30.1.11

அஞ்சலி


யாரொருவர்
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

30 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நன்றி.

வருடத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நமது அரசியல்வாதிகளுக்கு இவரின் நினைவு வரும். அவரது சமாதியில் ஆரவாரமாக மலர் அஞ்சலி செலுத்தி அவர் நாடிய அமைதியைக் குலைத்துக் கொண்டு இருப்பார்கள் :(

மாதவி சொன்னது…

ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

அமைதியான ஆரவாரமில்லாத கலாபூர்வமான அஞ்சலி சுந்தர்ஜி.

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

இன்று மஹாத்மா
காந்தியை நினைக்கும்
அனைவரின் உள்ளங்களிலும்
சாந்தி நிலவட்டும் !

ரிஷபன் சொன்னது…

நல்ல விஷயங்களை-மனிதர்களை யாராச்சும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது இப்போதெல்லாம்..
என் அஞ்சலியும்.
ஒரு அடங்காத குமுறல் மனதில் தகிக்கிறது சுந்தர்ஜி. எல்லா வளமும் இருந்தும் நாம் இன்னமும் ஊழல்வாதிகளின் பிடியில் இருக்கிறோம். எந்த அரசியல்வாதியையும் தவிர்த்து சொல்லவில்லை.. ஒட்டு மொத்த அமைப்பே மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டும்.

தினேஷ்குமார் சொன்னது…

என் அஞ்சலியும்

அன்புடன் அருணா சொன்னது…

என் அஞ்சலியும்.

Ramani சொன்னது…

அண்ணலின் நினைவு நாளில்
ஒரு நிறைவான கவிதை
தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

மனங்கனிந்து அஞசலி எழுதியுள்ளீர்கள் உங்களுடன் என் சிரமும் தாழ்கிறது அஞ்சலி செலுத்த.

Lakshmi சொன்னது…

என் அஞ்சலியும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-

அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-
இருக்கட்டும்.//

அருமை அருமை நண்பரே....

vasan சொன்னது…

குறைவான குறைக‌ள் கொண்டிருந்த‌ பிடிவாத‌க்கார‌ அஹிம்சா வாதி.
க‌விக்குயில், கேலியாய் கூவி(றி)ய‌து போல், எளிமைக்காய், ஏராளமாய் செலவு வைத்த சிக்க‌ன‌க்கார‌ர். ராமராஜ்ய‌த்திற்கு ஆசைப் ப‌ட்டு, ராவ‌ண‌னுக்கு பிர‌த‌ம‌ர் ப‌தவி த‌ந்த‌வ‌ர்.
இந்தியாவிலிருந்த‌ ஒரு சில உத்த‌ம‌, உண்ண‌த‌த் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்.
ம‌னித‌ர்க‌ளை அறிந்த ம‌கான், ம‌த‌வாதிக‌ளைப் அறியா ம‌க‌ன்.

ஹேமா சொன்னது…

400 பேர் வேலை செய்யும் இடத்தில் சுவிஸ்காரரான என் உயர் அதிகாரியின் அறையில் காந்தித் தாத்தாவின் வரிகளோடு படமும்.மகானுக்கு நினைவின் மலர்த்தூவல் !

சிவகுமாரன் சொன்னது…

\\அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்///

அவருக்கு மட்டுமே இருக்கும். இன்னொரு காந்தியை பெற்றெடுக்க இன்றைய இந்தியாவிற்குத் தகுதியில்லை என்றே நினைக்கிறேன். நான் நினைப்பதும் தவறோ, அடிமைப்பட்டவர்களுக்குத்தானே மீட்பர் வரவேண்டும் ?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்.அமைதியைக் குலைப்பதில் இருக்கும் ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் யாரெனத் தெரியவில்லை மாதவி.

எப்போதாவது வந்து சொல்லும் கருத்துகளுக்குப் பின் உங்கலைத் தேடி பின் மறக்கிறேன்.

அடிக்கடி வாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அமைதிக்கான் ப்ரார்த்தனை உங்கள் வார்த்தைகளில் கோபு சார்.நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

கந்தியைப் பற்றியெண்ணும்போது எத்தனை பெரிய வெற்றிடத்தில் நாம் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது ரிஷபன்.

எல்லாமும் மாற்றம் பெறும் ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

அஞ்சலியில் பங்கெடுத்துக் கொண்ட தினேஷுக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

அருணாவுக்கும் அஞ்சலியில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நிறைந்த மனதுள்ள உங்களின் வார்த்தைகளில் நிறைகிறது என்னுள்ளம்.

நன்றி ரமணி சார்.

சுந்தர்ஜி சொன்னது…

மனப்பூர்வமான வார்த்தைகளுக்கு நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

அஞ்சலிக்கு நன்றி லக்ஷ்மியம்மா.

சுந்தர்ஜி சொன்னது…

சரியான முடிச்சில் கைவைத்த மனோவுக்கு முதல்வருகைக்கும் ரசனைக்குமாய் என் நன்றிகள்.

அடிக்கடி வாங்க மனோ.

சுந்தர்ஜி சொன்னது…

சுருக்கெழுத்தில் விரிவான விமர்சனம் அருமை வாசன். நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

ஸ்விஸ்ஸில் காந்தியஞ்சலியும் அங்கு பொருத்தமாய் கவிதாயினி ஹேமாவும்.

எத்தனை பெருமை நம் எல்லோருக்கும்?

சுந்தர்ஜி சொன்னது…

காந்தியின் இழையுள்ள எல்லாருமே காந்திதான்.

இறைவன் நீக்கமற எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான் என்பதற்குப் பொருள் எதுவோ அது போலத்தான் சிவா.

நிலாமகள் சொன்னது…

-யாரொருவரின்சுவடுகள் யாரொருவரும் செல்லாதஅடர்வனங்களில்இறுதிவரை பயணித்ததோ-பயணிக்குமோ//

'வல்லான் வகுத்ததே வாய்க்கால், வழி ' என்பார்கள். அடியொற்றி செல்வோம் ஜி!

சுந்தர்ஜி சொன்னது…

இது பின்னூட்டமல்ல நிலாமகள்.முன்னூட்டம்.

நன்று.நன்றி.

Vel Kannan சொன்னது…

பல நிமிடங்கள் மவுனமானேன் ..

சுந்தர்ஜி சொன்னது…

உங்களுக்கானஎன் காத்திருப்பு வீண்போகவில்லை வேல்கண்ணன்.

சொற்ப வார்த்தைகளில் மயக்கிவிடுகிறீர்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...