12.1.11

விலை-வாசி


ஒரே முறை ஆட்சியிலிருந்த ஜனதா அரசின் பெரிய சாதனையாக ஒரு அளவுச்சாப்பாட்டின் விலை ஒரு ரூபாய் என்ற கட்டுக்குள் 1977ல் அறிமுகப்படுத்தப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றது. அச் சாப்பாட்டுக்கு ஜனதா சாப்பாடு என்ற பெயர் சூட்டப்பட்டு சக்கைபோடு போட்டது சரித்திரம்.

அந்தச் சரித்திரம் திரும்புகிறது நண்பர்களே! கைகள் தட்டி ஆரவாரியுங்கள்.

விலைப்பட்டியலைக் கீழே பார்ப்போம்.

தேநீர்-ரூ1.
சூப்- ரூ5.50
தால்-ரூ2.50.
சைவச் சாப்பாடு(பருப்பு,பொரியல், 4சப்பாத்தி, சாதம்/புலவ், தயிர்,சாலட்) ரூ12.50
அசைவச் சாப்பாடு-ரூ22.50
தயிர்சாதம்-ரூ11.
வெஜ் புலவ்-ரூ8.
சிக்கன் பிரியாணி-34.
மீன் கறி-சாதம்-ரூ13.
ராஜ்மா சாதம்-ரூ.7.
தக்காளி சாதம்-ரூ.7.
மீன்வறுவல்-ரூ.17.
கோழிக்கறி-ரூ20.50.
சிக்கன் மசாலா-ரூ24.50.
பட்டர் சிக்கன்-ரூ.27.
சப்பாத்தி ஒன்று-ரூ1.
சாதம்(ஒரு ப்ளேட்)-ரூ.2.
தோசை-ரூ.4.
கீர்-ரூ5.50
பழக் கேக்-ரூ9.50.
பழ சாலட்-ரூ.7.

இந்தியாவில்தான் மேலே சொன்ன விலைப்பட்டியல்.

வெங்காயம் கிலோ ரூ100 விற்ற போதும், கத்தரிக்காய் கிலோ ரூ80 ஆன போதும்-பருப்பு-அரிசி-எண்ணெய்-பெட்ரோல்-சமையல் வாயு-முட்டை-டீசல் போன்ற அத்தியாவசியமான அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைவாசி வழி தெரியாத மன்மோகன் சிங்கிலிருந்து வழியில்லாத சராசரிப் பாமரன் வரை-பணவீக்கத்தை வாட்டத்துடன் கவனித்து வரும் ப.சிதம்பரம் தொடங்கி வீங்காத வயிற்றை ஏக்கத்துடன் கவனிக்கும் சித்தாள் வரை-எல்லோரையும் சமமாய்ப் பீடித்த போதும் இந்தியாவில் நிலவும் இந்த விலைவாசி எத்தனை காருண்யமும் மேன்மையும் பொருந்தியது!

இது வாழ வழியற்றவர்களுக்காக-எந்தவித சேமிப்பும் இல்லாத திக்கற்றவர்களுக்காக-மாதம் ரூ.80,001 மட்டும் சம்பளமாகப் பெறும் ஏழைகளுக்காக இந்தியப் பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப் படும் உணவின் விலைப்பட்டியல்.

நாக்கைத் தொங்கப்போட்டிருந்தால் எடுத்து உள்ளே போட்டுக்கொண்டு முதலில் ஒரு ராஜ்யசபா உறுப்பினராகவாவது ஆக முயற்சி பண்ணுங்கள்.அப்புறம் இதையெல்லாம் சாப்பிடலாம்.
அதுக்கு இன்னும் குறைந்தது பத்து வருஷமாவது ஆகுமேன்னு கவலைப்படறீங்களா?அவசியமில்லை ஜென்டில்மேன்!அதுவரை அப்படி ஒன்றும் விலைவாசி ஏறிவிடாது.(பாராளுமன்ற உணவகத்தில்)

32 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

மெயிலில் வந்தபோதே குமுறியது.. மனசு.
கணக்கில் வரும் சம்பளம் இது.. வராத கணக்கு?!

தினேஷ்குமார் சொன்னது…

பரிதவிக்கும் நெஞ்சங்கள்
பசிக்கு பலியாகிறது
பாவம் சுமந்து
குருதி கறந்த
கரங்களுக்கு
மலிவு விலை உணவு விடுதி
மயானம் மயானம் ...........

