9.7.10

அசையும் மலர்கள்



இப்போதெல்லாம் சாகசங்கள் எனக்கு ஆயாசமூட்டுகின்றன.

குழந்தைகளுக்குக் கதை சொல்லியபடியே
விரல் நகங்களை வெட்டி விடுகிறேன்.

பேரன்பால் பரவசம் தரும் நாய்க்குட்டிகளை
வாரம் தவறாது குளிப்பாட்டுகிறேன்.

நடனமாடிச் செல்லும் யானையின் மணியோசை
பற்றிச் செல்கிறேன் வெகுதூரம்.

என் இளம்பிராய நண்பனைப் பார்க்க நேர்கையில்
மனதின் மூலையில் மலர்கள் அசைவதையும்
அவற்றின் நறுமணத்தையும் உணர்கிறேன்.

நள்ளிரவில் தெருத்தெருவாய் சைக்கிள் பயணம் செய்யும்
இரவுக்காவலாளியோடு கை குலுக்கித் தேநீருக்கு அழைக்கிறேன்.

அடுத்த முறை உன் சாகசத்தின் முதல் அத்தியாயம் விரியும்போது
நான் கீரைப் பாத்திகளுக்குத் தண்ணீர் தெளித்தபடியிருப்பேன்.

11 கருத்துகள்:

rk guru சொன்னது…

இது கதைய, கவிதைய ஆனால் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

Katz சொன்னது…

அருமை.

Madumitha சொன்னது…

நிச்சயமாக சுந்தர்ஜி.
சாகசங்களை விட
இத்தகைய விஷயங்கள் தான்
மனசைக் குளிரச் செய்கின்றன.

நிலா மகள் சொன்னது…

சாகசத்துக்கு சற்றும் குறைந்ததல்ல கீரைப் பாத்தியை பாதுகாப்பது !

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி rk guru முதல் வருகைக்கும்-வாழ்த்துக்களுக்கும்.

நன்றி வழிப்போக்கன் முதல் வரவுக்கும் பாராட்டுக்கும்.

நிச்சயமாக மதுமிதா.அர்த்தங்களை நாம் பெரிதாகத் தேடிக்கொண்டிருக்கையில் மொழியற்ற நிசப்தத்ததை இழப்பது போல.

சரியாகச் சொன்னீர்கள் நிலாமகள்.உங்கள் தளத்தை இப்போதுதான் பார்த்தேன்.எல்லாச் சோறுமே பதமாகத்தான் இருக்கின்றன பானையில்.

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.விரைவில் உங்கள் எழுத்துக்களையும் படித்துவிடவேண்டும்.நான் ஒரு சோம்பேறி.மன்னியுங்கள்.

ஹேமா சொன்னது…

மனசு பக்குவப்பட்டிருக்கு சுந்தர்ஜி க்குன்னு அர்த்தம் இப்பிடி எல்லாம் நடந்தா !

vasan சொன்னது…

சுந்தர்ஜீ,
க‌விதை, ஒரு 'தும்பைப்பூ'
எளிமை, வெண்மை, தேன்சுவை க‌ல‌ந்து,
வ‌ண்ண‌த்து பூச்சிக‌ளுக்காய் வனப்புட‌ன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.எளிமையை விரும்புவது நம்மை நல்ல தளத்தில் வைத்திருப்பதாய் உணர்கிறேன்.

நன்றி வாசன்.வண்ணத்துப்பூச்சியாய் நீங்களெனில் தும்பையாய் இருக்க எனக்கு ஆசை.

பத்மா சொன்னது…

கொஞ்சம் கீரை பார்சல் ...
எளிமை எப்போதும் கவர்கிறது இல்லையா ஜி?
உலகம் இல்லையென சொல்லுமே ?

இரசிகை சொன்னது…

vanakkam sundarji........
system work aakala...,appuram konjam velai athaan vara mudiyala.

melirunthu vaasiththuk konde varukiren.

intha kavithaikku comments kodukkaamal poka mudiyala.........
aththunai arumai.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...