுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க.
நன்றி நிலாமகள்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.நீங்க இல்லாம பின்னூட்டப் பகுதியே வெறிச்சோடிப் போச்சு.
நன்றி அருணா.
பாராட்டில் நெகிழ்கிறேன்.
என்னடா ரிஷபனைக் காணோமேன்னு பாதை மேல கண்ணை வெச்சுப் பாத்துக்கிட்டுருந்தேன்.கடைசியா வந்துட்டீங்க.கிராமத்துக்குப் போனதுனால லேட்டோ?
நன்றி ரிஷபன்.
இரவு பூபாளமும் சிலர் ரசிக்கலாம் ....
சூரியன் உச்சத்திலிருக்கும் போது தான் நிழல் இருப்பதில்லை ..
இல்லையா சுந்தர்ஜி ?
பிச்சுட்டீங்க பத்மா.
கவித கவித.சபாஷ்.நன்றி.
MUDIPAVATRAI MUDIYAATHAVANIN MUYARCHIKAL MOOLAM MUDIKKA MUYALKIREERKALAE SUNDARJI. ITHU SARIYAA, NIYAAYAMAA. ( These comments are made from my sons laptop. this does not have the tamil software down loaded. )
aaha! :)
இயலாதவற்றின் மூலமாக இயல்கிறேன்.
இது தவறா?அநியாயமா?
சொல்லுங்கோ பாலு சார்.
ஓஹோ:).
நன்றி மாதங்கி.
கருத்துரையிடுக