கடற்கரைச்சாலையின் பரபரப்புக்கு நடுவே
அலைகளை உற்றுப்பார்த்தபடி
காற்றில் காலுயர்த்திய குதிரையின் முதுகில்
கம்பீரமாய் அமர்ந்திருந்தாய்.
சரித்திரத்தின் அழிந்துபோன பக்கங்களில்
மசி நிரப்பப் படாத பேனாவால்
எழுதப்பட்டிருக்கிறது உன் சாகசங்கள்.
நடுநிசியில் கலவரத்தைத் தூண்டிய
உன் கட்டளைகள்
இதோ இந்தக் காற்றின் வளைவுகளில்
முணுமுணுப்பாய்க் கேட்கின்றன.
அடக்குமுறையை உடைத்தெறிந்து
முழக்கமிட்ட ஆவேசமிக்க உன் உரைகள்
காலத்தின் அரூப மேடைகளில்
கலகங்களைத் துவக்கி வைக்கின்றன.
மெதுவாய் உன்னருகே வந்து
அறியாத பறவைகளின் எச்சங்களை-
உடை மரத்து முட்களை-
எருக்கம்புதர்களைவிலக்கி
பிரமிப்புடன் உன் முகம் பார்க்க
பிறை போலக் கண்கள் மலர்ந்தாய்.
5 கருத்துகள்:
"காலத்தின்
அரூப மேடைகளில்
கலகங்களைத் துவக்கி வைக்கின்றன."...
Brilliant thought sir! Brilliant!
/சரித்திரத்தின்
அழிந்துபோன பக்கங்களில்
மசி நிரப்பப் படாத பேனாவால்
எழுதப்பட்டிருக்கிறது/
WOW...அதையும் வாசித்து கவிதையாக்கி விடுகிறான்
காலங்களை வென்ற கவிஞன்.
பிறை போலக்
கண்கள் மலர்ந்தாய்.
அடடா.. அள்ளிக் கொண்டு போன வரி.
உண்மைதான் சுந்தர்ஜி.ஒருவரது செய்கை அல்லது சாகஸம் அவரது சிலையோ புகைப்படமோ கண்டதும் மனதிற்குள் மெதுவாய் இரைகிறது.
ஆனால் ஒன்று....சிலை என்றால் பறவை எச்சம் என்பது இல்லாமல் இல்லை !
beutiful!
கருத்துரையிடுக