அ) பாலில் தேயிலையைப் போட்டு நன்றாகக் கொதிக்கும்போது நான்கு புதினா இலையைப் போட்டு பின் வடிகட்டி குடித்துப் பார்த்தால் புதினா இலை சற்று சுருங்கியிருக்கும்.
ஆ) எந்த சட்னியைத் தாளிக்கும்போதும் ஒரு சிட்டிகை பெ.தூள் போட்டுத் தாளித்தால் பெருங்காயம், மூட்டுவலி முதலானவை காலியாகும்.
இ) கொத்துமல்லியை ரசம் சாம்பாருக்கு குணசித்திர வேடங்களுக்கு மட்டுமே டெல்லிகணேஷ் போல உபயோகப்படுத்துவோம். மாறுதலாக மற்ற கீரைக்கூட்டுக்கள் செய்வது (தெரியாதவர்கள் விலகவும்) போல கொத்துமல்லியையும் கூட்டு செய்தால் வீட்டில் எல்லோரும் ஹையா என்று குதித்துக்கொண்டே சாப்பிட சிலர் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவார்கள்.
ஈ) கொய்யா இலையை துளிராகப் பறித்து தேவையான மிளகாய், புளி, உப்பு, உளுத்தம்பருப்புடன் தங்க நிறமாக வறுத்து அரைத்துச் சாப்பிட மறுப்பவர்களுக்குக் கொய்யாப்பழம் காய்த்தவுடன் தரமுடியாது என்று சொல்லி மிரட்டி சாப்பிட வைக்கலாம்.
உ) நன்கு சிவந்த ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் போட்டுக்குடித்துவர புத்துணர்ச்சியுடன் ( கவிதைகள் எழுதுபவர்களுக்கு) வருத்தமும் உண்டாகும்.
ஊ) பாலில் மஞ்சள் தூள், பனைவெல்லம், மிளகுத்தூள் போட்டுக்காய்ச்சிக் குடித்தால் சளி இருமல் சரியாகி பாட்டுப்பாடத் தோன்றும். கேட்பவர்களுக்கு ஓடத் தோன்றும்.அப்படியும் சரியாகாவிட்டால் சித்தரத்தை மற்றும் அதிமதுரம் (இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுவிட்ட அத்தை இல்லீங்க. நாட்டு மருந்துக்கடைல கிடைப்பாங்க) வாங்கி நன்கு தட்டி நீருடன் கொதிக்கவைத்து கண்ணையும் மூக்கையும் மூடி வாயைமட்டும் திறந்து குடிக்கவும். என் இருப்பிடம் தெரிந்துகொண்டு நேரில் வந்து அடிக்கவும்.
எ) ஓடும் மூக்குள்ள போது ( அதாங்க ரன்னிங் நோஸ் அல்லது மூக்கொழுக்கு) தலையணையை ட்ராக்ஷன் கொடுத்து தலையை உயர்த்தவும். ஓடும் மூக்கு சரியாகி மறுநாள் லேசாகக் கழுத்துவலிக்கும்.
ஏ) தலைவலியா? தலைவலிக்குப் பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து பேசுவதால்-தண்ணீர் தேவையான அளவு பருகாததால்-இரவு தூக்கமின்மையால்-மழையில் நனைந்ததால்-வெயிலில் காய்ந்ததால்-கோபத்தால்-ஒலியால்-ஒளியால்-பயணத்தால்-இந்த மாதிரி எழுத்தைப் படித்ததால் என்று. எதனால் தலைவலி என்று யோசித்துப் பார்த்து விடை கிடைக்கும்போது தலைவலி போயிருக்கும்.
ஐ) தயிரால் செய்யப்படும் அவியல், மோர்க்குழம்பு, சேனைக் கிழங்கு எரிசேரி(தெரியாதவர்களுக்கு அப்றம் சொல்றேன்) போன்றவற்றிற்குத் தாளிக்கும்போது தேங்காய் எண்ணையை உபயோகிக்க கூடுதல் மணமும் குறைவாகத் திட்டும் கிடைக்கும்.
ஒ) தொண்டை கரகரப்பாக இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும். வயிற்றுச் சூட்டுக்கு வெந்தயம் உள்ளங்கையளவு வாயில் போட்டு மோருடன் விழுங்க நீண்ட நாட்களாக உபயோகிக்காமல் இருந்த இவ்விரண்டு அஞ்சறைப் பெட்டி (இது இப்போ இருக்கா?) சாமான்களும் காலியாகும்.
ஓ) சர்க்கரைக்கு எறும்பு வரும். அது அதோட உரிமை. அதில் நீங்கள் தலையிட விரும்பினால் ரெண்டு கிராம்பை சர்க்கரை டப்பாவில் போட்டுவைக்கவும். ஓஹோ இவங்களும் நமக்கு இது பிடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்களா என்ற கடுப்புடன் பக்கத்திலிருக்கும் கடலைமாவுக்கு தன் ரூட்டை மாற்றும். விட்டுடுங்க போயிட்டுப் போவுது.
