கொஞ்ச நாள் முன்னால் சித்தர்களைப் பற்றிய
பதிவில் தொடரும் போட்டிருந்தேன்.தொடர்கிறேன்.
சித்தர்களில் சுவாரஸ்யமான வரலாற்றுக்குப் பஞ்சமில்லாதவர் சிவவாக்கியர் தான். இன்றைக்கு மேஜிகல் ரியலிஸம் என்று ஆவென்று வாயைப் பிளக்கும் நாம் கொஞ்சம் சிவவாக்கியரின் கதையைப் பார்த்தால் வாயை மூடிக்கொண்டு விடுவோம்.
பிறக்கும்போதே சிவசிவ என்றபடிப் பிறந்ததால் இவர் பெயர் இப்படி. இனி சி.வா.
சிறுவயதிலேயே ஒரு குருவிடம் வேதங்கள் கற்ற சி.வா. காசியைப் பற்றிக் கேள்விப்பட்டுக் காசிக்குச் சென்றார். அங்கே ஒரு சித்தர் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய சி.வா.வை வரவேற்று அவரின் சரக்கை ஆழம் பார்க்க விரும்பிய அந்தச் சித்தர் தன்னிடம் இருந்த காசுகளைத் தன் தங்கை கங்காதேவியிடம் கொடுத்துவிட்டுக் கசப்பான ஒரு பேய்ச்சுரைக்காயின் கசப்பையும் கழுவிக்கொண்டு வரச்சொன்னார்.
சொன்னபடிக்கு எதுவும் பேசாமல் நேரே கங்கைக்குச் சென்று கங்கையில் இறங்கித் தண்ணீரைத் தொட்டார். கங்கையிலிருந்து வளையலணிந்த கையை வெளியில் நீட்ட அக்கரத்தில் காசுகளை சி.வா. வைக்க அதைப் பெற்றுக்கொண்டு அந்தக் கை தண்ணீரில் மறைந்தது.
சிறிதும் இச்செயலால் சலனப்படாமல் பேய்ச்சுரையை நீரில் கழுவிக்கொண்டு சித்தரிடம் வந்துசேர்ந்தார் சி.வா. அடுத்த சோதனையை எடுத்து விட்டார் அந்தச் சித்தர்.
”இதோ இங்கிருக்கும் தோல்பையிலுள்ள நீரிலுள்ள கங்கையிடம் நீ கொடுத்த காசுகளைத் திருப்பிக் கேள்.” என்றதும் சி.வா. அப்படியே செய்தார். சித்தரின் தோல்ப்பையின் தண்ணீரிலிருந்து வெளிப்பட்ட கையொன்று சி.வா.வின் கைகளில் காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. இப்போதும் சி.வா. சலனமின்றி அமைதியாய் இருந்தார்.
சி.வா.வின் முதிர்ச்சியைக் கண்ட அந்தச் சித்தர் அவரைக் கட்டித் தழுவி, ” சி.வா. முக்தியடையும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி சிறிது மணலும் பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “ இவற்றைச் சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.
சி.வா. அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினார். ஒரு பகல்பொழுதில் நரிக்குறவர்கள் கூடாரமிட்டிருந்த பகுதி வழியாகச் செல்லுகையில் வெளியில் வந்த ஒரு கன்னிப்பெண் சி.வா.வைப் பார்த்து உள்ளுணர்வு தூண்டியவளாய் “உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தரட்டுமா?” என்றாள். ”இந்த மணலையும் பேய்ச்சுரைக்காயையும் உன்னால் சமைத்துத் தர முடியுமா?” என்று கேட்டார் சி.வா.
அந்தக் குறப் பெண்ணும் அதற்குச் சம்மதித்து சமைக்கத் துவங்கினாள். மணல் பொலபொலவென அருமையான சாதமாகவும் பேய்ச்சுரைக்காய் சுவைமிக்க கறியாகவும் மாறியது. சி.வா.வும் அதை ரசித்து உண்டுவிட்டுத் தான் தேடிய பெண் இவள்தான் என் அறிந்தார்.
அந்த சமயம் காட்டுக்குச் சென்றிருந்த அவள் பெற்றோரும் உறவினரும் திரும்பிவர அவளைத் தனக்கு மணம் முடித்துத் தரக் கேட்டார். அதற்கு அவளின் பெற்றோர் சம்மதித்து திருமணத்திற்குப் பின்னும் தங்களுடன் தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்க சி.வா.வும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
உடனே தன் தவ வாழ்க்கைக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டு ஹனிமூன் போய்விடாமல் தொடர்ந்து தவ வாழ்க்கையையும் மேற்கொண்டார். மற்றொரு புறத்தில் குறவர்களின் குலத் தொழிலையும் கற்றுக்கொண்டார்.
