எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.
ஓணானுக்கு ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.
பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றைஅடி.
நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.
மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.
மீனுக்கு வலைவீச்சு.
யானைக்குப் பெரும்பள்ளம்.
மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும்பாரம்.
ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.
41 கருத்துகள்:
//வாழாதிருந்து சாகிறான் மனிதன்
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்//
என்னைப் பாதித்த வரிகள். நல்ல கவிதையாய் எழுதிக் கொண்டு இருக்கும் வாழ்த்துகள்.
உங்களுக்கு ஒரு பொறி.. கவிதை தீப்பற்ற!
சுந்தர் சார் !!! ரிஷபன் சொல்ற மாதிரி ஒரு சின்ன விசயம் கிடைச்சாலும் போதும் உங்களுக்கு கவிதை எழுத.. ஆனா இந்த கவிதை பெரிய விசயம்.. அபாரம் சார் ...
Last 4 lines r Extra ordinary
மனம் நிரப்பியது உங்கள் கவிதை.வாழ்த்துக்கள்
வழியிருந்தும் சாகிறான் வலியிருந்தும் வாழ்கிறான் உண்மைதானா அண்ணா
நம்ம பகுதிக்கும் கொஞ்சம் வந்து செல்லுங்கள் அண்ணா நெடுநாட்கள் ஆகிறதே தங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்கேன்
மனிதனின் இயல்பை மனிதனாய் இருந்து புரியவைத்தீர்கள் சுந்தர்ஜி !
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb. Highly superb. Highly superb. Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb. Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb. Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb. Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb.
Highly superb. Highly superb. Highly superb. Highly superb.
எல்லார்க்கும் ஒரே நிகழ்வு தான்! உங்களுக்கு மட்டும் அது எப்படி கவிதையாய் மலர்கிறது!
நல்லாருக்கு சுந்தர்ஜி.கவிதையும் திரு.ஹரணியின் வாழ்த்தும் :)
நான எழுத நினைத்ததெல்லாம் வெங்கட், ரிஷபன் & ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி மூவரும் அழகாக எழுதி விட்டார்கள். அவற்றையே நான் வழிமொழிகிறேன்.
கவிதையின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது, அந்தக் கடைசி வரிகள். பாராட்டுகள்.
இது போன்ற கவிதைகள் சில நேரம் வாழவும், வாழ்வை ரசிக்கவும் ,சாக/சாவை மறக்கவும் கற்றுக் கொடுக்கின்றன ..
வாவ் சுந்தர்ஜி
பேராசிரியர் சொன்னதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.
Highly superb. Highly superb
அருமை
பின்னதிலும் இதன் ஈர்ப்பு கூடுதல் சுந்தர்ஜி.வாழாதிருந்து சாகிற மனிதன் மிகவும் பொருள் கொண்டு வருகிறது.
நன்றி ரிஷபன்.
நீங்கள் என்னை வாசிப்பது என் பலம்.
என் தோட்டத்தின் மேலும் ஓர் அழகான மலர் உங்களின் ரசனை வெங்கட்.
ஆழ்ந்த ரசனைக்கு சலாம்.
நன்றி ராமசாமி.
எல்லாம் ரசித்துச் சாப்பிடுபவர்களால்தான் சமையல் நளபாகமாகிறது.உங்கள் ரசனையும் அப்படியே.
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றி சமுத்ரா.
அடிக்கடி வாருங்கள்.
நன்றி நாக்ஸ்.உங்கள் பார்வை கூர்மையானதும் தேர்வானதும்.
எல்லோரின் பதிவுகளிலும் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் உங்களை அடையாளம் காட்டுகின்றன.
நிரம்பிய மனம் அறிந்தேன்.
முகமறிந்தேனில்லை என் நண்பரே!
நன்றி.தொடர்ந்து வாருங்கள்.
கவிதைக்கும் கவிதையால் பின்னூட்டம் தினேஷின் சிறப்பு.
உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நானும் மனிதன்தானே ஹேமா!
கவிதை சுட்டும் திசையில் என் தவறுகளும் இருக்கின்றன.என்னைத் திருத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்தக் கவிதை.
ஹரணி!அன்பில் நெகிழ்ந்து போனேன்.இதற்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் மேலும்.
எண்ணிப்பார்க்கையில் நூறு வாழ்த்துக்களும் அதற்குப் பின்னால் உங்கள் கபடமில்லா மனமும் தெரிந்தது.
உங்களுக்கு எப்படிக் கதையாகவும் பாட்டாகவும் மலர்கிறதோ அப்படித்தான்.
எல்லாம் நீங்கள் போட்ட ராஜபாட்டையில்தான் இந்தச் சக்கரமும் உருள்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.
நன்றி சைக்கிள்.
உங்கள் கவிதைக்கு ஹரணி இட்ட பின்னூட்டமும் நினைவில் அசைகிறது சைக்கிள்.
கேம் கேம் டாம்.சரிதானே?
கடைசியா கடைசி வரியைப் பத்தி நீங்க எழுதியிருந்தது முதல்த் தரமான பாராட்டா இருந்தது கோபு சார்.நன்றி.
சாக வைக்குது உங்க பாராட்டு.நன்றி பத்மா.
கொன்னுட்டீங்க பத்மான்னு எழுதறதுக்குப் பதிலா இப்பிடி மாத்தி எழுதிப் பாத்தேன்.தப்பா எடுத்துக்காதீங்க.
ஏய் சிவா!நல்லாத் தப்பிக்கப்பாக்கறீங்க!ஒங்கள கவனிச்சுக்கறேன் அப்பறமா.
இன்னுங் கொஞ்சம் பாராட்டக் கூடாதா கௌரிப்ரியா?
சும்மாச் சொன்னேன்.பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க.
உங்கள மாதிரி எழுத ட்ரை பண்ணினேன் காமராஜ்.நல்லாயிருந்தா அது ஒங்களுக்குத்தான்.
படத்தில், அம்மாட்டின் வாயில் புல் வாழவேண்டியும்,
கண்ணில் நீர்த்தடம் வாழ்ந்ததை நினைந்துமா?
ஆள நினைத்தவன், வாழ மறக்கிறான் போலும்.
உலகில் மற்ற ஜீவராசிகள் சாவைப்பற்றி நினைக்கின்றனவோ என்பது தெரியாது. ஆனால் மனிதன் மட்டும் சாவை நினைத்து வாழும்போதும் வாழாதிருந்து சாகிறான். IT IS A PITY. சிந்திக்கத்தூண்டும் கவிதை.
இறுதி வரிகளில் நானும் சிக்கி தவிக்கிறேன் ஜி
உங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன் வாசன்.
ரசனையின் தேர்ச்சியால் பல சமயங்களில் அடுத்த கவிதைக்கு அடி எடுத்துக் கொடுக்கிறீர்கள் வாசன்.
சீக்கிரம் கவிதை எழுத ஆரம்பியுங்கள்.காத்திருக்கிறேன்.
நீங்கள் பார்த்திருப்பது நான் பார்க்காத கோணம்.
அருமை பாலு சார்.
எழுதிமுடித்த வலியை நீங்கள் சிக்கித் தவிக்கையில் நான் அனுபவிக்கிறேன் வேல்கண்ணன்.
cha! sir... the way you ended it-- so abrupt... u left it with a truth too terrible- yet placed it there with such simplicity! one can't miss it there!
Kudos to you!
நிறைவான கவிதை
கவிஞனால் விடப்படும் வெற்றிடங்கள் அந்தக் கவிதையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.
ஆழ்ந்த ருசியறிதல் உஙளுக்கு.நன்றி மாதங்கி.அடிக்கடி வாருங்கள்.
நிறைவான மனதுடன் வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் நன்றியும் அப்பாதுரை.
கருத்துரையிடுக