I
எட்டத் தெரியாதவையும்
எட்ட இயலாதவையும்
சமமாய் நிரம்பித் தளும்புகிறது
அதிருப்தியின் குடம்.
அசைகிறது இயலாமையின்
நெருஞ்சிமலர்.
வழிதேடிப் பரவுகிறது
கசப்பின் சுகந்தம்.
II
எனக்குத் தரப்பட்டவை
புறக்கணிப்பில் நனைத்த
கசப்பு மாத்திரைகள்.
நான் தீட்டியது
சாம்பல் வண்ணமும் இருளும்
பிசைந்த ஓவியங்கள்.
அநேக நாட்கள்
அநேக நாட்கள்
அவமானம் துரத்திய அலைக்கழிப்புகள்.
பின்னால் பரிதவிப்பின் நிழல்கள்.
ஆடிக்கொண்டே இருக்கிறேன்
ஒப்பற்ற இசையில் குளித்த
ஒரு ஆனந்த நடனத்தை.
பின்னால் பரிதவிப்பின் நிழல்கள்.
ஆடிக்கொண்டே இருக்கிறேன்
ஒப்பற்ற இசையில் குளித்த
ஒரு ஆனந்த நடனத்தை.
7 கருத்துகள்:
//..நிழல்கள்.
ஆடிக்கொண்டே இருக்கிறேன்
ஒப்பற்ற இசையில் குளித்த
ஒரு ஆனந்த நடனத்தை.//
என் நினைவில் இன்னும் சில நாட்கள் நினைவில் ஆடிக்கொண்டியிருக்கும் ஜி. மிகவும் ரசித்தேன். பிறகு உங்களின் 'ஆனந்தத்தில்' எனது 'ஆறுதல்' இடம் பிடித்தது ஆறுதலாய் இருக்கிறது. நன்றி
அதிருப்தியின் குடத்தை
பின் எப்படித்தான் நிரப்புவதோ?
என் கவிதைக்கு இடம்
கொடுத்த உங்கள் மனசுக்கு
ஒரு நன்றி.
ஆடலோ பாடலோ பிடித்த கலைக்குள் புகுந்துகொண்டால்
புறக்கணிப்புக்களை புகுந்தவன் அலட்சியம் செய்யத் தொடங்கிவிடுவான்.
இயலாமையின்
நெருஞ்சிமலர்.
ஓரிரண்டு வார்த்தைகளில் கனம் கூட்டுகிற வித்தை உங்கள் விரல்களுக்கு
இப்போதுதான் வாய்த்த நேரத்தில் படிக்கிறேன். இரண்டு கவிதைகளையும் படித்துவிட்டு மரத்தில் அடித்த ஆணியின் மௌனமாய் உறைந்துபோயிருக்கிறேன் சுந்தர்ஜி.
பிறகெப்படி பழி தீர்ப்பது இந்த வாழ்கையை! இறுதி வரிகளுக்காகவே திரும்ப திரும்ப படிக்கத் தோன்றுகிறது.
நன்றி
-வேல்கண்ணன்.
-மதுமிதா.
-ஹேமா.
-ரிஷபன்.
-ஹரணி.
-சைக்கிள்.
கருத்துரையிடுக