1.
பிழைத்துக் கிடந்தால்
பார்க்கலாம் என்றாள்
பாம்படப் பாட்டி.
தினமும் பிழைப்பதும்
தினமும் பார்ப்பதும்
அலுக்கும் வரை
தொடர்கிறது ஆண்டவா.
2.
போனால் போகட்டும்
என்றாள் அவள்.
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றாள் இவள்.
தொலைந்து போகட்டும்
என்றாள் அவள்.
பிழைத்துப் போகட்டும்
என்றாள் இவள்.
போவதை யாரும்
விரும்புவதில்லை.
இருப்பதை விரும்பாதது
போலக் காட்டிக்கொண்டாலும்.
3.
இருளில்
விரல்களைப்
பற்றிக்கொண்டு
இன்றைக்குப் பொழுது
போயிற்று.
நாளையப் பொழுது
நாராயணன் செயல்
என்றாள் பாட்டி
நேற்றும் இன்றும்.
நாளையில் கிடந்தேன்
நான்.
13 கருத்துகள்:
அருமை,
மிக அருமை,
மிகமிக அருமை.
பாம்படப்பாட்டிக்கு ஜே !
போனால் போகட்டும்
இருந்துவிட்டுப் போகட்டும்
தொலைந்து போகட்டும்
பிழைத்துப் போகட்டும் !
ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு சார்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
OLD IS GOLD !
முக்காலம் – பாம்படம் அணிந்த மூன்று பாட்டிகள் – கவிதையும் படமும் அழகு. கவிதையை விட பாட்டிகளின் முகங்கள் இன்னும் பல விஷயங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருப்பது போல தோன்றுகிறது எனக்கு சுந்தர்ஜி!
arumai jii :)
அட..அந்த மூன்று பேரையும் எங்கேயோ பார்த்தது போல இருக்கே.. நம்ம ஸ்னேஹா.. நமீதா..ஸ்ரேயா...
க்ராஃபிக்ஸ்ல கலக்கினதோ?
கவிதை அருமை!!
//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
அட..அந்த மூன்று பேரையும் எங்கேயோ பார்த்தது போல இருக்கே.. நம்ம ஸ்னேஹா.. நமீதா..ஸ்ரேயா...
க்ராஃபிக்ஸ்ல கலக்கினதோ?
கவிதை அருமை!!//
அன்புள்ள இராமமூர்த்தி சார், எனக்கு உடனே ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்சனும் போல உள்ளது. அந்த ஸ்நேகா, நமீதா, ஸ்ரேயா பாட்டிகளை அல்ல, உங்களை மட்டுமே !
உங்களின் நல்ல நகைச்சுவையான கற்பனையை நினைத்து, நானும் என் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
இராமமூர்த்தியா, கொக்கா !
//போவதை யாரும்
விரும்புவதில்லை.
இருப்பதை
விரும்பாதது
போலக்
காட்டிக்கொண்டாலும்//
exactly.itz true
பாட்டிகள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் சிலசமயங்களில் !
அருமை !!!
அவர்கள் வளர்த்து, எடுத்து சலித்தது, சந்தோசித்தது, சாதித்தது எத்தனையெத்தனையோ
அவர்களின் காது உட்பட.
இருக்கும்போது, இருப்பைப்பற்றி சிந்திப்போம். இறந்தபிறகு சிந்திக்க இருக்கமாட்டோம். இருப்பதும் போவதும் நம் கட்டுக்குள் இருந்தால்....கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது. “வந்தவரெல்லாம் தங்கி நின்றால் இந்த மண்ணில்.....”
எல்லாமும் வாழ்வின் எச்சங்கள்தான் சுந்தர்ஜி. பாட்டிகள் என்பதன் மறுபெயர் தோய்ந்த அனுபவங்கள்.அவர்களின் சொற்களில்தான் பாரம்பரியங்கள் பிழைத்துக் கிடக்கின்றன. இருப்பை இறுக்கியும்...
போவதை யாரும்
விரும்புவதில்லை.
இருப்பதை
விரும்பாதது
போலக்
காட்டிக்கொண்டாலும்...
அருமையான வரிகள் ..
yes ofcourse,
- Everybody wants to go to heaven, But nobody ready to die -
அருமையான வரிகள் ..ஆனால் முக்காலம் என்னும் தலைப்புதான் எட்டிபிடிக்க முடியாம/தெரியாம லேசா குழப்பு..
கருத்துரையிடுக