வினோ சொன்னது…

/ நாக்கைத் தொங்கப்போட்டிருந்தால் எடுத்து உள்ளே போட்டுக்கொண்டு முதலில் ஒரு ராஜ்யசபா உறுப்பினராகவாவது ஆக முயற்சி பண்ணுங்கள். /

இப்படி சும்மா கொடுத்தான் கூட அங்க போக மாட்டேன்னு ஊர் மேயிரானுங்க...

Harani சொன்னது…

நெஞ்சு பொறுக்குதில்லையே... இயலாமையுடன் நான்.

ஹேமா சொன்னது…

இதுதான் அரசியல் சுந்தர்ஜி.இங்க மட்டும்தான் புலம்பலாம்.யார் காதில விழும்.சரிபண்ணுவாங்களா!

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

விலை-வாசி[த்]தேன் எம்.பி க்களுக்கு!
விலை-வாசி[த்]தேள் நமக்கு.

எம்.பி யாக முயற்சிப்போம்
முடியா விட்டால்
மொட்டை மாடிக்குப் போய்
எம்பியாவது குதிப்போம்

சுந்தர்ஜி சொன்னது…

அடிக்கிற கொள்ளை போதாதென்று எப்பிடி சாப்பிட வைத்துக் கொழுக்க வைக்கிறது பாருங்கள் இந்தப் பாராளுமன்றக் கேன்டீன்.

குமுறுவதற்கு விஷயமா இல்லை ரிஷபன்?

அவர்களின் எந்தப் பகுதியைப் பற்றி யோசித்தாலும் குமுறல்தான்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் மீசை துடிப்பது படத்தில் தெரிகிறது தினேஷ்.

எல்லாம் மாற்றப்படும் காலத்தால்.

சுந்தர்ஜி சொன்னது…

இந்த எம்.பி.க்களுக்கு எல்லாமே இலவசமாயிட்டதுனால எதுக்குமே மதிப்பில்ல வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

சரி பண்ணுவோம் ஹரணி.

சுந்தர்ஜி சொன்னது…

ஊர் கூடித்தான் தேர் இழுக்கணும் ஹேமா.

அயராமல் எழுதவும் இதை எல்லோரிடமும் பரப்பணும்.

எறும்பு ஊறக் கல்லும் தேயும்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் மேன்மையான குணமே எல்லாவற்றையும் ஹாஸ்யமாகப் பார்ப்பதுதான் கோபு சார்.

இதையும் ரஸித்தேன்.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! விதிவிலக்கான எம்பிக்கள் உண்டு..சீதாராம் எச்சூரி பனத்தை கட்சியிடம் கொடுத்துவிடவேண்டும். கட்சி மாதம் 4500 ரூ கொடுக்கும்.டி.ராஜவும் அப்படித்தான் இடது சாரி எம்பி கள் தங்கள் சம்பளத்தை கட்சியிடம் கொடுத்து.விடுவார்கள்.அவர்களுக்கு சலுகையாக கிடக்கும் எரிவாயு,தொலைபெசி இணப்புகளைக்கூட கட்சி மூலம் தான் விநியொகிக்க வேண்டும். இவர்களுக்கு கட்சி அலுவலகத்தில் கம்யூன் உண்டு. கட்சி தலவர் பிரகாஷ் காரத்திலிருந்து தொண்டன் வரை அங்குதான் உண்வு தகவலுக்காக குறிபிடுகிறேன்---காஸ்யபன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கேவலமான ஒரு விஷயம்தான். இவர்கள் இந்த குறைந்த விலையில் சாப்பிடுவது மக்களின் பணத்திலிருந்துதான். இரண்டு மூன்று முறை விலையேற்ற முயற்சி செய்தபோது பெரும் எதிர்ப்பு இருந்ததாம் இதற்கு மாண்புமிகு உறுப்பினர்களிடம் இருந்து :(

G.M Balasubramaniam சொன்னது…

வாழ வழியற்ற, மாதம் கேவலம் ரூபாய் 80001 சம்பளமாகப் பெறும் ஏழை எம்பீக்களைப் பார்த்து நாம் ஏங்குவது தவறில்லையா சுந்தர்ஜி. பாவம் அவர்கள் . பிழைத்துப் போகட்டும். மனங் குமுறி நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன். பாருங்கள்

சைக்கிள் சொன்னது…

எல்லா சலுகைகளும் நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதற்குதான். சலுகைகளை அனுபவித்துவிட்டு பொறுப்பை உதாசீனப் படுத்துவதுதான் பிரச்சனை. தவிர சமத்துவம் பேணல் குறித்து சட்டத்தின் பார்வை இதில் இருக்கிறதாவெனத் தெரியவில்லை.

