”எப்பவும் ஒரே மாதிரி எளுதிகிட்டு. கொஞ்சம் வேறமாதிரி ஏதாவது எளுதுடா மக்கா” என்றான் மரைன் இஞ்சினியராய் உலகத்துக் கடலெல்லாம் (தமிழே) பேசாமல் வறுபடும் என் கன்யாகுமரி நண்பன் ஜூடு இளங்கோ (jude ilango). அவனுக்காக இது.
வழக்கமாய் ரிக்ஷாவில் போய்த் திரும்பும் பிஸ்தா ஒருவர்(படத்தில் இருப்பவர் பிஸ்தாதான்.நம்பவும்.) ஆட்டோவில் போய் வீடு திரும்பி நொந்துபோய் தலைவலியோடும் தன் மனைவியோடும் புலம்பத் தொடங்கும் வேளை.
ஆட்டோவில் போனாலே பொல்லாத தலைவலிதான்
பாட்டோடு பேச்சும் லொடலொடக்க - கேட்டோரம்
போட்டானே மணி நேரம் போகவளி தெரியாது
கேட்டேனே பாட்டெல்லாம் குத்து.
சொன்னபடி கேட்டிருந்தா சொகமா போயிருப்ப
தின்னசோத்துக்கு தண்டனையா சூடான - பன்ன
கவ்விக்கிட்டு முளிக்கிற புள்ளயாட்டம்
தவ்விப் பொலம்பாமத் தூங்கு.
நெனச்சாலே வந்துருமா தூக்கம் ஏபுள்ள
கனச்சுக்கிட்டே இருக்க களுத கணக்கா- நனச்சு
முடி துணியெல்லாம் மள இப்போ விட்டுருச்சு
அடிச்சுப் போடுவேன் ஆமா.
அடிப்ப மிதிப்ப வேறென்ன பொளப்பொனக்கு
குடிப்ப கண்ணுமண்ணு தெரியாம- கடிப்ப
கருவாடோ மீனோ என்ன கருமாந்தரமோ
ஒருபாவம் அறியேன் நான்.
சும்மா ஒருஜாலிக்கு ஒன்ன வம்பிளுத்தா
அம்மா ஐயோன்னு பொலம்பாத பேசாம- கம்மாக்
கர மீங்கொளம்பும் சுடுசோறும் இட்டாந்தா
பரக்காம திம்போம் இப்போ.
(தாங்கமுடியாது போனால் ஜூடு இளங்கோவை சபித்துவிட்டு அடுத்த பதிவுக்குக் காத்திருக்கவும். எலே மக்கா ஜூடு எங்கலே ஓடுத. கொஞ்சம் நில்லுடே. வாரேன். நில்லு நில்லு.)
20 கருத்துகள்:
சுந்தர்ஜி...
சுவையான கவிதை. வெண்பா ருசி. சொகம்.
இது கொஞ்சம் புதுசாயிருக்குலே.
இப்படியும் எழுதத் தெரிந்ததால் தான் அப்படியும் எழுதி கலக்குகிறீர்கள் .
அருமையா இருக்கு ...மிகவும் பொறாமையா இருக்கு
ரொம்ப நாளாச்சு சுந்தர்ஜி.. வெண்பாவும்..கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் எழுதி.. தட்டிவிட்டுட்டீங்க.. அதனாலதான் மறுபடியும்..
சொகமா இருக்குப்பா சுந்தர்ஜி ஒங்கவிதை
ஏக்கமா பொங்கி வருதப்பா = காதல்
ஒம்மேல வழியுது கண்ணோரம் கசியுது
பொழுதெல்லாம் கேட்பேன் உன் பாட்டு
சான்ஸே இல்லை.. கை கொடுங்க..
அன்பாலே நாடி நானிங்கு வந்திடுங்கால்,
உன் பா கேட்டு உன்மத்தம் ஆனதென்ன.
முன்போலில்லாமல் வித்யாசமாய் எழுதி,
வெண்பாவால் அடித்தாய்,அடி!
அட் நம்ம ஆளுதான் அண்ணே..
வெண்பா வடிவம் நல்லாருக்கு.
அசை சீரெல்லாம் யாரு கேட்டாக ?
வித்தியாசமா இருக்கு சுந்தர்ஜி !
//தலைவலியோடும் தன் மனைவியோடும் //
ஒருபொருட் பன்மொழி...?!
பிஸ்தாவின் வெண்பாக்கள் வெகு ஜோர் !
அடை மழையில் துளிர்த்த கொண்டாட்டமோ ....
வெண்பா என்றாலே எனக்கு ஏனோ ஆவி பறக்கும் வெண்பொங்கல் ருசி நினைவில் அசையும்.
வரிசையில் முதல் வரவு உங்களது.ம்கிழ்ச்சி தருவது.
நன்றி என் நண்பனே ஹரணி.
ரொம்ப தேங்க்ஸ்டே மது புதுசாட்டு இருக்குறத ரசிச்சதுக்கு.
இதத்தான் எதிர்பார்த்தேன் பத்மா.
எடுத்துவிடுங்க ராக்கெட்ட.
இளையராஜாவோட இசையாட்டம் இருக்குது ஹரணி ஒம் பாராட்டு.என்ன சொல்லனு தெரியாத வச்சுட்டியேப்பா.
இந்தாங்க ரிஷபன் கை. இந்த சாக்குல ஒங்கள நான் தொட்டுட்டேன்.இனி எழுத்து மணக்கும்.
பதிலடியும் வெண்பாவாலேயே அடிச்சுட்டீங்களே சாமி.ரசனைக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர். ஸார்.
தேமாங்காய் கூவிளங்காயுடன் நாள் மலர் காசு பிறப்புப் பார்த்து எழுத ஆசைதான் சிவா.
மேட்ச் ஆடி ரொம்ப நாளாச்சு. வார்ம் அப் பண்ணாம சுளுக்கிக்குமோன்னு ஒரு பயம்.
பொருட்குற்றமற்று வண்டிய ஓடவிட்டுட்டேன்.
ஒங்க கவிதையைத்தான் நான் அப்பிடி நெனைப்பேன் ஹேமா.
ஒருபொருட் பன்மொழியை சரியாக் கண்டுபிடுச்சிட்டீங்களே நிலாமகள்.அதேதான்.மழைதான் மாயம் செய்தது.
அருமை.
(உங்க பின்னூட்டத்தின் பின்னணி இப்பத்தான் புரியுது)
நன்றி அப்பாதுரை.
கருத்துரையிடுக