I
படபடக்கும் நாட்காட்டியின் இடையே
உறைந்தும்-
உறைந்த கடிகாரத்தின் வட்டத்துக்குள்
துரத்தப்பட்டபடியும்
கழிகிறது காலம்.
II
நேற்றுப் போல் இன்று இல்லை
அவனுக்கு.
இன்று போல் நாளை இராது
இவனுக்கு.
நேற்றிலும் இன்றிலும்
வாழ்கிறார்கள்
வாழ்கிறார்கள்
அவனும் இவனும்.
நாளைக்கு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நான்.
III
விழித்திருக்கையில்
காலத்தை நாம் கவனிக்கிறோம்.
உறங்குகையில் நம்மைக்
கவனிக்கிறது காலம்.
8 கருத்துகள்:
இந்த வினாடி உங்க கவிதைகளில் இலயித்திருக்கிறது என் மனசு.
முதல் கவிதை மிக அழகு
நேரம் என்பது மனக்கணக்கோ பல நேரம்?
//விழித்திருக்கையில் காலத்தை நாம் கவனிக்கிறோம். உறங்குகையில் நம்மைக் கவனிக்கிறது காலம்.//
ஆஹா.. மூன்றுமே காலக் கவிதைகள்.. மூன்றாவது என்னைக் கவனித்து விட்டது முன்னதாக.
நாளைக்கு வாழ்கிறேனென்பது ஒரு
புது விஷயம்.
உறங்கும் போதும் நம்மை கவனிக்கிறது
காலம்.
காலம்...சொல்லிக்கொண்டிருக்கொண்டிருக்கும்போதே கழிகிறது காலத்தின் ஒரு நொடி !
காலம் என்ன ஒரு subject ! ...சில சமயம் திரும்பாதா எனவும் சில சமயம் ஓடாதா எனவும் ஏங்க வைக்கும்.
காலம் பற்றி காலத்தால் அழியாத கவிதைகள் .
விழித்திருக்கையில்
காலத்தை
நாம் கவனிக்கிறோம்.
உறங்குகையில்
நம்மைக்
கவனிக்கிறது
காலம்.
.......Super:
கருத்துரையிடுக