13.12.10

இது காற்றடைத்த பையடா.


ஸ்டோனத் தாண்டி வந்துட்டோம். வலிக்கு ஸ்டோன்தான் முதல்படியும் கடைசிப்படியும். அதாவது ஒரே படிதான்.

இந்த ஸ்டோன் நீங்க தினம் சாப்பிட்ற கீரையில, முட்டைக்கோஸ்ல, கன்னாபின்னா மினரல் வாட்டர்ல, சாக்லெட்ல, பால்ல இருந்து எடுக்கற க்ரீம்ல, பால்ல, வெயில்ல ஸ்டைலா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற எளநீர்ல இப்பிடி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். தேவையான அளவு தண்ணி குடிச்சாலும் அளவுக்கு அதிகமாக் குடிச்சாலும் ஸ்டோன் உருவாகலாம்.

அதுல இருக்கற கால்ஷியம் கொஞ்சம் கொஞ்சமா படிய ஆரம்பிச்சு மெதுவா சின்னக் கற்களா மாற ஆரம்பிச்சு சிறுநீர்ப் பையிலிருந்து அது வெளியேறும் துவாரம் வரை மெல்ல நகரும் போதோ அல்லது சிறுநீரை வெளியேற்ற விடாமல் தடுக்கத் துவங்கும்போதோ நரக வேதனை ரைட் அண்ட் லெஃப்ட் ஆரம்பிக்கும்.

வயத்தப் பிரட்டும் ஆனா வாந்தி வராது. தொண்டைல முடி மாட்டிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு இருக்கும். ஆனா அப்பிடி எதுவும் இருக்காது. ஒரே நேரத்துல உட்காரணும் போலவும் படுக்கணும் போலவும் நிக்கணும் போலவும் தோணும். சாப்பிடப் பிடிக்காது. ஆனா பசிக்கும். தூங்கணும் போல இருக்கும். ஆனாத் தூங்க முடியாது. சிறுநீர் கழிக்க விரும்புவீர்கள். ஆனால் கழிக்கும் போது படும் அவஸ்தைக்கு கழிக்காமலே இருக்கலாம் போலத் தோன்றும்.

சுருக்கமாச் சொன்னா யாரையோ காதலிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வுகள் கிட்டத்தட்ட ஏற்படும். படுக்கையில் படுத்து தூங்கியதாக பாவனை செய்து விட்டுக் காலையில் படுக்கையிலிருந்து எழ- கால் மணி நேரமோ அல்லது வலி தாங்கும் சக்தியைப் பொறுத்துக் கூடவோ நேரம் ஆகலாம்.

சட்டென்று நீங்கள் எழ முடியாமல் ஸ்லோ மோஷனில் முக்கி முனகி எழுவதைக் கவனிக்கும் விவரம் புரியாத ஒருவர் நீங்கள் புஜங்காசனத்திலிருந்து மயூராசனம் ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளப் படும் அபாயமும் இந்த ஸ்டோனில் இருக்கிறது.

கூட்டமாக ”இவ்வளவு அக்கிரமங்களுக்கும் காரணமான ஸ்டோனை ஒழிக்க வழியே இல்லையா?” ன்னு நீங்கள் ஆவேசமாகக் கர்ஜிப்பது எமது காதுகளைத் தொடுகிறது. பொறுமை. பொறுமை.

வைத்தியம் மற்றெல்லா முறைகளையும் விட ஒரு கீரையை மண்ணிலிருந்து பிடுங்கும் அளவு ஹோமியோபதியில் எளிதாக இருக்கிறது.

சரிதான். இப்பப் புரிஞ்சு போச்சு. சுந்தர்ஜியோட தாத்தாவோ அல்லது அப்பாவோ ஈயோட்டிக்கொண்டிருக்கும் ஒரு ஆதிகாலத்து ஹோமியோபதி டாக்டர் என்றும் சுந்தர்ஜியின் இடுகைகளைப் படித்து ஸ்டோனுக்காக எல்லோரையும் ட்ரீட்மெண்டுக்காக பாண்டிச்சேரிக்கு மடக்கிக் கொண்டு சென்று கடகடவென சம்பாதித்து விடவும் ஏற்பாடு நடக்கிறது என்று உங்களுக்குத் தோணலாம்.