திடீரென ஒருநாள் காட்டிற்குள் போய் ஒரு கனத்த மூங்கிலை வெட்டத் தொடங்கினார். மூங்கில் கழியிலிருந்து பொற்துகள்கள் சிதறிக் கொட்டத் தொடங்கின. “சிவபெருமானே!இது நியாயமா?உன்னிடம் முக்தியைக் கேட்கையில் இப்படிப் பொருளாசையூட்டலாமா?” என்று பதறி ஓடினார்.
அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அந்த மூங்கிலிருந்து எமன் வருகிறான் என்று மூங்கிலில் இருந்து பொற்துகள்கள் ஒழுகுவதைக் காட்ட அவர்கள் அசந்து போய் சி.வா.வை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஒரு பெரிய மூட்டையளவு கட்டிமுடிக்கவும் இருள் சூழத் தொடங்கவும் சரியாக இருந்தது.
இருவர் அங்கேயே மூட்டைக்குக் காவலிருக்க இருவர் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு காவலிருந்த இருவரையும் கொன்றுவிட்டு மொத்தத் தங்கத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள எண்ணி அவர்களுக்கான உணவில் விஷத்தைக் கலந்து காவலுக்கு இருந்தவர்களிடம் திரும்பினார்கள்.
மூட்டைக்குக் காவலாக இருந்த இருவரும் பக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் சேகரித்து வரச்சொல்லி வந்த இருவரையும் அனுப்பி அவர்கள் பின்னாலேயே சென்று கிணற்றுக்குள் நீருக்காகக் குனிகையில் அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளிக் கொன்றுவிட்டுத் திரும்பி விஷம் உணவில் கலக்கப்பட்டிருப்பது அறியாமல் அந்த உணவையே உண்டு அவர்களும் சிறிது நேரத்திலேயே இறந்தனர்.
பொழுது புலர்கையில் வழக்கம்போல் காட்டிற்கு வந்த சி.வா. தான் சொன்னபடி மூங்கிலின் பொற்துகள்களின் வழியே எமன் வந்து இவர்கள் உயிரைப் பறித்துவிட்டானே என வருந்தினார்.
மற்றொரு முறை சி.வா. வானவீதியில் சென்று கொண்டிருந்த கொங்கணச்சித்தரைச் சந்திக்க நேர்ந்தது. பின் இருவரும் அடிக்கடி சந்திக்கலாயினர். சி.வா. மூங்கில்க்கூடைகள் முடைந்து பொருளீட்டி வறிய வாழ்க்கை வாழ்வதைக்கண்ட கொங்கணர் இரும்பைத் தங்கமாக்கும் வரத்தைக் கையில் வைத்திருந்தும் சி.வா. இப்படி துன்பத்திற்குள்ளாவது தாங்காமல் சி.வா. வெளியில் போயிருந்த ஒருநாள் அவர் மனைவியிடம் சில இரும்புத் துண்டுகளை வாங்கித் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
சி.வா. திரும்பியதும் நடந்ததைக் கூற சி.வா. சிரித்தபடி அவற்றைக் கிணற்றில் போட்டுவிட்டு வரச் சொன்னார். மனைவியிடம் தங்கத்தைத் தூக்கிப்போட்டது உனக்கு வருத்தமா என்று கேட்க நோ.நாட் அட் ஆல் என்றார் அவர் மனைவி.
இப்படியாக சி. வா. பற்றிக் கூறப்படும் வரலாறு நிறைவு பெறுகிறது.
பழமையான கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த நம்மிடமும் கிரேக்கர்களிடமும் இது மாதிரியான இதிகாசத் தன்மை கொண்ட கதைகள் ஏராளம்.
இது கற்பனையா நிஜமா என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையின் மனதோடு நாம் கலைவோமானால் நம்மிடம் இது போன்ற வளம் மிக்க கதைகள் நிறையத் தோன்றும்.

30 கருத்துகள்:
ஒரு நந்தவனத்தில் நுழைந்த சுகம்
உங்கள் பதிவினுள் நுழையக் கிடைத்தது
தொடர்ந்து வருவேன்.வாழ்த்துக்கள்
சுந்தர்ஜி..
