”லேய் மக்கா. இந்தப் பின்னூட்டம்லாம் எனக்குப் போட வராதுலே. ஆனா நீ எழுதுனதுலியே இதாம் மாப்ள நச்சுனு இருக்கு. இன்னோண்ணு இது மாதிரி எழுதுலே”- ஜூடு இளங்கோ.
இவன் நக்கலடிக்கிறானா நெஜம் சொல்றானான்னு ஒரு முடிவுக்கு வரமுடீல. ஆனா பாவம் ஊரெல்லாம் சுத்திட்டு ஓஞ்சுபோய் வந்திருக்கானேன்னு ”கடைசிக் கடைசியா இது. இனிமேக் கிடையாது மக்கா”-நான்.
பொண்ணு பார்க்கக் கிளம்பும் இரு நண்பர்களின் கதையிது.
போடா பொழப்பத்தவனே ஓடிப்போய் வாங்கியாவொரு
சோடா புளிச்சேப்பம் தாங்காம ஜர்தா- பீடாவும்
ஒண்ணு அரைச்சு முழுங்கிட்டேன் என்னசெய்ய
பொண்ணு பாக்கப்போகணும் நான்.
வண்டி என்னாச்சு பாத்துட்டுவா பரமசிவம்
கிண்டிக்கு ரயில்ல தொத்திக்கிட்டுப் போயிருப்பேன்
சண்டிக் குதிரையா ஆயிடுச்சு ஏம்பொளப்பு
விண்விண்னு தெறிக்குதே தலை.
பைக்கு ரெடியண்ணா பளபளன்னு புதுசாட்டம்
கைக்கு வரவே மணிநாலாச்சு - மைக்கு
மண்டையன் கிட்ட விடாதேயினி சர்வீஸு
சண்டையான சண்டை போ.
ஏறி ஒக்காரு படுவெரசாப் பறந்திடலாம்
நாறிப்போச்சு ராகுகாலம் வந்திடுமோன்னு - சீறிப்
பாஞ்சேன் மதுரவீரன் எம்ஜியாரா ஹைவேல
மாஞ்சாவப் பாக்காம ஐயோ.
தலமேல இருந்த ஹெல்மெட்டுத் தரைமோத
மல போல வந்த சாவு கடுகாச்சு- கலகலத்து
ரத்த பூமில மறுபடியும் நாம் பொறந்திருக்கேன்
சத்தங்காட்டாமப் போ.
(பி.கு(1):அப்புறம் அவன் பொண்ணு பாக்கப் போனானா போவலியாலே என்றான் ஜூடு. நான் விடு ஜூட் என்று பறந்துவிட்டேன்.)
(பி.கு(2): இந்த பைக்தான் அண்ணனும் பரமசிவமும் ஓட்டியது. விபத்துக்கு முன் பெண் பார்க்க விரையும் முன் எடுத்த படம். அண்ணன் முகம் தெரியாத அளவு பேண்டேஜ். பரமசிவமும் சத்தங்காட்டாமல் போனதால் படம் கிடைக்கவில்லை.)
10 கருத்துகள்:
வித்யாசமாய் செய்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்..
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
பொண்ணு பாத்த கதை கவிதையா நல்லாத்தானிருக்கு.
சொந்த அனுபவமோ !
நடு நடுவில இப்பிடியும் எழுதுங்க சுந்தர்ஜி !
//இந்த பைக்தான் அண்ணனும் பரமசிவமும் ஓட்டியது. விபத்துக்கு முன் பெண் பார்க்க விரையும் முன் எடுத்த படம். அண்ணன் முகம் தெரியாத அளவு பேண்டேஜ். பரமசிவமும் சத்தங்காட்டாமல் போனதால் படம் கிடைக்கவில்லை.//
ஆக... பசு மாட்டை கொண்டாந்து தென்னை மரத்துல கட்டியாச்சு!
இன்னும் எத்தனை தினுசு நட்பு வட்டமிருக்கு ஜி? ஜுடு இளங்கோவுக்கு ஒரு ஜே...
நன்றி ஸ்ரீ ஆர்.ஆர்.ஆர். எல்லாம் ஒங்கள மாதிரிப் பெரியவங்க போட்ட ரூட்டுத்தானுங்கோவ்.
என்ன ஹேமு இப்பிடி அப்பாவியா இருக்கீங்க? சொந்த அனுபவத்த அப்பிடில்லாம் போட்டு ஒடச்சிடுவோமா?கற்பனைதானுங்கோ.
நீங்க அடிக்கடி உசுப்பிவிட்றதாலா நடுநடுல இல்ல. இனிமே அடிக்கடி இப்பிடி எழுதிக் கொல்லப்போறேன்.பாவம் நீங்க.
ரசிக்க ஒங்கள மாதிரி நாலுபேர் போதுங்க நிலாமகள்.
பாத்துகிட்டே இருங்க அட இதெல்லாம் சுந்தர்ஜியா எழுதறதுன்னு. அந்தத் தாத்தா மாதிரி ஆச்சர்யப்பட்டு படிக்கறதையே நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.
hilarious!
சிரிச்சீங்களா? சரி. அப்ப நன்றி சைக்கிள்.
பொண்ண எப்போ பாத்தாங்க ?
அதுக்கு ஒரு கவிதை வருமா? ஜிலுஜிலுன்னு முதல் பார்வை .....
அண்ணனுக்கு ஒடம்பு சரியாகி ஓடிப் போன பரமசிவமும் சீக்கிரம் வந்துடுவாங்கன்னுதான் எல்லாரும் பேசிக்கிறாங்க பத்மா.
சீக்கிரமாவே எளுதிடுவேன்னு நினைக்கிறேன்.
கருத்துரையிடுக