என் நகரத்தின் நடுவே ஓடியிருக்கிறது அந்த நதி.
நதியில் மிதந்து சென்ற படகுகளும்
படகின் புறத்தே துள்ளி விளையாடிய மீன்களும்
சரித்திரத்தின் மூலையில் அழுந்திப் போயிருந்தன.
இரு மருங்கிலும் பசிய மரங்களையும்-
மரங்கள் சூழ்ந்த வனத்தில் புற்களையும்
புல் சுவைத்த மாடுகளையும் ஆயர்களையும்
பெளர்ணமிகளில் அவர்கள் இசைத்த குழலிசையையும்
அடித்துப் போய் விட்டது நதி.
காலங்காலமாய்க் கரையமர்ந்த காதலர்களின்
பொய்கள்தான் நதியின் நீரைக் குடித்து விட்டதெனவும்
அது ஒரு பெரிய சாபம் என்றும் வழிப்போக்கர்கள்
பேசிக்கொள்வதுண்டு.
இந்தக் கரையில்தான்
ராமனும் குகனும் உரையாடிக் கொண்டதாகவும்
குகன் பரிசளித்த மீன்தான்
இன்று வரையிலும் ருசியான மீன் என்றும்
தன் பங்குக்குத் தாத்தா அடித்துவிடுவார்.
தாத்தாவின் பொய்யும்
நதி பற்றிய புரளிகளுமே
குகன் பரிசளித்த மீனைக் காட்டிலும்
ருசியானதாய் இருந்திருக்கக்கூடும் என்று
இன்று தோன்றுகிறது.
படகின் புறத்தே துள்ளி விளையாடிய மீன்களும்
சரித்திரத்தின் மூலையில் அழுந்திப் போயிருந்தன.
இரு மருங்கிலும் பசிய மரங்களையும்-
மரங்கள் சூழ்ந்த வனத்தில் புற்களையும்
புல் சுவைத்த மாடுகளையும் ஆயர்களையும்
பெளர்ணமிகளில் அவர்கள் இசைத்த குழலிசையையும்
அடித்துப் போய் விட்டது நதி.
காலங்காலமாய்க் கரையமர்ந்த காதலர்களின்
பொய்கள்தான் நதியின் நீரைக் குடித்து விட்டதெனவும்
அது ஒரு பெரிய சாபம் என்றும் வழிப்போக்கர்கள்
பேசிக்கொள்வதுண்டு.
இந்தக் கரையில்தான்
ராமனும் குகனும் உரையாடிக் கொண்டதாகவும்
குகன் பரிசளித்த மீன்தான்
இன்று வரையிலும் ருசியான மீன் என்றும்
தன் பங்குக்குத் தாத்தா அடித்துவிடுவார்.
தாத்தாவின் பொய்யும்
நதி பற்றிய புரளிகளுமே
குகன் பரிசளித்த மீனைக் காட்டிலும்
ருசியானதாய் இருந்திருக்கக்கூடும் என்று
இன்று தோன்றுகிறது.
4 கருத்துகள்:
காணாமல் போன நதி பற்றிய
குறிப்புகளிலிருந்து மீண்டும்
அந்த நதியை உயிர்ப்பிக்க
தேவையான சாத்யங்களைத்
தருகிறது உங்கள் கவிதை சுந்தர்ஜி.
வசீகரம் .
//இரு மருங்கிலும் பசிய மரங்களும்-மரங்கள் சூழ்ந்த வனத்தில் புற்களும் புல் சுவைத்த மாடுகளும் அவற்றின் ஆயர்களும் பெளர்ணமிகளில் அவர்கள் இசைத்த குழலிசையும் என// தன் பங்குக்குத் தாத்தா அடித்துவிடுவார். தாத்தாவின் பொய்யும் நதி பற்றிய புரளிகளுமே குகன் பரிசளித்த மீனைக் காட்டிலும் ருசியானதாய் //ரசித்து ரசித்துப் படித்தேன் ஜி...
அருமை...அருமை...
நன்றி
-ச.கி.
-நிலாமகள்.
-கமலேஷ்.
கருத்துரையிடுக