20.4.11

இரு பக்கம்

















1.
முன் சக்கரம்
பின் சக்கரத்தை
இழுத்துச் செல்கிறது.

முன் சக்கரத்தின்
பின்னே
பின் சக்கரம்
ஓடுகிறது.

அல்லது

பின் சக்கரம்
முன் சக்கரத்தைத்
தள்ளுகிறது.

முன் சக்கரமும்
பின் சக்கரமும்
ஓடிக்
கொண்டிருக்கின்றன

அல்லது

நிற்கின்றன.

நான்
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவ்வளவுதான்.

2.
வென்றது நான்.
தோற்றது நீ
என்றான் சின்னவன்.

தோற்றது நீ.
விட்டுக் கொடுத்தேன்
நான் என்றான்
பெரியவன்.

சில ஆட்டங்களில்
மட்டும்

இப்படி
ஆகிவிடுகிறது

இருவருமே தோற்பதும்
இருவருமே வெல்வதும்.

12 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

last one is superb!!!

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, ஏனோ தெரிய்வில்லை, இந்தப்பதிவைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது இதுதான்."HEADS YOU WIN, TAILS I LOSE."

RVS சொன்னது…

இருவருமே வெல்லும் ஆட்டம் தெரியும். இருவருமே வென்று தோற்கும் ஆட்டம் இப்போது நீங்கள் எழுதித்தான் தெரியும் ஜி! ;-))

சிவகுமாரன் சொன்னது…

அன்பு மிகுதியாகும் போது தோல்வி கூட வெற்றியாய்த் தெரிகிறது.
விட்டுக் கொடுப்பதின் சுகம் அலாதியானது ( இப்படி சொல்லி மனதை தேத்திக் கொள்ள வேண்டியதுதான் ... வேற வழி ? )

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இருவருமே தோற்பதும்
இருவருமே வெல்வதும்.//
இருவருக்குள் இருக்கும் இறுக்கமான பாசம் பாராட்டுக்குரியது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஓடினால் மட்டும் முன்சக்கரமும் பின்சக்கரமும் ஒரே திசையை நோக்கி பயணிக்கின்றன.

நிற்கும்போது அவை ஓடத்தான் செய்கின்றன, ஆனால் இரண்டும் எதிர்எதிர் திசையை நோக்கி.
===========oOo===========
சிறியவனிடம் தோற்பதே பெரியவனுக்கு வெற்றி. பெரியவனை ஜெயிப்பதே சிறியவனுக்கு வெற்றி. வாயால் சொல்லாமல் செயலால் காட்டுவதிலேயே இந்த உண்மை வெற்றியும் தோல்வியும் ஒளிந்துள்ளன.
===========oOo===========
இப்படி ஏதோ ஒரு பின்னூட்டம் கொடுத்ததும் எனக்கே ஒரு திருப்தி இல்லாமல், ஒரு பழைய சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
============oOo===========

நான் பணியாற்றும் காலத்தில், நிர்வாகத்தால் ஒரு சிறப்புச் சொற்பொழிவு கேட்க அனுப்பப்பட்டேன்.

INDUSTRIAL SAFETY என்பது பற்றி ஒருவர் 4 மணி நேரம் தொடர் சொற்பொழிவாற்றினார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் என் அருகில் அமர்ந்த சொற்பொழிவாளர், ”என் பேச்சு ஏதாவது தங்களுக்குப் புரிந்ததா?” என்று கேட்டார்.

நான் எனக்கே உள்ள நகைச்சுவை உணர்வுடன் “INDUSTRIAL SAFETY IS EQUAL TO NON-INDUSTRIAL UNSAFETY" என்று தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டேன், சார், என்றேன்.

அவரும் ஏதோ நான் அவரைப்பாராட்டுவதாக நினைத்து Thank you very much, Sir என்று சொல்லி கைகுலுக்கிவிட்டுச்சென்றார்.

ஹ ர ணி சொன்னது…

அப்படித்தான் தோற்றம் கொண்டு விடுகிறது. விதிப்படி பின்சக்கரம் இயக்கப்பட்டு முன்சக்கரமோடுகிறது. இரண்டின் ஓட்டத்திலும் சூத்ரதாரி யாரோ. பின்னால் மடங்கும் கால்களைக் கொண்டல்லவா முன்னால் பாய்கிறான் மனிதன் என்று மலையாளக் கவிஞர் குஞ்ஞஉண்ணி நாயரின் கவிதை நினைவுக்கு வருகிறது. ஒன்று இயங்க ஒன்று பார்க்கமுடியும். அல்லது இயக்கியபடியே போய்க்கொண்டிருக்கிறோம் பார்த்துக்கொண்டுதான்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. வை.கோ. அவர்களின் பின்னூட்டம் ரசிக்கத் தக்கது. :)

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...வண்டி ஒடுது அவ்ளோதான்.எப்பிடின்னு யோசிச்சாலும் ஓடிக்கிட்டேதான்.
விளையாட்டும் அப்பிடியேதான் !

vasan சொன்னது…

க‌ல‌வியிலும், ப‌த‌வி ப‌கிர்வ‌திலும் இரு சாராருக்கும் ஏற்ற‌ம் தான். இறக்க‌மில்லை, இர‌க்க‌முமில்லை.

இரசிகை சொன்னது…

vandik kavithai.....nallaayirukku

கமலேஷ் சொன்னது…

வாழ்வில் புழங்கும் இசையின் ஆரோகணம் மற்றும் அவரோகணம்...

மறுபக்கத்தின் அருமையான அட்டகாசமான சித்தரிப்பு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...