காமராஜ் சொன்னது…

சுந்தர்ஜி, இன்னும் அங்கு விலை ஏறவில்லையா.அப்புறம் எப்படி வெளியிலடிக்கிற வெயில் தெரியும்?நல்லா இருக்கட்டும்.

vasan சொன்னது…

ஏன் ம‌க்க‌ள் 'ரொட்டி' கிடைக்க‌வில்லை எனக் கூச்ச‌லிடிகிறார்க‌ள்?
'கேக்' சாப்பிட‌ வேண்டிய‌து தானே!!, பிர‌ஞ்சு புர‌ட்சிக்கு முன் ஒரு இளவ‌ர‌சி இய‌ம்பிய‌து.
இப்போ "குடிக்க‌த் த‌ண்ணியில்லை"யேன்னா, ஏன் 'கோக்' குடிக்க‌ வேண்டிய‌து தானே என்கிறது நோட்டு பார்க்கும் பன்னாட்டு நிறுவ‌ன‌ம். 'சாராயமிருக்கே' என்கிற‌து வோட்டு கேட்கும் அர‌சிய‌ல்.

சிவகுமாரன் சொன்னது…

எங்க கம்பெனி கேண்டினில கூட இவ்வளவு மலிவு இல்லையே. அடப்பாவி மக்கா ( நான் எங்க நிர்வாகத்தை சொன்னேன் )

சுந்தர்ஜி சொன்னது…

தகவலுக்கு நன்றி காஸ்யபன் சார்.

ஆனாலும் இடதுசாரிகளின் குரல் இம்மாதிரி விஷயங்களில் தங்களைத் தாண்டி வெளிப்பட்டிருக்கவேண்டும்.

மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லா சுயநலமாகத்தான் தெரிகிறது இவர்களின் செயலில்.

சுந்தர்ஜி சொன்னது…

பாராளுமன்ற மசோதாக்களில் எதிர்ப்பின்றி ஒருமித்த குரல் ஒலிப்பது எம்.பி.க்களின் சம்பள உயர்வு மசோதாவில் மட்டுமே.

இவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது தெருக்குழாயில் தண்ணீரை எதிர்பார்ப்பது போலத்தான் வெங்கட்நாகராஜ்.

சுந்தர்ஜி சொன்னது…

நம் குமுறல் அவர்களைப் புரட்டிப் போடும் பாலு சார்.

அந்தத் திசையில்தான் இனி நம் பயணம் இருக்கவேண்டும்.

என்னுடைய என்கிற குரல் இனி நம்முடைய என்கிற குரலாக ஒலிக்கத் துவங்கும் மாற்றத்தை எழுத்துக்களால் உருவாக்குவோம்.

சுந்தர்ஜி சொன்னது…

சமத்துவம் மதச்சார்பின்மை இதெல்லாம் மேகம் போல சைக்கிள்.

நீங்கள் உள்ளே போய்விட்டு திரும்பிவந்து பார்ப்பதற்குள் உருமாறியிருக்கும்.

வெட்கம் கெட்டவர்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்த்திலேயே சாபத்தின் கசப்பை இதைவிட சூடாய்க் கொடுக்கமுடியுமா காமராஜ்?நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

இவர்களின் நாட்கள் எண்ணப்படுகின்றன வாசன்.

ஒரு சுனாமி கடலின் மேலிருந்த பார்வையை மாற்றியது போல மக்களின் ஆவேசமும் கோபமும் அடித்துச் செல்ல இருக்கிறது.

சுந்தர்ஜி சொன்னது…

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் வயறெரிந்து சபித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சும்மா ஒரு கண் துடைப்புக்கு இந்த விலை.

இந்த விலையில் வளர்ந்த தொப்பைகள்தான் நமக்கு தலைமையையும் நிர்வாகத்தையும் பட்டினி கிடக்கிற மக்களுக்கு ஆறுதலும் தருகின்றன என்பது எத்தனை பெரிய முரண் சிவா?

kashyapan சொன்னது…

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு பி ரச்சினை எவராலும் எதிர்க்கப்படவில்லையா!!! சுந்தர் ஜி! தயவு செய்து பத்திரிகைகளைப் புரட்டிப்பாருங்கள்---காஸ்யபன்

சுந்தர்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்!அது பொதுவாகச் சொன்ன ஒரு கமென்ட். அவ்வளவுதான்.நான் செய்தித் தாட்கள் படிப்பதை வெகுநாட்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன்.

