21.10.12

தொலைந்த செங்கல் - பாவ்லோ கோயெலோ - 6 -


ஒரு தடவை நானும், என் மனைவியும் பயணித்துக் கொண்டிருந்தபோது, என் காரியதரிசியிடமிருந்து ஒரு ஃபேக்ஸ் வந்தது.

“ சமையலறையைப் புதுப்பிக்கத் தேவையான ஒரு கண்ணாடி செங்கலைக் காணவில்லை. ஏற்கெனவே வரையப்பட்ட வரைபடத்துடன், இதைச் சரிக்கட்ட  பொறியாளர் வரைந்து தந்த இன்னொரு மாற்று வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தாள்.

ஒரு புறம், காற்றோட்டத்தையும், செங்கற்களின் வடிவ அழகையும் ப்ரதானமாகக் கொண்டு என் மனைவி வடிவமைத்த திட்டம்; மற்றொரு புறம், காணாமல் போன ஒரு செங்கல்லால் உண்டான சிக்கலை மட்டும் மனதில் கொண்டு அழகுணர்ச்சியை அக்கு வேறு ஆணி வேறாக விசிறியடித்து ஜிக்-ஸா புதிருக்கான சதுரங்களைக் கொண்டதைப் போல் வரையப்பட்ட திட்டம்.

“ இன்னொரு செங்கல் வாங்கிக் கொள்” என்று பதிலெழுதினாள் என் மனைவி. அப்படி வாங்கியதால், முதலில் போட்ட திட்டப்படியே வேலை தொடர்ந்தது.

அன்று மதியம், நடந்து முடிந்ததை எல்லாம் நெடுநேரம் சிந்தித்தபடி இருந்தேன்.

இதுபோல எத்தனை தடவைகள், இல்லாது போன ஒரு செங்கல்லுக்காக, நம் வாழ்வின் மூல வடிவத்தை முழுதுமாக நாம் சிதைத்திருக்கிறோம்?

1 கருத்து:

நிலாமகள் சொன்னது…

இறுதியிரு வ‌ரிக‌ள் ம‌ன‌த் த‌டாக‌த்தின் வெகு ஆழ‌த்தையும் துளைப்ப‌தாய்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...