சுட்டும்
இந்த விரலுக்கு
முன் நிற்கிறேன்
கவிழாத
என் தலைகவிழ்த்து.
எனக்கும் தெரியும்
நாடகத்தின்
துவக்கத்தையும்
உச்சம் தொடும்
இறுதியையும்.
தண்டனையின்
முட்கிரீடத்தையும்
அவமானத்தின்
கொதிநிலையையும்.
நியாயத்தின்
இருபுறங்களையும்
கண்கட்டப்பட்ட
தேவதையின்
துலாக்கோலையும்.
புழுதிகள் கிளம்பாத-
சேறு தெளிக்காத-
எந்த விசாரணையும்
வேண்டாத கூண்டில்
நிற்கவே யாசிக்கிறேன்.
செய்த பிழைக்கான
வெளியே வீசப்பட்ட
மன்னிப்பும் மன்றாடலும்
எட்டாத உயரத்திலிருக்கும்
நீதிதேவதையின்
மடியில் தலைசாய்க்க
மிதித்தேற உதவட்டும்.
யாராலும் எழுதப்படாத
தீர்ப்பால்
முறிக்கப்படட்டும்
நான் செய்யாத
குற்றத்தின்
பொய்க்கிளைகள்.
12 கருத்துகள்:
ஒட்டு போட்டிங்களா ஜீ :)
எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்து சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிழைத்து செய்யாத தவறுகளுக்கும் சேர்த்துப் பழி சுமக்கும் பேச வழியற்ற விரும்பாதவனின் கவிதை ராம்ஸ்.
சுட்டு விரல் ஒருவேளை தேர்தலைச் சுட்டியிருக்கக்கூடும். தவறாய்ப் புரிந்துகொள்ளப்படாதிருக்க இந்த விளக்கம்.
நன்றி ராம்ஸ்.
நீதி தேவதையின் துலாக்கோலைவிட,நெஞ்சுக்குள் இருந்து கூக்குரலிடும் மனசாட்சியே செய்த தவற்றுக்கும் செய்யாத குற்றத்துக்கும் தக்கவாறு நீதி வழங்கும்.உள்ளக்கிளர்ச்சிகள் நன்றாகவே வெளிப்படுகின்றன. எல்லாமெ கற்பனையானால் ஒரு பெரிய “ஓ”
சுந்தர்ஜி.
ஆயிரம் சுட்டுவிரல்கள் சுட்டினாலும் அவற்றின் முன் தகிக்கும் சத்தியத்தின் சுடராய் நிற்போம்.
//எட்டாத உயரத்திலிருக்கும்
நீதிதேவதையின்
மடியில் தலைசாய்க்க
உதவட்டும்,
நான் செய்யாத
குற்றத்தின்
பொய்க்கிளைகள்//
ஆஹா, அருமையாக உள்ளது சார்.
பாராட்டுக்கள்
அருமையான கவிதை..
அற்புதம் ஜி! ;-)
தங்கள் பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்...
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_19.html
/செய்த பிழைக்கான
வெளியே வீசப்பட்ட
மன்னிப்பும் மன்றாடலும்
எட்டாத உயரத்திலிருக்கும்
நீதிதேவதையின்
மடியில் தலைசாய்க்க
மிதித்தேற உதவட்டும்./
Sper Sundarji...
சுட்டும் விரல்களைக் கண்டஞ்சினால்,
சுட்டும் விழிச்சுடரைக் கண்டடைய முடியாது.
அன்னாஜிக்கு 2004ல் இரண்டு லட்சத்தில் நடந்த
பாரட்டுவிழா செலவு.
அது ஊழலாம்.
மினிபஸ் கூரையில் ஐந்து கோடியுடன் சேர்த்து
ஐம்பது கோடி தேர்தலாணயத்தில் கிடக்கிறது.
இது தேர்தலாம், ஜனநாயகமாம்.
நல்லன கலைய, சுட்டும் விரல்களை....
இந்தச் சுட்டுவிரல் எத்தனை அப்பாவிகளின் இதயங்களை பதம் பார்த்திருக்கிறது. அடங்கமறுத்த அதிகாரிகளை பந்தாடியிருக்கிறது. அன்று அண்ணா நீட்டிய சுட்டுவிரல்... அதிகார வெறிக்கு சுழி போட்டது . அரசியல் நெறிக்கு குழி பறித்தது.
------ மதுரையிலிருந்து சிவகுமாரன்.
//
சுந்தர்ஜி said...
எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்து சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிழைத்து செய்யாத தவறுகளுக்கும் சேர்த்துப் பழி சுமக்கும் பேச வழியற்ற விரும்பாதவனின் கவிதை ராம்ஸ்.
//
ippadithaan purinthu konden....
அருமையான கவிதை
குற்றமற்ற கோவலனுக்காக
மதுரையை கொளுத்திய கண்ணகி
தன்னை எரித்து கொள்ள துவங்குவாள்
இவ்வரிகளை படிக்க நேர்ந்தால்.
கருத்துரையிடுக