நேர்த்தியான கவிதை ஒன்றிற்கு முயற்சித்துப்
பார்க்கிறேன் வெகுநாளாய்.
மழையில் நனைந்த யுவதியின் தலைதிரும்பல்.
இருகால்களுக்கிடையே தலைகீழாய்த் தலைகாட்டும்
மழலைத் ததும்பல்.
கண் திறவா நாய்க்குட்டியின் முதல்நாள்த்
தாய்ப் பாலருந்தல்.
மனைவி மகன் மனை இழந்த முதியவனின் தனிமை.
ஓலைக் குடிசையின் அமைதி குடித்தாடும் சுடர்.
மரணத்தின் மடியில் தவிக்கும் உயிரின் தைலம்.
மனதின் சுவரெங்கும் விசிறியடித்திருக்கும் வண்ணங்கள்.
எழுத முடியாதே போய்விடக்கூடுமோ ஒப்பற்ற என் கவிதையை.
7 கருத்துகள்:
நேர்த்தியான கவிதை......
அருமை ........
நிச்சயமாக எழுதப் போகிறீர்கள்.
வலைச் சரத்தில்
உங்களைப் பற்றிய அறிமுகம்
சுந்தர்ஜி.
வாழ்த்துக்கள்.
பார்ப்பதை எல்லாம் கவிதையாய் பார்க்கும் மனதே ஓர் ஒப்பற்ற கவிதை தான் சுந்தர்ஜி ..
அதன் இருத்தலே படைத்தலுக்கு சமம் ..
ஓலைக் குடிசையின்
அமைதி குடித்தாடும் சுடர்.......
இவ்வொளியிலே ஆழ்ந்து அமிழ்ந்து விட்டேன் ..
மீள மீண்டும் ஒரு கவிதை தா.
இருகால்களுக்கிடையே
தலைகீழாய்த் தலைகாட்டும்
மழலைத் ததும்பல்.
இந்த உவமையே அழகிய கவிதை தான்
ஜி வாழ்த்துக்கள்!
சுந்தர்ஜி உங்களுக்கு ஒரு விருது
காத்திருக்கிறது என் பக்கத்தில்.
அருமையான கவிதை தோழரே...
நல்ல வரம் உங்கள் கைளிருக்கிறது போல..
சுந்தர்ஜி...இவற்றில் சில எழுதிவிட்டீர்கள்.
இன்னும் இன்னும் எழுதுவீர்கள் !
கருத்துரையிடுக