ஒரு துண்டு குடுங்க. ஆங். இந்தோ தாண்டிட்டேங்க. சத்தியமா அப்பிடில்லாம் இல்லை.

என்னடா இவன் தொல்லை தாங்கலை. ரெண்டு நாளா ஸ்டோன் ஸ்டோன்னு இப்பிடி பயமுறுத்தறானே ஒருவேளை இவனே ஒரு ரகசிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸாகவோ முன்னாபாய் எம்பிபிஎஸ்ஸாகவோ அல்லது சங்கர்தாதா எம்பிபிஎஸ்ஸாகவோ இருக்கலாமோ? (எப்பிடி மூணு படத்தையும் புடிச்சுட்டேன் பாத்தீங்களா?)

யாருகிட்டயோ தன்னை டாக்டர்னு சொல்லி ஏமாத்தறத்துக்காகவோ அல்லது வேறேதோ ஒரு வெப் சைட்டிலிருந்தோ மேட்டரக் காப்பியடிச்சுக் கலக்கிக்கிட்டுருக்கான்னோ நீங்க அடுத்தபடியா நினைக்கலாம். மனுஷனுக்கு சந்தேகம்னு வந்துட்டா அது சுந்தர்ஜியப் பாக்குமா இல்ல பந்தர்ஜியப் (சிலரின் சந்தோஷத்துக்காக ஹிந்தியில் பந்தர் என்றால் குரங்கு) பாக்குமா?

சரி. நேரே மேட்டருக்கு வர்றேன். ஏங்க ஒரு ஜெயிலப் பத்தி போலீஸுக்கு மட்டும்தான் தெரியுமா?
யா. நான் ஒரு திருடன். சாரி. நான் ஒரு ஸ்டோனை அனுபவித்த ஒரு நோயாளி. அதுனால ஸ்டோனப் பத்தி எனக்கு வைத்தியம் பாத்த டாக்டர விட எனக்கு நல்லாவே தெரியும். அவர் என்னோட ஸ்கேன்ல கல்லைப் பாத்தாரு. ஆனா நான் கல்லோடய ஸ்கேனை பாத்தேன்.

முடிவா சொல்றேங்க. ஸ்டோனோட வலியை ஹோமியோபதில குணப்படுத்தற மாதிரி வேறெதுலயும் இத்தனை எளிமையா குணப்படுத்த முடியாதுங்க. ஒரு ஸ்கேன் ஒரு கோர்ஸ் மருந்து. செலவும் குறைவு. வலியும் மறைவு.

இங்க பாருங்க கையையும் காலையும் வீசி வீசி பாசமலர் சிவாஜி மாதிரி கைவீசம்மா கைவீசுன்னு எப்பிடி ஜம்முனு நடந்து போறேன் பாருங்களேன்.

ஸ்டோன் குணமான பின் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்க்க விரும்புபவர்களுக்காக மேலே பாசமலர் சிவாஜியின் படம். என்னுடையது டவுன்லோடாகவில்லை.

இன்னிக்குத் தப்பிச்சீங்க. பொழச்சிப் போங்க.

15 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஹோமியோபதியில் நல்ல மருந்துகள் உள்ளன. ஆனால் நல்ல ஹோமியோபதி டாக்டர் கிட்டவில்லையென்றால்.. அலோபதிக்குள்ள அத்தனை அவஸ்தைகளையும் பட வேண்டியிருக்கும். இங்கே ஒரு ஹோமியோபதி என்னை ‘எங்க வேலை’ என்று விசாரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை வரவழைத்துப் பார்த்துக் கொ..ண்..டே இருந்தார். ஏதோ பூச்சிக் கடி என்று அவரிடம் அரிப்புக்கு போனவன்.. அவர் அரித்தது தாங்காமல் சொந்த அரிப்பே தேவலை என்று வந்து விட்டேன். பாரசிடமல் பொடி செய்து ஜுரத்திற்குக் கொடுத்த ஹோமியோபதி டாக்டரை தடை செய்ததும் இந்த திருச்சியில்தான்.

