பகடைக்காய்களின்
குலுங்கிக்கொண்டிருக்கும்
பக்கங்களில்-
நாணயங்களின்
முடிவில்லா
சுழற்சியில்-
குதிரைகளின்
கால்களுக்கு
இடைப்பட்ட
தொலைவுகளில்-
நோக்கி எறியப்படும்
அம்புகளுக்கும்
இடையே-
கவிழ்ந்திருக்கும்
மூன்று சீட்டுக்களுக்கும்
நடுவே-
காத்திருக்கிறது
-கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்-
எனும் வாக்கியத்தில்
ஒளிந்திருக்கும்
திடுக்கிடல்.
7 கருத்துகள்:
கலந்து கொண்டால் வாய்ப்பு
முயற்சியின்றி காத்திருப்பு எதிர்பார்ப்பு
கிடைத்தால் அதிஷ்டம் என
மூன்றுக்குரிய தொடர்புகளை
அருமையாக நினைவுப்படுத்திப்போனது
உங்கள் பதிவு
சிந்தனையை தூண்டிப் போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ அவர்களுக்கு கிடைக்கும்...
பந்தயத்திற்கு சவாலான எழுத்துக்கள். அற்புதம் ஜி! ;-))
உங்கள் வரிகளை படிக்கையில் ஏனோ என் நினைவில் இப்படி ஒரு காட்சி வந்து தொலைக்கிறது சுந்தரண்ணே...
பிழைக்கலாம்
பிழைக்காமலும் போகலாம் எனும்
மருத்துவனிடம் இருந்து
கடவுள் நோக்கி திரும்பும்
கூப்பிய பிரார்த்தனை கரங்கள்.
அங்கும்
இருப்புக்கும், இன்மைக்கும் இடையில் இயங்கும்
அதே பந்தயம்,
அதே சாகசம் ,
அதே திடுக்கிடல்...
கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், திடுக்கிட வைக்கும் வரிகள், குதிரையின் வேகமான கால்கள் போலவே கிடைத்துவிட்டன, எங்களுக்கு.
பாராட்டுக்கள்
எப்போதும் வரும் உங்கள் கவிதைகளே ஒரு சாகசம்தான் சுந்தர்ஜி.எல்லாக் கவிதைகளையுமே வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.அப்படியே !
Antha thitukkital anupavaththukkaakavae vaazhkkaiyai tholaiththavarkal aeraalam. Athu ishtamaaka varuvathallavaa athirshtam.? Neerottam pola kavithai ezhuthukireerkal Suntharji.
எதிர்பார்ப்புகளும் திடுக்கிடலுமாய் வாழ்க்கை.
சுவாரசியமும் சோகமும் நிறைந்து காணப்படும் வாழ்வில் பந்தயக் குதிரைகளாய் நாம் .
சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை.
கருத்துரையிடுக