ஔ) ஓ வரைக்கும் எழுதிட்டு ஔ எழுதாமப் போனா எப்படின்னு ஔ போட்டுட்டேன். ஆனா ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது மறதில. அதுக்குக் கூட வல்லாரைக்கீரை இருக்குல்ல அதக் கூட்டோ பொரியலோ பண்ணிச் சாப்பிட்டால் ஔ போட்டுவிட்டு என்ன எழுதுவது என்று மறக்காது.
இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.
ஒரு ஸ்வாரஸ்யத்துக்காக கொஞ்சம் வில்லங்கமா எழுதிட்டேன்.
ஆ)மட்டும் பொய். மூட்டுவலி குணமாகாது.
எல்லாமே உபயோகத்துக்குட்பட்டதுதான்.
நான் பயன்படுத்தி அனுபவித்த விஷயங்கள்தான்.
ட்ரை பண்ணுங்க நீங்களும்.
(படத்துக்கான விளக்கம்: அட்றா சக்க! எப்படில்லாம் படுத்தறாண்டா இந்த சுந்தர்ஜி என்று பக்கத்துவீட்டுத் தாத்தா மூக்கின் மேல் விரலை வைத்தபோது ஓடிப்போய் ரகசியமாக எடுத்தது.)
27 கருத்துகள்:
அட.. காமெடியிலும் கலக்கறீங்க.
எரிசேரி எனக்குப் பிடிச்சது. அப்படியே சாப்பிடுவேனாக்கும்.
அஞ்சறைப் பெட்டி எங்க வீட்டுலயும் இருக்கு.
( கவிதைகள் எழுதுபவர்களுக்கு) வருத்தமும் உண்டாகும்.
இந்த வரியில நீங்க நிக்கிறீங்க..
குறிப்புக்கு குறிப்புமாச்சு... சிரிப்புக்கு சிரிப்பும்...! செம மூடுல இருக்கீங்க போல... ஜமாய்ங்க ஜி!!
ஒம்படக் காட்டுலே மலதான்...நீபாட்டுக்குச் சிரிக்கறதவுட்டுப்புட்டு எல்லாத்தையும் சிரிக்கவுட்டே பாரு..அங்க தெரியறப்பா நீ ஒசரமா...அருமை சுந்தர்ஜி. என் அப்பாவின் (அவர் ஒரு பார்மஸிஸ்ட் ஆனால் தன்னை டாக்டராகக் கற்பனை செய்துகொண்டு கிட்டத்தட்ட 1952 களில் எழுதியதென நினைக்கிறேன். ஒரு கவிதை..
தலைவலி கண்டதென்று தவிக்கின்ற மனிதர்காள்
தயவுடன் மருந்தைக் கேளீர்
மலைதனில் பெருத்தத்தக்க கல்லைத் துர்க்கிவந்து தலைவலி
உள்ளபேர் தலையைத் தாங்கி
ஓங்கியே போட்டால் தலைவலி
தீர்ந்து சொல்லாமலே துர்ங்குவார்...
கிரயம் ரெண்டணா... (இது நகைச்சுவைக்கு மட்டுந்தேன்...)
அப்பாவின் வாசத்தோடு குறிப்பேட்டை எடுக்க வைத்த சுந்தர்ஜி...நன்றிகள் பல.
ஐயோ அது தாத்தாவா சுந்தர்ஜி ? உங்க படம் தான்னு தைரியமா சொல்லுங்களேன் .
உங்க சின்ன வயசு profile படத்திற்கும் இதற்கும் பார்த்த உடனே எவ்ளோ ஒற்றுமை தெரியுது?
இம்புட்டு அனுபவம் இல்லேன்னா இம்புட்டு எழுதுவீங்களா?
கொத்துமல்லி கூட்டு நிஜமா? புதிதாக இருக்கே
சுந்தர்ஜி! அற்புதமான குறிப்புகள். நகைச்சுவையை தாளித்துக் கொட்டி பறிமாறியிருக்கிறீர்கள் ! இப்பொழுது தான் நான் இது போன்ற ஒரு பதிவை என்னுடய "ஙொய்யாஞ்ஜி "கேரக்டர் பதிவதாய் எழுதி முடித்தேன்.. வாபஸ் வாங்கிக் கொள்வது சரி என்று தோன்றுகிறது. இல்லை டின்கரிங்க் செய்து வெளியிடனும்! ஒரு சந்தோஷம் உங்கள மாதிரி யோசிக்க முடியுதேன்னு தான்! மிகவும் ரசித்தேன்
இவ்வளவு லொள்ளு பிடிச்ச ஆளா நீங்க. நானும் சீரியசவே படிக்க ஆரம்பிச்சே .. அப்புறம் பார்த்த .. என்ன்ன்ன்... ன வில்லத்தனம் !...