ரிஷபன் சொன்னது…

நகைச்சுவை மிளிர உபாதையைச் சொன்ன கை வண்ணத்திற்கு மீண்டும் ஒரு சபாஷ்.

சுந்தர்ஜி சொன்னது…

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ரிஷபன்.

நல்லது கெட்டது எல்லாத்துலயும் இருக்கத்தான் செய்யுது.

ஆனா ஹோமியோபதி ஒரு உயர்ந்த- உடலைக் கோயிலாக அணுகுகின்ற- ஒரு முறை.

வசூல் ராஜாக்கள் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள்.தேர்வு நம் கையில்.

இருந்தாலும் சொந்த அனுபவம் தந்த பாடம் மறக்கக் கொஞ்ச நாளாகும்.

எனிவே நகைச்சுவையை ரசித்து ஒரு சபாஷ் போட்டமைக்கு ஒரு சிறப்பு நன்றி.

Harani சொன்னது…

ஹோமியோபதியின் அருமை உணர்ந்தவன் நான். சரியாக சொன்னீர்கள் சுந்தர்ஜி. எதிர்காலம் அலோபதிக்கல்ல என்பது தெளிவான உண்மை.

பத்மா சொன்னது…

சிவாஜிக்கு கொஞ்சம் உங்க ஜாடை இல்லை?
சரியான படம் சபாஷ்

santhanakrishnan சொன்னது…

இடையில் வந்த ஆங்கில
மருத்துவம்
பழம் பெரும் மருத்துவங்களை
மாற்று மருத்துவம்
என்று கட்டம் கட்டி
ஒதுக்குவது நம் தேசத்தில்
மட்டும்தான் சுந்தர்ஜி.

ஹேமா சொன்னது…

பந்தர்ஜி....ச்ச....அச்சுப்பிழை.(சொல்லுக்கு அர்த்தம் சொல்லாமலே இருந்திருக்கலாமெல்லோ !).

சுந்தர்ஜி....ரொம்ப அழகா சிவாஜி மாதிரியே இருக்கீங்க !

சுத்தியல் ஏதும் வச்சுக் கிச்சு அடிக்கலையே கல்லை.
தப்பிச்சீங்க.பாவம் கவிதையெல்லாம் எழுதுறீங்கன்னு விட்டு வச்சிருப்பாங்க.

உண்மைதான் சுந்தர்ஜி.நாங்கள் ஆங்கில வைத்தியம் தேட இங்கு வெளிநாட்டுக்காரர்கள் அக்குபஞ்சர்,
ஹோமியோபதின்னு...இந்தியாவுக்கு வந்துகூட வைத்தியம்பண்றாங்க இப்பல்லாம்.

காமராஜ் சொன்னது…

ஞாயிறு(12.12.10) இரவு நீயா நானாவில் மருத்துவர்,ஆராய்ச்சியாளர் திரு தெய்வநாயகம் அவர்களின் பேட்டி பார்த்தீர்களா.அருமை.சிக்குன் குனியா நம்ம இந்திய ஊழல்மாதிரி ஒழிக்கவே முடியாதுன்னாங்க.நெலவேம்பு கஷாயம் குடிக்காதவர்கள்.கொல்கத்தாவிலும் அந்த மாநிலத்தின் இன்ன பிற நகரங்களிலும் அலோபதி மருத்துவமும் மருந்துக்கடைகளும் ரொம்பக் கம்மி.திருமங்கலத்தில்தான் ஹோமியோபதி கல்லூரியும் இருக்கிறது.
நமக்கு ஊசி போடலையின்னா அது மருத்துவம் ஆகாது.