கதை சொல்லும் மரபும் கதைகேட்கும் மரபும் நமக்கு பாட்டி கதை சொல்வதிலிருந்து அழுத்தமாக உண்டு. கதைகேட்பதும் சொல்வதும் சாதாரணமானதல்ல அது ஆழமான நற்பண்புகளை சிறுவயதிலிருந்தே உருவாக்கத் துணைபுரிவது. அதன் தொடர்ச்சியாகத்தான் அம்புலிமாமா..உள்ளிட்டவைகள். இன்றைக்கு அது சீரழிந்துவிட்டது வருத்தமாக உள்ளது. பிள்ளைகள் தயாராக உள்ளன கதை கேட்க. நாம்தான்...சிவவாக்கியர் மட்டுமல்ல இன்னும் ஏராளமான அர்த்தம் பொதிந்த கதைகள் நமது தமிழில் வேரோடிக் கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாத்து தலைமுறைகளுக்கு உரக்கச் சொல்லவேண்டும். நல்ல பதிவு சுந்தர்ஜி. நடை சரளம் மனதைத் தொடுகிறது. அழகு.அர்த்தம். அற்புதம். ஆளுமை. ஆனந்தம்.
//கதைகேட்பதும் சொல்வதும் சாதாரணமானதல்ல அது ஆழமான நற்பண்புகளை சிறுவயதிலிருந்தே உருவாக்கத் துணைபுரிவது.//
ஆமாம் கல்சராய் அணிந்த உருவத்தில்
ஊர் பாட்டியின் குரல் வெளிவருகிறது.
அழகு.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள் .. கதையும் அதுபோலத் தான் உள்ளது.
இன்றும் இது போல அபூர்வ சக்தியுடையவர்கள் ஆங்காங்கே ஒரு சிலர் உள்ளனர்.
அவர்கள் தங்களையும் தங்கள் சக்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மிகச் சாதாரணமானவர்களாகவே நடமாடி வருகின்றனர்.
நாம் அவர்களை அறிவதோ அப்படியே அறிந்து கொண்டாலும், அவர்கள் மேல் நம்பிக்கை வைப்பதோ சற்று சிரமமான காரியம் தான்.
தற்கால நாட்டு நடப்பு அப்படி உள்ளது.
பகிர்வுக்கு நன்றி.
எந்தக் கதையாயிருந்தாலும்
அதனை ஆராய்ச்சிக்குட்படுத்தாமல்
அதிலிருந்து தேவையானவற்றை
மட்டும் எடுத்துக் கொள்வதே
நலம்.
s. we should isolate from this material life as much as possible.
சித்துகள் மூலம் சித்தர்களை அறிந்து பின் தத்துவ நெறியில் திருப்பி விடப் படுகிறோம்..
//பழமையான கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த நம்மிடமும் கிரேக்கர்களிடமும் இது மாதிரியான இதிகாசத் தன்மை கொண்ட கதைகள் ஏராளம்.//
நல்ல தகவல்!
sooper-dooper... en paatti itha pola nirrrrrraaaaiiiiya katha solli iorukkiraal enakku... :) maaya manthira katha-nnaa enakku romba ishtam! niraiya itha pola thamizh kathaikalellaam puththakaththilernthu padichchu kaattuvaanga enga veettula enakku... antha ninaivellaam vanthaachchu! :)
very interesting...
"gold from iron"-- alchemy nu sollaraanga ippo atha. itha pola kathaigal suggest- namma ulagame "mutual borrow" naala thaan uruvaakkap pattirukku-nnu. culture and civilization evalo thaan deep rooted-aa oru region ku utpattathu-nnu namma ninaiththaalum, antha kaalaththula- pala great sinthanaigaloda otrumaiya vechchu paakkum pothu- "travel" evalo nadanthirukku.. "travel" oda athu "a travel of thought" nu sollanum. Amazing!
and to think- ithu ellaame technological development ethuvume illaatha kaala kattaththula nadanthathu-ngarathu- really mind blowing!
great post sir.... :) thanks for sharing!
என் பேரக்குழந்தைகளுக்கு சொல்ல இன்னுமொரு கதை. I APPRECIATE THE DIFFERENT TOPICS YOU CHOOSE TO WRITE.
WITH BEST WISHES.
அருமை
அருமை . சதுரகிரி நினைவைத் தூண்டி விட்டீர்கள்
நீங்கள் தொடும் விசயமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
போன முறை விலைவாசியை பகடி செய்து விட்டு
இந்த முறை சித்தர்களை கைகளில் அள்ளி காட்டுகிறீர்கள்.
உங்களை பற்றி வரைந்த என் மனச் சித்திரம்
தன்னை தானே மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிறது
வெய்யிலில் உலரும் ஓர் நீர் ஓவியமென.
உங்களை இப்படி சொல்லலாமா ?
