முடிந்த பின்னும்
துவங்குகிறது
ஒரு பயணம்.
பருகிய பின்னும்
தவிக்கிறது
தீராத தாகம்.
அணைந்த பின்னும்
எரிகிறது
மனதின் தீபம்.
அழிந்த பின்னும்
பிறக்கிறது
ஆரவார ஆக்கம்.
விழுந்த பின்னும்
வீறிட்டெழுகிறது
விடா முயற்சி.
கலைந்த பின்னும்
உருவாகிறது
காணா வேஷம்.
ஒழுகிய பின்னும்
நிரம்புகிறது
ஞானத்தின் குவளை.
வாடிய பின்னும்
மிஞ்சுகிறது
சூடிய வாசம்.
தொலைந்த பின்னும்
கிடைக்கிறது
கேளாப் புதையல்.
வெட்டிய பின்னும்
துளிர்க்கிறது
பசும் நம்பிக்கை.
பிரிந்த பின்னும்
இணைகிறது
இறவா உறவு.
மரித்த பின்னும்
வாழ்கிறது
நீங்கா நினைவு.
11 கருத்துகள்:
ஆஹா, இந்தக்கவிதை வரிக்குவரி ஜோராயிருக்கு. ஒரு டஜன் சமாஜாரங்களை சரமாரியாக வெடித்து விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.
படித்தபின்னும் நீங்கா நினைவுகளுடன்
vgk
சுழற்சிதான் இயக்கத்தின் துவக்கம்.
இன்று, நேற்றாகி நாளையாவதும் அதுதானே.
:)
//
ஒழுகிய பின்னும்
நிரம்புகிறது
ஞானத்தின் குவளை.
//
ithu pidichurukku.
appuram sundarji nalama?
க்ளாஸ்:)
நீங்கள் கூறியனவற்றில் சில நிகழாமல் போகலாம். ஆனால் இறக்க இறக்க உயிர்கள் பிறப்பதும், வெட்ட வெட்ட செடிகள் துளிர்ப்பதும், இரவுக்குப்பின் விடியலும் மாறாமல் நிகழ்வது இயற்கை தரும் ஆச்சரியமல்லவா. நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் ஆக்கத்திற்கு வலு சேர்க்கும். பாராட்டுகள்
ஐயா அசத்துரீர்!
ஞானத்தில் குவளை... அற்புதத்திலும் அற்புதம்.
மரித்த பின்னும்.... மறக்க முடியா வரிகள்.
படித்த பின்னும் அகலாது
இந்தக் கவிதையின் நினைவுகள்...
ஹி..ஹி.. எனக்குத் தெரிந்த இருவரிக் கவிதை மேலே... ;-))
வாசித்து முடித்தபின்னும் சந்தம் தொடர்கிறது இன்னும் !
ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து எடுத்து பாதுகாத்துக்கொள்ளலாம். சாகாவரிகள்.படிக்கிற போது கொஞ்சம் கொஞ்சமல்ல ரெம்ப நேரம் வட்டமடிக்கிறது சிந்தனைகள்.அதுதான் எழுத்தின் வல்லமை. எங்காவது பயன்படுத்தி அசத்தலாம்.
To every end- there is a beginning attributed! It's all a part of the bigger Plan. this is what I was reminded of as I read the poetry... but it reminded me of something else also... Tagore...
There's a beautiful Tagore poem, rather close to my heart- that reads along the same line...
I read when in school in bengali, initially... i couldn't find the exact translation from google.. but this is how it goes-
"who will take charge of my work, said the setting sun
the whole world was as dumb as a painted picture... (the bengali words he had used here was- 'niruttar chobi'... Brilliant!)
there was a small mud lamp- that said
'o lord., whatever I can do- I shall do..."
Brilliant sir-ji!
மாதங்கி குறிப்பிடும் தாகூரின் கவிதைக்கு சற்றும் குறைவில்லா கவிதை இது சுந்தர்ஜி.
tremendous!
கருத்துரையிடுக