நிலாமகள் சொன்னது…

// ஒரே நேரத்துல உட்காரணும் போலவும் படுக்கணும் போலவும் நிக்கணும் போலவும் தோணும்.//

அனுபவ வீச்சு! அட.. நானும் ஹோமியோ பதாகையை உயர்த்திப் பிடிப்பவள்! ரொம்பச் சரியா சொன்னீங்க ... கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! நாம் தேர்ந்தெடுக்கும் நிபுணர், தேர்ந்தெடுக்கும் மருந்தில் இருக்கிறது சூட்சுமம்! என் பேவரைட் டாக்டர் உமா மகேஸ்வரி கூட தற்போது புதுச்சேரியில் தான் வசிக்கிறார்கள். குல தெய்வத்துக்கு அடுத்த இடத்தில் இருத்தியிருக்கிறேன் அவரை! ஹோமியோ நூல்களை வாசித்தால் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள் ஜி! ஹானிமனுக்குத் தலை வணங்க வேண்டும்! வெறும் அறிகுறிகளை வைத்து துல்லியமான கணிப்பில் நோய் வெல்லும் சாகசம்!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹரணி. கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஏற்ற மருத்துவம் ஹோமியோபதிதான்.

சுந்தர்ஜி சொன்னது…

பத்மா என்ன வில்லத்தனம்?

சிவாஜிக்குக் கீழ உசுர விட்டு பத்தி பத்தியா எழுதியிருக்கேன்.

அத விட்டுட்டு ஜாடையா பேசறீங்க.

நீங்களும் படம் போடுவீங்க. நாங்களும் எல்லா இடுகையிலும் பத்மா படம் சூப்பர், கடைசி வரீல முற்றுப் புள்ளி சபாஷ்ன்னு சொல்லுவோம்.

பாக்கலாம்.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன மது ஆஃபீஸ்ல எதும் ப்ரச்சனையா?

ரொம்ப சீரியஸா ஒரு கருத்து சொல்லித் தப்பிச்சுட்டீங்க?

ஒரு தடவ கூட சிரிக்கலையா?

சுந்தர்ஜி சொன்னது…

ஹேமா! வாங்க வாங்க.

இப்பிடி ஜாலியா இருக்கற ஹேமாவப் பாக்க சந்தோஷமா இருக்கு.

அடிக்கடி ஹேமாவுக்காக இந்த மாதிரி கடில்லாம் எழுதணும்னு தோணுது.

நமக்கு அக்கறைதான் பச்சை எப்பவுமே ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

99சதம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை காமராஜ்.

நம்ம பலம் என்னன்னு நமக்கே தெரியாது என்று சொல்வார் க.நா.சு. அதுதான் கதை.

கிழக்கிந்தியக் கும்பெனியினரின் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட கிழக்கிந்தியர்கள் மருத்துவத்தில் மட்டும் வீழவில்லை.

என் ஹோமியோ டாக்டரும் ஒரு வங்காளிதான்.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கு ஹனிமானையும் தேனான ஹோமியோவையும் அசப்பில் ஹனிமான் போலவே இருந்த ப்ரகாஷ்தான்.தொடர்கிறது.

நோயை உணராமலேயே வைத்தியம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் ஹோமியோவில்தான்.

இதே போல் நாம் தொலைத்த பல பொக்கிஷங்கள் ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் இருக்கின்றன.

இலக்கியம் செய்வதில் இல்லையா போலிகள்?

நாம் தட்டிப் பார்த்து தேங்காயையும் உரசிப் பார்த்துத் தங்கத்தையும் வாங்குபவர்கள்.

மருந்தை மட்டும் எதையும் பார்க்காமல் வாங்கினால் அப்படித்தான்.

ஹோமியோவின் அற்புதம் உணர்ந்தவர்கள் அதிகம் நோய்வாய்ப்படுவது இல்லை.

நன்றி நிலாமகள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...