சாளரத்தின் அருகே கிடத்தப் பட்டிருக்கிறது என் சரீரம்.
இருளை ஒளியை தேதி கிழமையை
என்றோ உதிர்த்துக் காலமற்று மிதக்கிறேன்.
உண்பதற்கோ பருகுவதற்கோ பேசுவதற்கோ
எதுவுமில்லாது உணர்கிறேன்.
மனைவியின் தொடுதலில் பிரார்த்தனைகளையும்-
மக்களின் தொடுதலில் பயத்தையும்-
நண்பர்களின் தொடுதலில் பரிவையும்-
மருத்துவரின் தொடுதலில் தொழிலையும்
உணர்ந்து பரிதவிக்கிறேன்.
விரல்கள் மொழி பேசும்- சாவும் வாழ்வும் பிரிந்து கூடும்-
இதோ இந்தக் கணம்
மரணமே! பரிசாய் அளிக்கிறேன் என்னை.
8 கருத்துகள்:
மரணத்தின் பின் இப்படி உணரமுடியுமா !
அவஸ்தையான தருணமாயிருக்கும் !
மரணத்தின் பின்னல்ல ஹேமா.மரணம் வராது நெடுநாள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவனின் அவஸ்தை இது.அவன் மரணத்தை ஆவலோடு எதிர்கொள்வான்.
உங்களைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி; மைத்துளிகள் மூலமாக.
கொஞ்சம் புதுக்கவிதை கற்றுக்கொள்ளப் போகிறேன் உங்களிடமிருந்து :)
முதல் வருகைக்கு எனனுடைய மகிழ்வும் நன்றியும் ராமகிருஷ்ணன் ராஜகோபாலன்.
ஆனால் என்னிடம் கற்றுக்கொள்ள உங்களுக்கு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.நான் மிகச் சிறியவன்.
மாற்றாக உங்களைப் போன்ற புது நண்பர்கள் உட்படப் பிறரிடமிருந்து தினமும் நிறையக் கற்றுக்கொள்ள இருப்பதாகவே நினைக்கிறேன்.
மாதங்கிக்கு என் பணிவான நன்றிகள் உங்களின் வரவுக்கு.
எதேச்சையாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன்.ஆனால் நான் வழி தவறி வந்தது நல்லதொரு நந்தவனத்திற்குத்தான் என்று உங்களின் ”இல்லாதிருத்தல” கவிதையின் மூலமாக உண்ர்கிறேன்.
எல்லோரிடமே கவிதையிருக்கிறது.ஆனால் அதை மொழியின் வழி உருமாற்றம் செய்வதற்கு சிலருக்கு மட்டுமே சாத்தியப்படும்.உங்களுக்கு மிக நன்றாகவே சாத்தியப்பட்டிருக்கிறது.
விரல்களின் பரிசத்தில் ஒளிந்து கிடக்கும் உணர்வுகளை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்..மென்மேலும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
மரணத்திற்கு உயிரை பரிசாய் அளிக்கும் நிறைவான வாழ்வு கொடுப்பினை சுந்தர்ஜி
என்ன ஒரு ஆழமான கவிதை !படித்தபின் மனம் சிறிது ஸ்தம்பிப்பது நிஜம்
மன்னியுங்கள் சிவக்குமார்.மிகத் தாமதமாக உங்களை வரவேற்க நேருகிறது.தவிர உங்களை சந்திக்க உங்கள் தளத்துக்கு வந்தேன்.நுழையமுடியாத நுட்பச் சிக்கல் ஏதோ போல.வாசல் வரை வந்து திரும்ப நேர்ந்தது.சரி செய்யுங்கள்.மீண்டும் சந்திப்போம்.
நன்றி பத்மா.இது எனக்கு மிக நெருக்கமான கவிதை.
நன்றி! இப்போது வேண்டுமானால் முயற்சித்துப்பாருங்களேன். மேலும் என்னுடைய தளம் Mozillaforefox ல் எளிதாகத் திறக்கும்.
கருத்துரையிடுக