- பிடிக்குள் சிக்காத பிரம்மம் -
/// வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது ///
சித்தர்கள்!!!!
அனுபவமில்லை என்றாலும் பூட்டிய என் கதவு சாவி துவாரத்தின் வழி கசிகிறது வெளிச்சம்
நான்றி சுந்தர்ஜி
நன்றி ரமணி சார்.
முதல் வருகை என்னைக் களிப்பூட்டியது.அடிக்கடி வாருங்கள்.
//இன்னும் ஏராளமான அர்த்தம் பொதிந்த கதைகள் நமது தமிழில் வேரோடிக் கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாத்து தலைமுறைகளுக்கு உரக்கச் சொல்லவேண்டும்.//
நன்றி ஹரணி.நம் பாரம்பரியக் கலாச்சாரக் கதைகளை நாமும் சொல்ல முயல்வோம்.
பாட்டியின் குரலை அடையாளம் கண்டுகொண்ட பேராண்டிக்கு நன்றி.
நன்றி காமராஜ்.
//நாம் அவர்களை அறிவதோ அப்படியே அறிந்து கொண்டாலும், அவர்கள் மேல் நம்பிக்கை வைப்பதோ சற்று சிரமமான காரியம் தான்.//
பிரச்சனையே இதுதான் கோபு சார்.
நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இதுதான்.
எல்லோரையும் நம்பலாம்.நஷ்டம் கொஞ்சம்தான்.
எல்லோரையும் சந்தேகப்பட ஆரம்பித்தால் நரகம்தான்.
சரியான வார்த்தை மதுமிதா.
உங்களின் வார்த்தைகளில் நல்ல முதிர்ச்சி இருக்கிறது நாக்ஸ்.நன்றி.
சித்தர்களின் பாதை நமக்கு புதிர்கள் போட்டு விடைகளைத் தேடச் சொல்பவை.விடைகளை உணரும்போது புதிர்கள் புதிர்களாய் இருப்பதில்லை.நன்றி ரிஷபன்.
முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ஜனா சார்.
அடிக்கடி சந்திப்போம்.
அல்கெமிஸ்ட்(பாலோ கோய்லோ) படித்தபின் எனக்குத் தோன்றியது இதுதான்.
இப்படிப்பட்ட பல தத்துவச் சரடுகள் நம்மிடம் எத்தனை எத்தனை?
இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்கிற பேராசையின் உந்துதல்தான் இது.
ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி மாதங்கி.
கதை கேட்கும் பொறுமையான பேரன்கள் பெற்றிருப்பதே பாக்கியம் பாலு சார்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராம்ஜி.அடிக்கடி வாருங்கள்.
நன்றி சிவா.சதுரகிரி பற்றியும் எழுத இருக்கிறேன் விரைவில்.
உங்கள் வார்த்தைகளுக்கு முன்னே தலைபணிகிறேன் கமலேஷ்.
தொடர்ந்து வாசியுங்கள்.அது எனக்குப் பெரும் ஆனந்தம்.
//கொங்கணச்சித்தரைச் சந்திக்க நேர்ந்தது. பின் இருவரும் அடிக்கடி சந்திக்கலாயினர்.//
இவர்தான், "கொக்கென்று நினைத்தீரோ, கொங்கணரே?" எபிசோடுல்ல வற்ர வில்லனா சுந்தர்ஜி?
சாரி வாசன். கொஞ்சம் லேட் உங்களுக்கு பதில் சொல்ல.
கொங்கணர் ஏழாம் நூற்றாண்டுச் சித்தர்.கொங்கு நாட்டவர்.அவர் போகரிடமும் திருவள்ளுவரிடமும் சீடராக இருந்தவர்.
ஒரு தடவை யோகத்தில் மரத்தின் கீழமர்ந்து லயித்திருக்கும் போது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது.அதைப் பார்வையாலேயே சாம்பலாக்கினார்.
யோகத்தை முடித்து ஊருக்குள் பிச்சை கேட்டு திருவள்ளுவரின் வீட்டு வாயிலில் வெகுநேரம் நின்றார்.கணவருக்குப் பரிமாறிக்கொண்டிருந்த வாசுகி வாயிலுக்குப் பிச்சையுடன் வந்தபோது சினத்துடன் உற்றுப் பார்த்தபோது வாசுகி சொன்ன கமெண்ட்தான் ”கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா”.
நன்றி வாசன் பொறுமைக்கு.
YES IT is wonderful. its awake my Self-confidence
Kadhai ketka thayar oru kuzhandhai manadhudan
கருத்துரையிடுக