16.4.11

மூன்றாவது கண்



1.
அர்த்தங்களின்
வேர்களை
நான் பெரிதாகத்
தேடுகையில்

மொழியின்
கிளையிலிருந்து

நிசப்தம்
உதிர்ந்து கொண்டிருந்தது.

2.
உன்னுடைய ஒரு கண்ணும்
என்னுடைய ஒரு கண்ணும்
கொண்டதாய் இருந்தது

நம்பிக்கை
எனும் தலைப்பிட்ட
ஓவியத்தின் முகம்.

3.
தீட்டப்பட்ட அரிவாளின்
கூரில் உறங்குகிறது
குருதியைத் தவிர்க்கும்
நம்பிக்கை.

சிந்தப்பட்ட குருதியில்
காய்ந்திருக்கிறது
தவறிய நிதானத்தின்
பிசுபிசுப்பு.

20 கருத்துகள்:

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

நல்லாயிருக்கு... மூன்று கவிதைகளும்... வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

மிருணா சொன்னது…

கவித்துவம் செறிந்த முதல் கவிதைக்குப் பின் மற்றதை வாசிக்க இயலவில்லை. இடைவெளி விட்டு வாசித்தபின் இரண்டாவது கவிதை ஒரு பூங்கொத்தாய்.

Nagasubramanian சொன்னது…

//தீட்டப்பட்ட
அரிவாளின் கூரில்
உறங்குகிறது
கலவரத்தைத்
தவிர்க்கும்
நம்பிக்கை.
சிந்தப்பட்ட
குருதியில்
காய்ந்திருக்கிறது
தவறிய நிதானத்தின்
பிசுபிசுப்பு.//
பிரமாதம்

Ramani சொன்னது…

மூன்று கவிதைகளை மிகச் சரியாக
இணைக்கும்படியாகவும்
மூன்று கவிதைகளின் உள்ளடக்கத்தை
தன்னகத்தே அடக்கியபடியும்
அழகாய் அமைந்திருக்கிறது தலைப்பு
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல படைப்பு சுந்தர்ஜி! பகிர்வுக்கு நன்றி.

vasan சொன்னது…

1-ம‌வுன‌த்தில் ஆழ்ந்திருக்கும் வேரிட‌ம் கிட்டா அமைதி, சிறு காற்றிலே ச‌ல‌ச‌லக்கும் இலையிட‌ம்...ம்.

2-க‌ண்ணும் க‌ண்ணும் க‌ல‌ந்தால்.....

3-அறிவால் கூர் தீட்டியிருந்தால், பிசுபிசுப்பு இன்றி க‌ச‌க‌சப்புட‌ன் தீர்த்திருக்க‌லாமோ கலவரத்தை?

raji சொன்னது…

முதல் கவிதை மிக அருமை
இரண்டாவது நம்பிக்கை ஓவியம் நன்று
மூன்றாவது மனதை பாரமாக்குகிறது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரசிக்க கூடிய கவிதை...

மூன்றும் மூன்று மூன்று முத்துக்கள்...

G.M Balasubramaniam சொன்னது…

மூன்று முத்தான கவிதைகள் அழகாகவும் நன்றாகவும் வந்துள்ள்து சுந்தர்ஜி.உங்கள் பதிவுகளின் வேகம் பிரமிப்பூட்டுகிறது.எந்த சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கிறீர்கள்.?வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

என்னுடைய மிக அதிகமான மதிப்பெண்கள் இரண்டாவது கவிதைக்குத்தரப்படுகிறது.

2.
//உன்னுடைய ஒரு கண்ணும்
என்னுடைய ஒரு கண்ணும்
கொண்டதாய் இருந்தது நம்பிக்கை எனும் தலைப்பிட்ட ஓவியத்தின் முகம்.//

காரணம், எனக்கு ஓவியமும் காதல் காவியமும் எப்போதும் மனதுக்கு அதிக நம்பிக்கை தருவதாக இருப்பதால்.

====================
1.
அர்த்தங்களின் வேர்களைத்தேடுவது எப்போதுமே கஷ்டம் தான். நமக்கு அர்த்தமாவது அடுத்தவருக்கு அனர்த்தமாகிவிடுவதும் உண்டு.
====================
3.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதையும் எதிலும் அவசரப்படேல் என்பதையும் சுட்டிக்காட்டும் மூன்றாவது கவிதை மிகவும் அருமை.

====================
பா ரா ட் டு க் க் ள்
====================

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

எப்படி ஸார் எழுதறீங்க..எல்லாமே சூப்பர்....

சிவகுமாரன் சொன்னது…

./தீட்டப்பட்ட
அரிவாளின் கூரில்
உறங்குகிறது
கலவரத்தைத்
தவிர்க்கும்
நம்பிக்கை.
சிந்தப்பட்ட
குருதியில்
காய்ந்திருக்கிறது
தவறிய நிதானத்தின்
பிசுபிசுப்பு.//

அருமை

போர்களும் , கலவரங்களும் நிதானம் தவறியதன் விளைவுகள். நினைத்துப் பார்த்து திருத்திக் கொள்ளக் கூட முடிவதில்லை .

ஹேமா சொன்னது…

மூன்றாவது கவிதை மனதைத் தொடுகிறது சுந்தர்ஜி !

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

மூன்றுமே மிக அருமை

ஹ ர ணி சொன்னது…

மனதில் அறைகிறது மூன்றாவது கவிதை.

வானம்பாடிகள் சொன்னது…

Hi Sundarji

வரிசைக்கிரமம் சரியாக அருமை:)

RVS சொன்னது…

ஜி! இந்தக் கத்துக்குட்டிக்கும் கொஞ்சம் கத்துக்கொடுங்களேன் இந்த மாதிரி எழுதுவதற்கு. அமர்க்களம். ;-))

மோகன்ஜி சொன்னது…

ராக்ஷசா!

இரசிகை சொன்னது…

3-me nantru.
aanaal......,3-vathu mikavum pidiththullathu.

padamum remba azhzhu.

appuram,
naan ungalai follow pannuren.:)

vaazhthukal sundarji

Matangi Mawley சொன்னது…

poetry no.1--- Brilliant!!!

Enga thuppaandi sila samayangalil neelamaa pesuvaan... onnum puriyaathu... karpanai kuthiraiyai thatti vittu pathil thedikkondiruppom... aanaa--- avan mozhi vilakkum karpanaikalum nammidam illai....

amazing thought, sir!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...