மழை விடாது ஒரு வாரம் கொட்டித் தீர்த்தபின் ”அப்பாடா!வெயில எப்படா பாப்போம்னு ஆயிடுச்சு”
போன தடவை பாத்ததுக்கு இந்த தடவை எளச்சிட்டே.ரொம்ப அலச்சலோ?(பிடிக்காதவங்களா இருந்தா) ரொம்ப குண்டாயிட்டே.
இந்த தடவை மாதிரி எப்பவும் வெயில் பொரிஞ்சதில்லை. கலிகாலம்.
இந்த ஜனநாயகம்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டுவராது. பாகிஸ்தான் மாதிரி ராணுவ ஆட்சிதான் சரி.
ரோட எப்பிடிப் போட்டுருக்கான் பாரு. கண்டிப்பா டெண்டர் எடுத்த ஒடனே பொட்டி கொடுத்திருப்பான்.
இந்த ரயில் ரைட் டைமுக்கு எக்மோர் போயிடுமா?
என்னப்பா இருக்கு சூடா? இட்லி-வடை-பொங்கல்-பூரி-தோசை சார்.
என்ன தம்பி ஹேர்கட்ட இப்பிடி சொதப்பிட்ட? அடுத்த தடவ பாருங்க சார் ஒங்கள யாருக்குமே அடையாளம் தெரியாம பண்ணிடலாம்.
காய்கறில்லாம் என்னம்மா இப்பிடி வெரைப்பா இருக்கு? வெண்டைக்காயும் பொடலங்காயும் ஒடைச்சாலும் ஒடையாது போல. எல்லாத்துலயும் ஒரத்தப் போட்டு இப்பிடி ஆயிடிச்சி சார். ஏந் தலயெழுத்து விக்கிறேன். ஓந் தலயெழுத்து வாங்குற.
ட்ராஃபிக் போலீஸெல்லாம் ரொம்ப அநியாயம் பண்றாங்க. எல்லார் கிட்டையும் மாமூல். எல்லாத் தப்பையும் அலவ் பண்றாங்க. எங்க போய் முடியப்போகுதோ.
நானும் பாத்துட்டேன் சார். ரஜினி மாதிரி கால்குலேட்டிவ் யாரும் கெடையாது. வெச்ச குறி தப்பறதில்லை. ஆனா அரசியலுக்கு அவர் வருவாரா? மாட்டாரா?
ஒரு நாள் பாருங்க இந்த விஜயகாந்த் தமிழ்நாட்ட ஒரு கலக்குக் கலக்கத்தான் போறாரு.நீங்களும் பாக்கத்தான் போறீங்க.
இப்படியெல்லாம் யாரும் யாரோடும் பேசிக்கொள்வதில்லை. மொபைல் ஃபோன் அந்த இடத்தைப்பிடித்துக் கொள்ள அந்தக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எதிரில் இருப்பவரோடும் மொபைல் ஃபோனில் பேசுவதுதான் எளிதாகிவிட்டது. அரட்டை என்பது முகமற்ற குரல் என்ற அளவில் இருக்கிறது.
பயணங்களிலும் பொது இடங்களிலும் தெருவில் நடக்கையிலும் அநேகமாக யாரும் பேசிக்கொள்வதில்லை. அல்லது வீட்டுத் தகராறு அல்லது உடல்நிலைக் கோளாறு அல்லது அடுத்தவனின் வளர்ச்சியில் பொறாமை என்று ஏதாவதொன்று அரைக்கப்படுகிறது.
இந்த பொது அரட்டைகள் குறைந்து போனது நமது ஆரோக்கியத்துக்கும் மனநிலைக்கும் உலைவைக்கும் செயலாக எனக்குத் தெரிகிறது. எல்லோரின் முகமும் ஒரே பாவத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது.
இனி யாரையாவது பார்க்கும் போது மேற்கண்ட வசனங்கள் ஏதாவதொன்றை உபயோகித்துக் கொள்ளவும்.
8 கருத்துகள்:
உண்மை தான் சுந்தர் ஜி. இன்று மொபைலில் பேசுபவர்கள் பலருக்கு நேரில் பேசத்தெரியவில்லை... அருகில் வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு, சற்று நகர்ந்ததும் நம்மை மீண்டும் கை பேசியில் அழைப்பவர்கள் தான் இப்பொழுது அதிகம் ஜி. இது நிச்சயமாக நம் மனநிலைக்கு கேடு தான்...
வர வர பிளாக்ல கூட புதுசா எதுவும் பார்க்க முடியல.. எல்லாம் கலிகாலம்..!!!!
அனைத்துமே அருமையான கவிதைகளாக இருக்கிறது
ஹரித்துவார் பயணங்களுடன் பின்னோடிய நினைவுகளும், வரிகளும் கூட.
உங்களுக்கு குணா போலவே எனக்கு சலங்கை ஒலி - எப்போதும் ஈரத்தை தந்தபடியே இருக்கும்.
இப் புதிய தடத்திலும் பழைய நதி தொடர்ந்து நகர என் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
100 % உண்மை!
பதிவை படித்தபின், யார் பதிவு என்ற குழம்பம் வந்து, ஸ்க்ரோல் பண்ணி பார்க்க வேண்டியிருந்தது. அவ்வளவு வித்தியாசமாய் இது, உங்களின் வளமையான பழைய பதிவுகளை வாசித்தவர்களுக்கு, வாசிப்பவர்களுக்கும். நாளையை, இன்றே பார்க்கும் பார்வையின் திறன் அது
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆழ்ந்த பகிர்வுக்கு நன்றி பாரதி.
அடிக்கடி வாங்க ரிஷபன்.நீங்க வந்தாதான் களை கட்டுது.
பொத்தாம் பொதுவா நல்லாத் தப்பிக்கிறீங்க கமலேஷ்.சலங்கை ஒலியும் என் செல்லப்பிள்ளைதான்.
பிலாஸஃபி ப்ரபாகரன் முதல் தரம் வந்திருக்கீங்க.தொடர்ந்து வாங்க.நன்றி.
அருணா வாங்க.கொஞ்சம் லேட் உங்கள வரவேற்க.அடிக்கடி வாங்க.
உங்களோட ரசனையோட ரெண்டு பேர் வந்து படிச்சாப் போதும் வாசன்.பல சமயங்களில் உங்களின் வருகை எனக்குப் புது ரத்தம் பாய்ச்சுகிறது.ரொம்ப நன்றி.
கருத்துரையிடுக