I
உன்னைப் பற்றி நானும்
நம்மைப் பற்றி அவர்களும்
அவர்களைப் பற்றி எல்லோரும்
எனப் பரவுகிறது
புரளியின் சுடர்.
தலைகள் உருண்டபின்னோ
புதிய புரளி பிறந்த பின்னோ
முகமூடியை அவிழ்த்து
உயிர் பெறுகிறது யாரும் காணாத
மெய்.
II
போகிறார்கள் சிலர்
வருகிறேன் என்று.
வருகிறார்கள் சிலர்
போக விரும்பாமல்.
போகிறவர்களும்
வருகிறவர்களும்
உணர்வதில்லை
தங்கள் வசிப்பிடங்களை.
8 கருத்துகள்:
சுந்தர்ஜி...
முதல் கவிதையில் பரவுகிறது புரளியின் சுடர்..எனும்போது கொஞ்சம் நெருடுகிறது. சுடரின் வெப்பம் பரவும். சுடர் பரவும் என்பது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.
வசிப்பிடத்தின் உணர்வு என்பது அவரவர் மனதின் எண்ணப்பிரதிபலிப்பைக் கொண்டவை. உண்மையில் உண்மையான வசிப்பிடத்தை யாருமே உணர்வதில்லை என்பதுதான் வவாழ்வின் நிதர்சனமாக உள்ளது.
நல்லாயிருக்குங்க.
/உன் பற்றி/ உன்னைப் பற்றி
/நம் பற்றி/ நம்மைப் பற்றி
/அவர்கள் பற்றி/ அவர்களைப் பற்றி
padichutten
பற்றிப் படர்கிறது புரளியின் சுடர்,
இறக்கும் வரை அல்லது புதிது பிறக்கும் வரை.
தோன்றும் மெய்யுக்கு என்றுமில்லை இடர்.
வசிப்பிடமறியா, வருவோரும், போவோரும்,
வெறும் வழிப்போக்கர்களோ?
முகமூடியை அவிழ்த்து
உயிர் பெறுகிறது
யாரும் காணாத
மெய்.
evlo sathyamana vaarththaikal
பல விஷயங்களில்
தலை உருண்ட பின்புகூட
உயிர் பெறுவதில்லை
மெய் என்பது நடைமுறை.
யாரும் காணாத மெய் உயிர் வாழ்ந்து என்ன செய்யும்? இப்படித்தான் இங்கே பல நேரம்...கனக்கிறது வரிகள்.
ம்ம்..
கருத்துரையிடுக