ஹாய் ரிஷபன். நமக்கு பேஸே காமெடிதான். காலமும் தருணங்களும் உருகவைத்துவிடுகின்றன.உங்களின் முதல் வாசிப்புக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி ரிஷபன்.எதிராப்புல இருக்குற ஆர்.ஆர்.ஆர்.கிட்டயும் நம்மள கொஞ்சூண்டு ஞாபகப்படுத்துங்க.
க்ரெக்டா சொன்னீங்க நிலாமகள்.படு ஜாலி மூட்ல இருக்கேன். ஒரே மாதிரி சீரியஸாவே விஷயங்களப் பாத்துட்டு இருந்தா திடீர்னு திரும்பிப் பாத்தா 45 வயசாயிடுச்சு.எல்லா மேடைலயும் ஒரு ரவுண்ட் வரணும்னு தோணிடுச்சு.அதான்.ரொம்பத் தாங்கமுடியலன்ன ஸ்டாப் சொல்லிடுங்க.
ஹரணி திடீர்னு சூரக்கோட்டை கணேசனோட முதல் மரியாதை மாதிரி கொரல் கேட்டுதா.பார்றா நம்ம ஹரணியவே எப்பிடி இந்தக் குசும்பு மாத்திடுச்சுன்னு இருந்தது.
அதுக்கப்புறம் ஒங்க அப்பாவோட கவிதைக்கு முன்னாடி சரண்டருங்க.அதான் நீங்க இந்தப்போடு போடறீங்க.
ஹாய் பத்மா!செம மூட்ல இருக்கீங்களோ.அந்தத் தாத்தா நாந்தான்.சியாமளா கல்யாணத்துல நீங்க இருக்கற ஃபோட்டோ யூ ட்யூப்ல இருக்கு. எடுத்து விட்டுருவேன்.ரெடிதானா!
இப்ப சொல்லுங்க அந்த தாத்தா நாந்தானா? என்னோட ப்ரொஃபைல்ல இருக்குறது நான் கொழந்தையா இருக்கச்சே எடுத்த பாஸ்போர்ட் சைஸ் படமா?இது ரெண்டுக்கும் பதில் கெடைக்கலேன்னா சியாமளா கல்யாண .......
நெஜம்தான் பத்து.கொத்தமல்லிக்கூட்டு புதுசா இருக்கேன்னா அது இன்னிக்கு மார்க்கெட்ட்ல ஃப்ரெஷ்ஷா வாங்கி இன்னிக்கே சமைச்சது.அதான்.
ஙொய்யாஞ்ஜி பேரே அற்புதம் மோகன்ஜி.நீங்களும் எழுதுங்க.நாங்க படிச்சு இது மாதிரி ஒரு பின்னூட்டம் போடணுமில்ல.
தவிர ஒங்க பேர என்ஹெசெம் ரைட்டர் சாஃப்ட்வேர்ல டைப் பண்ணா மோகன்ஜியை மூக்கால கூப்பிடுறா மாதிரி மோகஞி இப்படி வருது. அது ஏன்? மோகன் அதுக்கப்புறம் ஒரு ஸ்பேஸ் விட்டு ஜி அடிச்சு ஸ்பேசை டிலீட் பண்ணினாத்தான் ஒழுங்காப் பேர் சொல்லுது. இந்த சேட்டை என்னோட கம்ப்யூட்டர்ல மட்டுந்தானா இல்ல எல்லா கம்ப்யூட்டர்லயுமான்னு தெரியலியேப்பா?
ஹா வேல்கண்ணன்.வடிவேலுவோட டைமிங்கோட கேட்டா மாதிரியிருக்கு. நான் நெஜமாவே ரொம்ப குசும்பான கேரெக்டர்.நானிருக்கிற இடத்துல கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது.ஆனா சமயத்துலே லூஸ் டாக்கால நீங்க சொன்ன வில்லத்தனமாவும் ஆயிருக்கு.
கிளம்பிட்டாங்கயா, கிளம்பிட்டாங்க. இப்பவே கண்ணக் கட்டுதே. இன்னும்...! அப்பறம் ஒரு ஆலோசனை. ஓடும் மூக்கு உள்ள போது நாமும் கூடவே ஓடி விட வேண்டும், இல்லையெனில் மூக்கை இழக்கும் பேரபாயமும் இருக்கிறது.. . :)
சார் வெகுநாட்களாக காத்திருந்து உங்க ஊருக்கு பஸ் இப்பதான் கிடைத்தது வந்துவிட்டேன்.......
