13.7.10

ஒரு ப்ரார்த்தனை


இந்தப் ப்ரார்த்தனையை எதேச்சையாய் மதுமிதா தன் விருதை என்னுடன் பகிர்ந்துகொண்ட இடுகையைப் பார்க்குமுன்பே எழுதிவிட்டாலும் அன்று இதை இடுகையாக்க என் மனமொப்பவில்லை.

இப்போது இதை வெளியிடலாமென்றும் தோன்றியது.

நண்பர்கள் யாரும் தயவு செய்து எனக்கு விருது எதுவும் அளிக்கவேண்டாம்.

விருதுகள் என் ஆணவத்தைக் கூட்டவும், பிறரிடமிருந்து என்னைப் பிரித்துவிடவும் கூடுமென்று அச்சப்படுகிறேன்.

விருதுகள் பெறுமளவுக்கு நான் எதையும் சாதித்துவிட்டதாகவும் அதற்கான தகுதி உள்ளவனாகவும் எண்ணவில்லை.

தயவு செய்து என்னை மன்னியுங்கள்-யாரும் புண்பட்டிருந்தால்.

5 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....நானும் பலமுறை நினைத்தாலும் சொல்லத் தயங்கியதைத் தைரியமாகச் சொல்லிவிட்டீர்கள்.

Madumitha சொன்னது…

நீங்கள் சொல்வதை படமும்
சொல்லி விட்டது.
“ விடுங்கடா சாமி என்னை..”

நான் கொஞ்சம் அவசரப் பட்டு
விட்டதாகத்தான் தோன்றுகிறது
சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

என்னா ஒரு படம்?:))

ரிஷபன் சொன்னது…

விருதுகள் பெறும் அளவு யாரும் தகுதி பெற்றதாய் நினைப்பதில்லை சுந்தர்ஜி.. இப்படி யாரேனும் சொல்லும்போது லேசாய் ஒரு உற்சாகம்.. கடந்து போகிற கூட்டத்தில் நம்மையும் இனங்கண்டு செய்கிற புன்னகை போல.. மதுமிதா அவசரப்பட்டாரோ என்னவோ.. நீங்களும் அவசரப்பட்டு விட்டீர்களோ..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.

விருது சின்னதோ பெரியதோ அதன் பேரில் எனக்கு என் பள்ளி நாட்களிலிருந்தே ஒரு விலக்கம்.

யாரும் எனக்களித்த பின் மறுப்பதை விட முதலிலேயே வேண்டாம் என்று நிராகரித்துவிடுதலை சர்க்கரைவியாதி கொண்ட என் அம்மாவிடம் கற்றுக்கொண்டுவிட்டேன்.

இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி அதை வழங்குபவர்களிடமும் பெறுபவர்களிடமும் எனக்கு விலக்கமில்லை.சொல்லப்போனால் நான் மிக நிதானமாக ஒரு இருபது வருடங்களாக நின்று கொண்டிருக்கும் நிலை இது.

சரிதானே?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...