நம் அரசியல்வாதிகள் பயணிக்கவேண்டிய திசை இதுவல்ல.அது வலதோ இடதோ மையமோ சமயசார்போ மதவாதமோ எல்லாக் கட்சிகளும் மிகுந்த ஆயாசத்தைத் தந்துவிட்டன.இவர்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கும் முறையிலும் எனக்கு உடன்பாடில்லை.

நான் எந்தக் கட்சிக்கும் சார்பாக இதுவரை எழுதவோ பேசவோ இல்லை.எந்தக் கட்சிகளின் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

தொடங்கிய விஷயம் பாராளுமன்ற உணவக விலைவிபரம் அநியாயமானது என்பது குறித்ததுதான்.அதில் என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

kashyapan சொன்னது…

நாடாளுமன்ற உனவு விடுதியை ரயில்வே துரை தான் நடத்துகிறது.அதற்கானசெலவைகொடுக்கிறது.2009ம் ஆண்டு கணக்குப்படி சமார் 3.7 கோடி மக்களவையும்,1.77 கோடி மாநிலங்களவையும்கொடுக்கிறது.இரண்டு அவைகளும் செர்த்து 800 உருப்பினர் இருக்கலாம்.ஒரு நாளைக்கு 80 உருப்பினர்கள்பயன்படுத்துகிறார்கள். ஆனால் அங்கு சாப்பிடுபவர்கள் ஒரு நாளைக்கு 3000 பெர்.( அவை ஊழியர்கள்,சப்ராசிகள்,வாட்சர்கள்,, செக்க்யூரிடி ,தோட்ட மாலிகள்) . எர்ரண்ண நாயிடு தலைமையில் போடப்பட்ட கமிட்டி விலை பற்றி அறிக்கை எதுவும் கொடுக்க வில்லை.1950 ஆண்டு நாடாளுமன்றம் உருவானபோது ஏன் எம்.பிகளுக்கு காண்டீன் வேண்டும் என்ற விவாதம் நடந்திருக்கும். அதனப் பார்த்தால் தெரியும். அப்போது ஒரே ஒரு உறுப்பினர் தான் கம்யூனிஸ்ட்டு..இதனை சாக்காக வைத்து விபரம் தெரிந்த, காரண காரியங்களப் புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ள பதிவர்கள் இடதுசார்களை குற்றம் சொல்வது நியாயமா?---காஸ்யபன்

சுந்தர்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்!

இந்த விவாதம் நம்மை முன்னோக்கி எடுத்துச் செல்லாது.

குறை யார் மீதிருந்தாலும் களையப்பட வேண்டியதுதான்.இந்தச் சலுகைகள் போலவே கண்காணிக்கப் படாத சலுகைகள் நிறைய இருக்கின்றன.

kashyapan சொன்னது…

குறை யர்மீது இருந்தாலூம் களையப்பட வேண்டியதுதான். சரியாகச் சொன்னீர்கள் சுந்தர் ஜி! பி.ஆர் தவறு செய்தார் என்று அவரை அகமதாபாத் ஏ.ஐ.டி.யு சி அலுவலகத்தில் கணக்கு எழுத அனுப்பினார்கள். பிர்லா அளித்த விருந்தில் கலந்து கோண்டார் என்பதற்காக முதலமைச்சராயிருந்த இ.எம்.எஸ் மீது நடவடிக்கை எடுத்தார்கள்.முதலமைச்சராக இருந்து வெலியெறும்போது ஒருதகரபெட்டியில் புத்தகங்களும், இரண்டுவெட்டி,ஜீப்பாவொடு வந்த நிருபன் சக்கிரவர்த்தியை கட்சியை விட்டு நீக்கிணார்கள். உலகமே புகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜியை கட்சியை விட்டு நீக்கினார்கள். இவை பெரிதல்ல.இதனால் கோ பாம் கொண்டு கட்சியை பிளக்காமல் இருக்கும் உருப்பினர்கள்......எவ்வளவு பெருமைகுறியவர்கள். இடதுசாரிகள் குற்றங்களை பதிவர்கள் சுட்டிக்காட்டுவது சரியே! அவர்கள் செய்யும் நல்லதையும் ஒரு வார்த்தை சொல்வதும் சரிதானே சுந்தர்ஜி!---காஸ்யபன்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...