27.4.11

அஸ்தமன காலம்


















நீ

எனக்குச் செய்த
உபகாரங்கள்
எல்லாவற்றையும்

தொலைக்கடித்துவிட்டது
மறதி.

என்னைச் செலவழித்துச்
சேகரித்தவைகள் எல்லாம்

கையை விட்டுப்
போய்க்கொண்டிருக்கின்றன.

உதயமும் அஸ்தமனமும்
கடிகார முள்ளுக்குள்.

கோயில் மணியின்
நாதம் தரும்
அனுபவம்
இனி பயமே.

என்னை நீ பார்த்தாய்.

நீ காட்டிய கலக்கம்
என் நம்பிக்கையைத்
தளர்த்துகிறது.

காலம் கொடுத்த
பரிசாய்
இத்தனை நாளும்.

இனி என் கஷ்டம்
ஒவ்வொரு விடியலும்.

(மார்ச்-ஏப்ரல்,1988-கணையாழி.)

இநத இதழில் ந.முத்துசாமி நா.விச்வநாதன் நகுலன் விக்ரமாதித்யன் தஞ்சை ப்ரகாஷ் ஆகியோரின் படைப்புக்களோடு இந்தக் கவிதையும் வெளியாகி இருந்தது  என் பாக்கியம்.

இந்த இதழில் ப்ரகாஷ் மொழிபெயர்த்த ஜோஸஃப் ப்ராட்ஸ்கியின் குறுக்குவிசாரணை மொழிபெயர்ப்பு அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கையில் ஆஸ்ட்ரோமைலட்டிஸ் என்கிற கட்டியுடன் உருவெடுத்து எழுதமுடியாமல் சிகிச்சை எடுத்த போது மொழிபெயர்த்து வாயால் சொல்லச்சொல்ல நான் எழுதி கணையாழிக்கு அனுப்பி அது ப்ரசுரமானது.

ப்ரகாஷுக்கு அப்போது கிடைத்த அனுபவமும் த்ருப்தியும் பின்னால் கள்ளம் என்கிற நாவலை இதுபோலவே வாயால் சொல்லி நான் எழுத ஒரு புது முயற்சிக்குக் காரணமாக அமைந்தது. 

17 கருத்துகள்:

RVS சொன்னது…

ஜி! இதை நாங்கள் படிப்பதும் மலரும் நினைவுகளை நீங்கள் சொல்வதும் எங்கள் பாக்கியமே! ;-))

Ramani சொன்னது…

கோவில் மணி தரும் நாதம் இனி பயமே
ஆனாலும் அதைவிட்டாலும் வேறு நம்பிக்கைதரும்
ஒலி காணாத பருவத்தின் அவ நம்பிக்கையை
மிக அழகாக சொல்லிப்போகும் படைப்பு
தொடர வாழ்த்துக்களுடன்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தலைப்பு அஸ்தமன காலமாயிருப்பினும் அதில் பல விஷயங்கள்/எண்ணங்கள் உதயமாய்ப்புலப்படுகின்றன.

கணையாழில் பலபிரபலங்களுடன் கூட நம் 22 வயது வாலிபர் சுந்தர்ஜியும் என்பது மிகவும் பெருமையாக உள்ளது.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் சொன்னது…

வாழ்த்துகள்:)

Nagasubramanian சொன்னது…

nice

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

Really Superb !!!

ரிஷபன் சொன்னது…

எனக்கு இன்னமும் அந்த தைரியம் இல்லை.. என் கையால் எழுதினால்தான் ஒரு திருப்தி.. கண்ணதாசன் எப்போதும் சொல்ல பிறர் எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அழகான கவிதை.. அர்த்தமுள்ளதும் கூட

பத்மா சொன்னது…

என்னைச் செலவழித்துச்
சேகரித்தவைகள் எல்லாம்
கையை விட்டுப்
போய்க்கொண்டிருக்கின்றன.


ஆஹா இந்த வரியிலேயே நான் சிக்கிக்கொண்டேன் ..
ஒரு பெரிய கவிஞரின் அந்நாளைய அனுபவங்கள் கேட்க கேட்க திகட்டாது ..
நிறைய பகிருங்கள்

santhanakrishnan சொன்னது…

சுந்தர்ஜி.
கணையாழி திரும்ப வருகிறது.
மூப்பின் ரேகைகளை
பூதக் கண்ணாடியில்
பார்ப்பது போல் உங்கள் கவிதை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. கணையாழியில் வெளியான உங்கள் கவிதைகளை ஒவ்வொன்றாய் நீங்கள் பகிர, நாங்கள் படிக்க, ஒரு சுகானுபவம் ஜி! தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

அரசன் சொன்னது…

ரொம்ப ரசித்தேன் ...நன்றி

மாலதி சொன்னது…

//நீ
எனக்குச் செய்த
உபகாரங்கள்
எல்லாவற்றையும்
தொலைக்கடித்துவிட்டது
மறதி.//பருவத்தின் அவ நம்பிக்கையை
மிக அழகாக சொல்லிப்போகும் படைப்பு
தொடர வாழ்த்துக்களுடன்

VENKAT சொன்னது…

முதுமையின் கஷ்டங்களைப் பற்றி மனிதர்களின் யதார்த உணர்வுகளை ஒரு சில வார்தைகளிலேயே மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த அனைத்து துயர்களை சமாளிக்க சிலர் மேற்கொண்ட வழி துறவரமோ?
தாய்பதிவு வெளியாகி 13 வருடம் ஆகிவிட்டது. வழிகளையும் சொல்லுங்கள்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

உலகத்தினர் உணரவேண்டிய உணர்வை
முதுமையின் முற்றிய மூப்பை
உள்ளத்தில் உறையவைக்கும்
உன்னதமாய் உணரவைக்கும்
உயர் கவிதை .............
உண்மையின் விதை!

பாரதிக்குமார் சொன்னது…

கணையாழி மறுபடியும் வெளிவருகிறது சார். மீண்டும் உங்கள் கவிதைகள் இடம் பெரும் இதழ்களை நாங்கள் இனி பார்க்கலாம். கள்ளம் நாவல் பிரகாஷ் சொல்ல சொல்ல நீங்கள் எழுதியதா அற்புதமான தருணம் அதை பற்றிய அனுபவங்களை தொடராகவே எழுதலாமே சுகனில் ... எங்களுக்கும் புதிய அனுபவம் கிடைக்கும்

சிவகுமாரன் சொன்னது…

\\உதயமும் அஸ்தமனமும்
கடிகார முள்ளுக்குள்//

காலத்தையே உங்கள் கவிதைக்குள் அடக்கி விட்டீர்கள்.
கவிதையும் அதை எழுதிய பின்னணியும் படிக்க சுவாரசியம்.

G.M Balasubramaniam சொன்னது…

தன்னை உணரத் துவங்கி இருக்கும் ஒரு கவிஞ்ன் மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...