23.4.11

சுவடு



உறவும் உணவும்
பகிராது அழியும்.

நினைவும் நெருப்பும்
அழியாது வளரும்.

நிலவும் சிலையும்
வளராது தேயும்.

கல்வியும் நேர்மையும்
தேயாது வாழும்.

பகையும் பழியும்
வாழாது வீழும்.

அன்பும் துணிவும்
வீழாது வெல்லும்.

அகந்தையும் சூழ்ச்சியும்
வெல்லாது மாளும்.

பெயரும் புகழும்
மாளாது நீளும்.

11 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

சுந்தர்ஜியும் கவிதையும் எப்போதும் சுகம் தரும்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கொடுக்கப்பட்ட சுவடுகள் எட்டு.

முதலாவது அழியும் என்று முடிந்தாலும், பகிராது என்ற காரணம் கொடுக்கப்பட்டுள்ளது அருமை.

அதேபோல ஒற்றைபடை வரிகளான 3,5 & 7 தேயும், வீழும், மாளும் என்று எதிர்மறையாக முடிந்தாலும், அதற்கான காரணங்கள் வளராது, வாழாது, வெல்லாது என நல்ல அறிவுரைகளாக விளக்கப்பட்டுள்ளன.

இரட்டைப்படை வரிகளான 2,4,6 & 8
வளரும்,வாழும்,வெல்லும்,நீளும்
என்று நேர்மறையாக கொடுக்கப்பட்டிருப்பினும், அவற்றின் காரணங்கள் அழியாது, தேயாது, வீழாது, மாளாது என எதிர்மறையாக சொல்லியுள்ளது, இந்தக் கவிதையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

கவிஞர் சுந்தர்ஜி அவர்களின் பெயரும், புகழும் எப்போதும் மாளாது நீளும் என்பது உறுதி.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஜீ க்கு ஜே !! அன்புடன் vgk

G.M Balasubramaniam சொன்னது…

NILAVUM SIKAIYUM VALARAATHU, THAEYUM.? !? !

சுந்தர்ஜி சொன்னது…

அது சிகையல்ல சிலை. கவனக்குறைவு. திருத்திக்கொண்டுவிட்டேன் பாலு சார்.

நிலவு 15 நாளைக்குத் தேய்பிறைதானே?

கவிதைக்குப் பொய்யழகு(சமயங்களில்)

காமராஜ் சொன்னது…

அடடா அடடா எங்கிருந்து கிடைக்கின்றன சுந்தர்ஜீ ? இந்தவார்த்தைகள் ?

அருமையான எளிமையான அந்தாதி.

லயிக்க கிடைத்த இசை மாதிரி.

RVS சொன்னது…

டெம்ப்ளேட் அருமை. பின்னிப் பிணைந்த சங்கிலிகள்.... நெருங்கிய உறவுகள் போல....
சுவடுகளில் படமும் வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன. ஹாட்ஸ் ஆஃப் சுந்தர்ஜி!! ;-))

சிவகுமாரன் சொன்னது…

அடேங்கப்பா .. தமிழ் சொல்லாடல். ஒன்றிலிருந்து இன்னொன்று என்று.

பகிராது அழியும்.
அழியாது வளரும்.
வளராது தேயும்.
தேயாது வாழும்.
வாழாது வீழும்.
வீழாது வெல்லும்.
வெல்லாது மாளும்.
மாளாது நீளும்.

....அந்தாதி வகை கவிதை அருமையிலும் அருமை .

சிவகுமாரன் சொன்னது…

ஊழலும் ஆட்சியும்
நீளாது சாயும்.

வீரமும் நேர்மையும்
சாயாது நில்லும்

நேரமும் இளமையும்
நில்லாது ஓடும்.

ஹேமா சொன்னது…

உங்கள் எண்ணங்களும் எழுத்தும் இன்னும் தொடரும் !

Ramani சொன்னது…

கவிதையும் கற்பனையும்
என்னென்றும்
குறையாது வளர
வாழ்த்தும் வேண்டுதலும்

இரசிகை சொன்னது…

nallaayirukku.....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...