என் பாதங்களின் கீழே
தரை எந்த நொடியிலும் நழுவலாம்.
சொட்டுச் சொட்டாகக் கரைந்துவருகிறது
என் உயிரின் தைலம்.
பெரும் சுடராய் எரிக்கின்றன
என் சிறிய மகளுக்கும் அன்பு மகனுக்கும்
கொடுத்த சின்னஞ்சிறு வாக்குறுதிகள்.
சாவின் நிழலை விடவும் மிகக் கொடியது
வாழ்வின் காலமற்ற மிச்சங்கள்.
எனக்காய்க் காத்திருக்கிறது
எனக்காய்க் காத்திருக்கிறது
இணைத்தே பழக்கப்பட்ட
முடிச்சுக்கள் போலன்றி
துண்டிக்கப் பழக்கப்பட்ட
இன்னொரு முடிச்சு.
முடிச்சுக்கள் போலன்றி
துண்டிக்கப் பழக்கப்பட்ட
இன்னொரு முடிச்சு.
6 கருத்துகள்:
வாழ்நிலம் (சுகுமாரன் ) வழியாக உங்களை வந்தடைந்து இருக்கிறேன் . இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தையும் படித்து விட்டு மீண்டு வருகிறேன்.
நல்லா இருக்குங்க.
(நானும் வாழ்நிலம் வழியாகவே)
உயிர் பிரியும் தருணத்தில் இப்படியெல்லாம் நினைக்க
வருமோ சுந்தர்ஜி !
நன்றி வேல்கண்ணண் முதல் வருகைக்கு.மீண்டும் வாருங்கள்.
நன்றி செல்வராஜ் ஜெகதீசன் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
இருக்கலாம் ஹேமா.ஒரு தூக்குக் கைதியின் மனநிலையை இப்படிப் ப்ரதிபலித்தேன்.
முடிச்சு எல்லாவற்றையும் இணைக்கும் இயல்பினது. இந்த முடிச்சு
துண்டிக்கிற அவலத்தைச் சொல்கிறது.
ஆஹா!எத்தனை அருமையாய்ச் சொல்லிவிட்டீர்கள் மதுமிதா.
உங்கள் அனுமதியுடன் என் இறுதி வார்த்தைகளை மெருகேற்றிக் கொள்கிறேன்.
கருத்துரையிடுக