24.12.10

ரேணிகுண்டா


(ஜூடு இளங்கோவின் சேட்டையப் பாருங்க. ஃப்ரான்ஸ் பக்கத்துல காஞ்சிட்டு இருக்கேண்டா மக்கா. மறுவாதியா என்னோட ஸ்டைலுக்கு வராம ஒரே கண்ராவியா எளுதி சாவடிச்சேன்னா மவனே ஓம் ப்ளாக்குக்கு நாட்டுவெடி குண்டு வெச்சுருவேன்னு நடுராத்திரி மிரட்ட நானும் அவனும் ரெண்டு மாசம் முன்னால ரேணிகுண்டா போய் பேய் சங்கீதத்தால நொந்து நூடுல்ஸ் ஆன கதைய எழுதிட்டேங்க. மக்கா படிப்பதானலே)

ரேணிகுண்டா ரயிலுக்குப் போவோம்டா மணியாச்சு
ராணியுண்டா ராஜாஉண்டா சங்கரனின் - போணியுண்டா
என்றெல்லாம் சார்ட்டில் தேடும்வரை தலைவலிதான்
தென்றலுக்கு இல்லை வழி.

ஏறி உட்கார்ந்தேன் இளைப்பாற வழி தேடி
சாரிசார் என் பெர்த்தென்று வந்தானே - மாரிமுத்து
பத்துஇட்லி வடைசகிதம் ஐபோடும் சேர்ந்தலற
செத்துச் சுண்ணாம்பாய் நான் .

தாளமும் தலையாட்டும் ராத்திரி சிவராத்திரிதான்
நாளம்சூடேற நரம்புதடதடக்க தண்ட - வாளத்து
இடியோசை தோற்றதப்பா என்தூக்கம் போச்சுதப்பா
மடிப்பிச்சை போடப்பா மாரி.

”சங்கீதம் இல்லாத ராத்திரியே எனக்கில்லை.
இங்கீ பிங்கீ பாங்கீயுடன் சோதிப்போம் - சங்கீ
நான் மாரி” என்று சுற்றிவந்துபார்த்தும் மிஸ்டர்
பீனாய் மாட்டினேன் போ.

ராவெல்லாம் பெருங்கூத்து கண்ணெல்லாம் சிவப்பாச்சு
நோவெல்லாம் வந்தாச்சு இனி - ஓவென்றழுதாலும்
பிள்ளையோ பெண்ணோ அவள்தான் பெறவேண்டும்
முள்ளை முள்ளால் எடு.

ரேணிகுண்டா ஒச்சிந்தி ரேணிகுண்டா ஒச்சிந்தியென
சாணி மிதிக்க வந்தானோ சுமைதூக்கி- போணியென்று
தாவியேறி தடுக்கிவிழுந்து பெரியபையின் பிடியிழுத்து
கூவியே கெடுத்தாய் குடி.

12 கருத்துகள்:

Anonymous சொன்னது…

//பத்து இட்லிவடை ஐபோடுடன் ராவெல்லாம்
செத்துச் சுண்ணாம்பாய் நான்//
நல்ல காம்பினேஷன்!

சிவகுமாரன் சொன்னது…

அடிச்சு தூள் கிளப்புங்க அண்ணா

G.M Balasubramaniam சொன்னது…

என் எழுத்தில் நான் இருக்கிறேன் எனும் உங்கள் எழுத்தில் பல “நான்கள்” இருக்கக் காண்கிறேன்.பல சுவை கலந்த கலவை. வாழ்க, வளர்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒட்டடை அடித்து க்ளீன் பண்ண எண்ணி
’ஏணி கொண்டா’ என்று உள் கூவி,
அசந்து போய்அமர்ந்து விட்டேன்,சுந்தரின்
ரேணிகுண்டா படித்தக் கால்!

Harani சொன்னது…

ஞானம் மிக்கவன் சுந்தர்ஜிடா வெண்பாவில்
வெங்காயம் வேண்டாம் வழியும்=கண்ணீர்
மேதமை மிக்கவன் சுந்தர்ஜி சுந்தரன்
சொல்லாடலில் சொக்கி நான்.

பத்மா சொன்னது…

என்ன எழுதினாலும் அழகாத்தான் இருக்கு ....

இது என்ன ரொம்ப சுலபமா புரியற கவிதைன்னு நெனச்சா தப்பு..
நா எழுத்து கூட்டி தான் படிச்சேன் ...
ஆனா புரிஞ்சுட்டு ...:)

சுந்தர்ஜி சொன்னது…

பொருத்தத்தை ரசித்த மனமே நன்றி.

என் வீட்டுப் பின்னம் பக்க மாமரத்தின் மேலமர்ந்து கூவும் பெயர் தெரியாப் பறவையை நினைவுறுத்துகிறது இந்த பெயரில்லாக் குரலை எண்ணும்போதும்.

சுந்தர்ஜி சொன்னது…

அப்படியே செய்றேன் சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

ருசிக்கத் தெரியும் போது பரிமாறும் சுகமே தனீதானே பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

ஒங்கபாக்கு முன்பா என்பா எழும்பா வெறும்பா.

நன்றி ஆராரார் சார்.

சுந்தர்ஜி சொன்னது…

குளிப்பாட்டிட்டீங்க ஹரணி.மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப் போகும்னு எஸ்பிபி ஒம்பது ரூவா நோட்டுல பாடுவாரு.அந்தக் குளிரு உங்க வார்த்தையில.

கபடமில்லாக் கருணை உங்களது ஹரணி.நான் கொடுத்து வைத்தவன்.

சுந்தர்ஜி சொன்னது…

பத்மா எது சொன்னாலும் ஏதோ உள்ளர்த்தம் தொனிக்குதோன்னு ஒரு ஸ்மால் டௌட்.தீர்ப்பீங்களா பட்மா?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...