இவை கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்னால் தினசரிகளில் வெளியான விளம்பரங்களின் உதாரணங்கள். அநேகமாக ஒரு மரத்தடியில் பெட்றோமக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் உடும்புத் தைலமும், சிட்டுக்குருவி லேகியமும் விற்றிருக்கிறார்கள்.
இவற்றில் சில முழுப் பக்க விளம்பரங்கள். ஒவ்வொரு விளம்பரமும், அதில் மக்களைக் கவர எழுதப்பட்ட வாசகங்களும் வேடிக்கையாய் இருக்கின்றன.
இவற்றில் சில முழுப் பக்க விளம்பரங்கள். ஒவ்வொரு விளம்பரமும், அதில் மக்களைக் கவர எழுதப்பட்ட வாசகங்களும் வேடிக்கையாய் இருக்கின்றன.
பொய்யின் கலப்பு அளவுக்கு அதிகமாய் இருந்தாலும், நிச்சயம் இத்தனை ஸ்வாரஸ்யமான விளம்பரங்கள் இப்போது வருவதில்லைதான். அத்தனையும் பொக்கிஷங்கள்.
விவேகபோதினியில் வெளிவந்திருந்த இந்த விளம்பரங்கள் பற்றி பாரதியார் தான் வாழ்ந்த சமகாலத்தில் என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. அதைப் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை.
ஆனால் இப்படியொரு பித்தலாட்ட வாசகங்கள் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் பார்த்த பின்புதான் “ ஐயோ! இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ ஆச்சர்யங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே”- என்ற அவரின் மிகப் ப்ரபலமான வரியை எழுதியிருப்பார் என நினைக்க வைக்கின்றன இவ் விளம்பரங்கள்.
இவை மோசமாய் எழுதப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ, மிக மோசமாய்ச் சிரிக்கவைக்கின்றன.ஆனால் இப்படியொரு பித்தலாட்ட வாசகங்கள் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் பார்த்த பின்புதான் “ ஐயோ! இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ ஆச்சர்யங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே”- என்ற அவரின் மிகப் ப்ரபலமான வரியை எழுதியிருப்பார் என நினைக்க வைக்கின்றன இவ் விளம்பரங்கள்.
கடந்த காலத்தின் விளம்பர வாசகங்களின் தொனியிலிருந்து நாம் வெகு தொலைவுக்கு வந்துவிட்டோமா, இல்லையா என்பதை 2140ல் வேறு யாராவது சொல்லட்டும்.
பின் குறிப்பு: விளம்பர வாஸகங்களிலே யாதொரு சந்தேகமுமிருந்தால் எம்மிடம் நிவர்த்தி பண்ணிக் கொள்ளத் தவறாதேயுங்கள். ஜவாபு கியாரண்டி.
3 கருத்துகள்:
நூறு வருடங்களுக்கு முன்பிருந்த பத்திரிக்கைத் தமிழைப் படிப்பதற்கு ஓர் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி அய்யா
நூறு வருடம் முந்தைய பத்திரிக்கை... அதில் வந்த விளம்பரங்கள்...
நிச்சயம் விளம்பரங்கள் சொல்ல வந்த விஷயங்கள் மெய்யோ, பொய்யோ, ஆனால் இவை பொக்கிஷங்கள்...
விளம்பர வாசகங்களிலிருந்து நாம் வெகு தூரம் வந்திருந்தாலும் , ஏமாறுபவனும் ஏமாற்றுபவனும் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இருப்பான் என்பது நன்கு புரிகிறது.
கருத்துரையிடுக