அ முதல் ஔ வரை அசத்திவிட்டீர்கள்
ஆ வில் தவறில்லை என்று நினைக்கிறேன் ஆனால் வாயு பிடிப்பு நீங்கும் சரியா சார்
ஹாய் தினேஷ்!பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்ஸப் பிடிச்சிருக்கலாமே?பரவால்ல வாங்க வாங்க உள்ள முதல்ல.சுமையெல்லாம் இறக்கிவைங்க.கொஞ்சம் தண்ணி குடிங்க மொதல்ல.
பெருங்காயம் நிறைய சேர்த்துக்கொண்டால் எனக்குத் தெரிந்து வாயு பிடிக்குமோ சரியாகுமோ தெரியாது அதன் வியாபாரிக்குப் பிடிக்கும்.
பெருங்காயம் வாசனைக்காக மட்டுமே என்பது என் கட்சி.
அதுசரி தினேஷ்.உங்க கைல இருக்குறது மோஹன்தாஸா அல்லது தினேஷ்குமாரா?ராத்திரி தூக்கம் வராது சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.
சார் என் கையில் இருப்பவள் அண்ணன் மகள் அஞ்சநாதேவி
அப்பா பெயர் தான் மோகன்தாஸ்
எனக்கு இன்னும் மணமாகவில்லை சார்
குழந்தைகளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் சார் அதான் எங்க போனாலும் தூக்கிட்டு வந்துவிடுவேன்..........
இப்ப தனிமையில் தான் இருக்கேன் சார் அரபு நாட்டில்
சார் நம்ம பக்கம் எப்ப வருவீங்க சார் உங்க விமர்சனத்திற்காக தினம் தினம் ஏமாறும் என் வரிகள் வாங்க சார்
http://marumlogam.blogspot.com
ம்ம்.பாத்தா படு சாதுவா இருக்கு ஒங்க எழுத்து.நீங்களும் நம்ம ஜாதிதான்.குடுக்கற ஆலோசனையப் பாருடா.நன்றி சைக்கிள்.
தினேஷ்!நிம்மதியாத் தூங்கினேன்.
நம்ம ரெண்டு பேரும் தான் குழந்தைகளுக்குன்னு வாழறொம்- நேரு மாமாவுக்கு அப்புறம்.
அது சரி.எங்க போனாலும் கொழந்தைகளைத் தூக்கிட்டுவந்துருவேங்றீங்களே உங்கள சும்ம விட்றாங்களா?
ஒங்க ப்ளாக்குக்கு இன்னிக்கு வந்து பாக்கறேன்.
பை தினேஷ்.
என் மனைவியிடம் இதைப் படிக்கச் சொல்லலாமா.? கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மா இருக்குங்க. வாய்க்கு சுவை சேர்க்க நகைச்சுவையா..?GOOD..!
என்ன பாலு சார். பயப்படறீங்க. மேடத்தையும் தைர்யமா படிக்கச் சொல்லுங்க. ஒண்ணும் ஆய்டாது.படிக்க ஸ்வாரஸ்யமாயிருக்கட்டுமேன்னு கொஞ்சம் வில்லங்கம். அம்புடுதேன்.
என்ன சார்... உங்க மறுமொழிகளைப் படிக்க திரும்பத் திரும்ப பழைய பதிவுகளுக்கு வரவேண்டும் போலிருக்கே... சுவாரஸ்யம்!
அட...சுந்தர்ஜி....கை வைத்தியம் நிறைய வச்சிருக்கீங்கபோல.சிரிப்பு வைத்தியமும் கலந்தே தந்திருக்கீங்க.இது நீங்கதானா...!
கவிதை எழுதுறவங்களுக்கான
குறிப்பு உங்களுக்கும்தானே !
எங்க ஊர்ல ஒண்ணு சொல்லுவாங்க.
"சுகம் வரும்....
ஆனா ஆள் தப்பமாட்டார்"ன்னு !
சமையலுக்குத் தாளிப்பு மாதிரி என் மறுமொழின்னு வச்சுக்குங்களேன் நிலாமகள்.
எத்தனை தடவை நீங்க வந்தாலும் வாங்க வாங்கன்னு சொல்றதுக்கு நான் காத்துக்கிட்டிருப்பேன்.
நாந்தான் ஹேமா. வேற ஒரு வேஷங்கட்டியிருக்கேன்.
நீங்கதானே சொல்லுவீங்க இப்பிடியும் எழுதுங்க சுந்தர்ஜின்னு.அதான் இன்னுங் கொஞ்ச நாளைக்கு அலுப்புத் தட்ற வரைக்கும் இந்தக் குதிரைல ஒக்காரப் போறேன்.
எங்க ஊர்லயும் இதையே வேற மாதிரி சிவாஜி பாஷைல சொல்வோம்.
ஆபரேஷன் சக்ஸஸ். ஆனா பேஷன்ட் பூட்ட கேஸ்.
கருத்துரையிடுக